குறள் -நமது குரல்
707.
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ? உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.
விளக்கம் :
முகம் விருப்பு வெறுப்புகளை தெரிவிக்கும் ;
முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ ?
நினைவகச் செயல் :
நினைவகத்தின் அறிகுறியை முகத்தில் தெரிந்து
கொள்ளலாம். அகம் காட்டும் கண்ணாடி முகம்.
நினைவகத்தில் தோன்றிய நல்கருத்துக்களை
செயல்படுத்தவே, மேதகு. அப்துல் கலாம் அவர்கள் நல்ல
கனவுகளை அகத்தில் ஏற்றி செயல்படுங்கள் என்று
அன்றாடம் வலியுறுத்தினார்.