விண்கல இணைப்பு
மண்டல வனப்பு
விண்கலப் பிணைப்பு ஆகாய இணைப்பு
தண்ணீர் தகவல் அறியும் சேவை
கண்ணும் கருத்தாய் அனுப்பும் நுட்பம்
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.
வாழும் சூழலுக்கு வெளிச்சம் அளிக்கும்
அழும் குழந்தை உள்ளம் மகிழும்
புழுதி, புயல், மழை, காற்று
பழுதில்லாது செல்லும் செயலுக்கு வழிகாட்டி.
வழிகாட்டி, படிக்க பழக்கம் வழக்கமாகும்
ஊழிக்காற்றறிய உள்ளூர் வணிக சேவைபெற
நாழிப் பொழுதிற்கும் என்றும் தேவை
இழுபறி நிலை இல்லா நிலைப்பு.
நிலை கள ஆய்வுச் செயல்
வலைப்பதிவு காட்சி தரும் வகை
கலைக் களஞ்சியம் நின்று நிலைக்கும்
இலைதழை உயர்வு உயிரணுவின் உயிர்ப்பு.