சுதந்திரநாள் பாயிதழ் :

சுதந்திரநாள் பாயிதழ் :

சுதந்திரநாள் பாயிதழ் :

சுதந்திர மூலம் படரும் கொடி;
ஏதம் பிழைகள் காண்; சீரமை
பதம் ஓர் படிமலர்ச்சி படிவம்
கதம்ப மாலை கோரும் ஒற்றுமை.

ஒற்றுமை ஒற்றை பக்கம் கொண்டு
பற்றி கொள்ளும் தளத்தில் சுழல்;
வற்றாத மலர்கள் பூக்கும் நாளும்
நாற்றங்கால் நன்மை தரும் தொடர்ச்சி.

தொடர் ஆகும் பற்று வரவு
மடல் வழியில் மொழி பேசும்;
தடம் பதிக்கும் சேவை சேர்க்கும்
படம் பார்க்கும் வையகத் தலைமை.

தலைமை ஏற்று நடத்து நம்
வலைப் பின்னல் இயல்பு நிலை;
இலை தழை மணி விதைகள்
கலைகள் பொங்கும் பெருகும் சுழலாளாதாரம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA