பாவிய‌ ‘பு’து  ‘வி’சை, ‘புவி’

பாவிய‌ ‘பு’து  ‘வி’சை, ‘புவி’

நீரடி பாரடி திணையடி துறையடி
    தேரடி நாளடி தளயடி மடிப்படி
போரடி நாடி ஆடி பாடி
   ‌ ஈரடி நாலடி பாடிடும் அறமடி.

அறம் அறிவுசார் கொள்ளும் கைத்தலம்(உள்ளங்கை)
      மறம் பண்பாட்டின்(பத்து பண்பாடுகள்) திறன் சேர்க்கை
       குறம்(குறி சொல்லுதல்) வஞ்சி குறவஞ்சி பாட்டு
     வறம்(வறட்சி) தளம் இலாமை சிறப்பு.

சிறப்பு மலர் சீரிய பணி
     பறந்து சென்று பற்றும் ஆய்வு
இறக்குமதி ஏற்றுமதி வணிக வாய்ப்பு
     ஏற இறங்கிச் செல்லும் புவியடி.

புவியடி நாளும் நிகழும் நிலையடி
     கவிதனில் மொழி பேசும் அணி
ஓவியம் ஒளி கால வகை
    பாவியப் ‘பு’து ‘வி’சை ‘ புவி.’

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA