தமிழ் கணக்கு 7 பட்டய கணக்கு

தமிழ் கணக்கு – 7

பட்டய கணக்கு :

பட்டடை கணக்கு என்பது பட்டய கணக்கு என  மொழிதனில் நிலைப்பட்டு உள்ளது.

பட்டடை பெயர் விளக்கம்:

செயல்பட்டு குறிக்கோளை அடைந்து தொடராக நிலைப்பது மனித நிலைப்பாடு என்போம்.

நிலைப்பாடு செயலுக்கு உண்டானவைகளை பற்றி கணிப்பில் உள்ள பதிவு பட்டடைவதை “பட்டடை கணக்கு” ஆகத் திகழ்கிறது.

இலக்கிய வரலாற்றுப் பதிவில் முதன்மை நிலையில் நின்ற  கருத்தூறும் சொல்,
நெறிமுறை பதிவில் உருவாக்கம் தொல்காப்பிய பாவினத்தில் காணலாம்.

உயிரும் மெய்யும் கலந்து குறுகிய ஒலியுடன் புணர்ச்சியில் நெறிபடுதல் , பட்டடை ஆக அறிவினில் பட்டவை தொடர் நிகழ்வில் சிறந்து விளங்குகிறது.

தொல்காப்பியம் 482
எழுத்து அதிகாரம்
குற்றியலுகரப்
புணரியல்

உயிரும் புள்ளியும் எனத் தொடங்கும் பா
நெறிபடுதல் ஆக

பட, படுதல்,
பட்டு அடைதல்
“பட்டடை”  என்ற சொல்லாகி நிலைக்கிறது.

தொல்காப்பியம்
பொருளதிகாரம்
989 அகத்திணையியல்

‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும்., ‘ எனத் தொடங்கும் பாடலில் மூலம் நாம்
உயர்திணை, அஃறிணைக்கு
அப்பால் பட்ட  “தகுதி:

த-ரம்,
கு-ணம்,
தி-றமை”

என பெற்று தொடர்கிறது.

என்றும் நிலைக்கும் நண்பர்கள், உறவினர்கள்  ஒவ்வொரு பருவத்திலும், அந்தந்த காலகட்டங்களில், பழகும் மொழியோடு பட்டதொரு குறியீடு ஆற்றல் மிகவும் வேண்டிய தேவையை நிறைவேற்றுவர்.

ஒன்று எனும் இலக்கின் முதலாய் நிலைக்கும் பொருட்களின் பெயரோடு , ஆவலோடு ஆற்றும் செயல்படும் நற்செயல்கள் தொடர்ந்து நற்பயன் கிட்டும்.

இல்லாத ஒரு பொருளின் தன்மை, உற்ற வேற்றுமை பற்றித் தொடர்ந்து நின்று நிறைவு பெறும் நிலையில் பற்றித் தொடர்வது 
” உற்பத்தி”
ஆகும்.

அவற்றை சேவை இலக்குகளின் அடிப்படையில் பற்றுதலுடன்  அடையும் கணிப்பு முறை “பட்டய கணக்கு” எனலாம்.

பட்டய கணக்கு வரலாறு:

1913 இல் இயற்றபட்ட இந்திய நிறுமச் சட்டம், முதல்முறையாக ஒரு நிறுமம் குறிப்பிட்ட கணக்கு ஏடுகளை எழுதி பராமரிக்க வேண்டும் என நிலை நிறுத்தியது.

மேலும் இந்த கணக்கு ஏடுகளை கணக்காய்வு செய்ய குறிப்பிட்ட தகுதி உடைய ஒருவரை  கணக்கு ஆய்வாளாராக பணியில் அமர்த்த வேண்டும் என்றது.

ஒருவர் கணக்காய்வாளராக பணியாற்ற மாகாண அரசிடம் இருந்து கட்டுப்பாடுக்குட்பட்ட சான்றிதழ் ஒன்றை பெற வேண்டும்.

1930 இல் கணக்காளர் பதிவேடு ஒன்றை அமைக்க இந்திய அரசு முடிவு செய்தது.

இந்த பதிவேட்டில் இடம் பெற்ற நபர்கள் பதிவுபெற்ற கணக்காளர் என்று அழைக்கபட்டனர்.

——
தமிழ் கணக்கு – 7

பட்டய கணக்கு

பற்றித் தொடரும் பற்றின் வடிவம்
      தொற்றித் தொடர்ந்து பற்றிக் கொள்ளும்
மற்றும் பல தொடர்பு வடிவமைப்பு
     கற்று பெற்ற கணக்கியல் பட்டயம்.

பட்டயக் கணக்கில் பற்றும் வரவும்
     நட்ட இலாப பத்திபத்தியாய் பதிவு
வட்டி விகித வரிக் கொள்கை
       பட்டியல் இட்டு இருப்புநிலை ஆய்வு.

ஆய்வுத் தேர்ச்சி நம்பிக்கை நாணயம்
     தேய்வுப் பகுதி மீட்பில் பொருள்
வாய்ப்பு மிகும் மகிழ்ச்சி பகிர்வு
       உய்ய உலவும் தென்றல் காற்று.

காற்று நீர் அகம் புறம்
       தேற்றும் மொழி பேசும் வழி
பற்றிய தகவல் பெறுவதில் இன்பம்
      ஏற்றத் தாழ்வு ஊறும் உயர்வே.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA