யாதும் ஊரே யாவரும் கேளீர்

கணியன் பூங்குன்றனாரின் அற்புத வரிகள்

யாதுமாகி நின்ற சொல்லை கீழ்க் கண்டவாறு பதிகிறேன் .

யாதுமாகி : கரந்துறையில்

யா – யாவும்
து – துணையாக

மா – மாந்தர்க்கு
கி – கிடைக்ககூடியவை .

பூவியில் இருக்கும் எல்லாம் இன்ப மயம் .

யாதும் ஊரே என்ற கணியன் பூங்குன்றனாரின்

புறநானூற்று வரிகளை மேலும் எளிய முறையில்

பதிகிறேன்.

ஒரே பதமாகிய பிரபஞ்சம் ஒன்றே .

அனைத்தும் நம் துணையே .

நன்மையும் தீமையும் நம்மிடையே கருதுவது ,

துன்பமும் இன்பமும் ஒரு சேரக் காண்பது ,

சாதலும் நம் உயிர்களுக்கு நிகழ்வது ,

வாழ்க்கையும் மகிழ்ச்சிகளுக்கு இடையே தான் உணர்வது ,

வானத்தில் பெய்கின்ற மழை நீராக பெருகி

உயிர்கள் பலவாகின்றது என்று அறிந்ததை கூறிபவர்களை

பெரியோர்கள் என அழைப்பதும் ,

எதையும் அறியாதவர்களை சிறியோர்கள்

என்று இகழ்வதும் சரியான முறை அல்ல .

மக்கள் யாவரும் எக்காலமும் கடைபிடிக்க வேண்டியவை செயல்கள்.

ஒரே பதமாகிய பிரபஞ்சம்

அனைத்து பொது நலக் கருத்துக்களை அக்குவேறாக, ஆணித்தரமாக விளக்கி

அலசி ஆராய்கிறோம். குழுக்களாக, இட வாரியாக, பிரிந்த நாம் வாழ்வு ஆதாரத்தை

நிலைத்துக் கொள்ளவே, சமய நல்லிணக்கங்களையும் நல்முறையில் சிறு வயது முதல்

அறிந்து ஏற்றுக் கொள்கிறோம். அனைத்து கோள்களின் இயக்கங்களும் யார் கட்டுப்பாட்டிலும்

இல்லை அறிந்து இருந்தும், நாம் முன்னோர்கள் வலியுறுத்துகின்ற கருத்துக்களை

பெரும்பாலும் கடைப் பிடிக்கிறோம்.

இந்தக் கருத்துக்கள் தான் சிறந்தது என்று இளம்பிராயத்தில் இருந்து ஏற்றுக் கொள்ளப்

பட்டபின், அவையே சிறந்தது எனப் பின்பற்றுகிறோம் . அந்தக் கருத்தில் உள்ள அடுத்த

அமைப்பினர் குறைபாடுகளை சுட்டிக் காட்டினாலும் தம் முன்னோர்கள் வழிபடுவது சிறந்தது ,

என நமது மூடப் பழக்கங்களையும் வழக்கமாகிக் கொள்கிறோம் .