AI – செயற்கை நுண்ணறிவு

AI:
செயற்கை நுண்ணறிவு! நயமுடனே நினைவகம்!!

செயற்கை நுண்ணறிவுச் சேர்க்கை, நுண்மொழி
நயமுடன் பகிரும் செயல், போக்குவரத்து
அயலகப் பேச்சும், படப்பிடிப்பும் அருகில்,
இயல்பு நிலையில் பன்னாட்டு பழக்கம்.

பழக்கம் உள்ள மனித குலம்
வழக்கம் போல் நிலையகக் கல்வியறிவு
ஆழ அகல கற்கும் வாய்ப்பு;
மழலையர் கல்வியறிவு தகுதி பெறும்.

பெறும் வரை நன்மொழி பன்மொழி
ஆறுதல் பெற்று நிலைத்தடம் ஆகும்;
ஊறும் உமிழ்நீர் சுரப்பி சுற்றும் ;
நறுமணம் தரும் வழிபாட்டு சிறப்பு.

சிறப்பு பெற்று கண்டவை நின்றவை
உறவு முறை கண்ட காட்சி
துறவு பூண்ட அறம் அறிமுகம்;
பறந்து சென்று பற்றியவை நினைவகம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA