அ, ஆ, இ, ஈ அன்பின் நிலை

அ , ஆ, இ, உ, அன்பின் நிலை

அன்பு அரவணைக்கட்டுமே

ஆதாய அன்பு ஆதரவு அன்பாகட்டுமே

இனிய அன்பு இன்பம் பொங்கட்டுமே

ஈவு இரக்கம் உள்ள அன்பு ஈதல் பிணைப்பாகட்டுமே

உண்மை அன்பு உயிரொளி பாய்ச்சட்டுமே

ஊரெங்கும் அன்பு ஊட்டச் சத்தாகட்டுமே

என் உடம்பில் எங்கும் அன்பு பிரவாகமாகட்டுமே

ஏழாம் அறிவும் ஏற்றம் பெறட்டுமே

ஐயமின்றி அன்பு ஐம்பெருங்கண்டங்களிலும் பரவட்டுமே

ஒருவருக்கு ஒருவர் உள்ளத்திலும் அன்பு பெருகட்டுமே

ஓராயிர உறவுகளும் ஓராயாரமாயிரம் அன்பினை பெருக்கட்டுமே

ஔரேற்று அன்பில் ஔதாரியாமாக மலரட்டுமே.

அஃதே அன்பு நிலையாக ஒளிரட்டுமே.

கதை, காலத்தை கற்பனையில் நம் நிலையை விவரிக்கும் கண்ணாடி.

கதைகள் மூலம், நன்மையையும், தீமையையும்
நம் பழக்க வழக்கத்தினையும் நாட்டின் நிலைமையினையும் எந்த அளவுக்கு புரிந்து கொள்ள இயலும் ?

நம் உடம்பின் செல்களின் இயக்கத்தில் இருந்து,
இந்த ஒரு பதத்தில் நிலவும் இயற்கை நிலைகள் வரை
நடு நிலைமையில் தான் இயங்கக் கூடியவை.

உடம்பின் செல்கள், உயிர்களின் இயக்கம்.
உடம்பின் இயக்கத்தில், ஊக்கமுடன் செயல்படுவதே
செல்களின் இயக்கம். அதே போல ஒரு பதம் இயக்கமும், இயற்கையில் சுழலில் இயங்குவதே. எது நன்மை உண்டாகும், எது தீயவிளைவை உண்டாக்கும் என்பதை முடிவு செய்வது நம் அறிவும், உணர்வும் தான்.

காண்டா மிருகத்தையும், தமிழில் தொன்மா என்று
அழைக்கும் டைனோசர்களையும் மோதி எதிர்த்தா
மனித இனம் இன்றும் நிலைத்து இருக்கிறோம் என்று அறியும் காலம் எப்பொழுது ?

புயலும், இடியும், மின்னலும், மழையும் புவியின் சுழற்சியில் எல்லா நேரங்களிலும் நடைபெறும் செயல்கள் அல்ல.
கால சூழ்நிலையில் காற்றின் சுழற்சிக்கேற்ப மாறக்கூடியது.
இதமான சூரிய வெளிச்சம் கொண்ட பகலும், ஒய்வெடுக்க கருமை கொண்ட சூழலும் எப்பொழுதும் நம்மை உடலை இயக்கும் ஆற்றல்.
பேரண்ட சுழற்சியை அறிந்து கொண்டு, நாம் அடுத்தவர்களை வசை பாடுவதையும், துதிப்பதையும் என்றும் சொற்பொழிவாக கருத இயலாது.

அதே போல மனித இனத்திற்குள் போரும், சண்டையும், சிறு சிறு சச்சரவுகளும் எக்காலமும் நடைபெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
மக்களின் சட்ட உரிமை நிலைக்கப் பெற வேண்டும்.

அறிவும், உணர்வும் திறம்பட செயல்பட வைப்பதே
நம் உடல் உறுப்பின் செல்களின் வேலை. நம் உடல் செல்கள் இயக்கம் நின்றால், உடம்பு இயங்காது என்பதை எந்நிலையிலும் அறிந்து செயல்படுவோம்.

கதைகள் நம் கற்பனையின் கருத்து.

உயிர் எழுத்தில் தாலாட்டு

அன்னையின் அன்பு மொழியில்

அகவைத் தாலாட்டு.

ஆராரரோ! ஆராரரோ!!

ஆரிரரோ, ஆரிரரோ என

இன்பத்தமிழினில் உறுதிமிக்க

இயல்பான தாலாட்டு.

ஈடுபாட்டுடன் புவியில்

ஈதல் இசைபட வாழ்ந்து,

உன்னதமாய் உயிர்மெய் சிறக்க

உவப்புடன் கற்றிட,

ஊரெங்கும் புகழ் விளங்க

ஊருக்கும் நன்மை பெருகிட,

என் அறிவு தமிழ்க் கவியில்

எளிமையான பாராட்டு.

ஐந்திணையிலும்

ஐம்புலன்களின் துணையுடனும்

ஒரு பதத்தில் (பிரபஞ்சம்)

ஒற்றுமையுடன் வாழ,

ஓராயிரம் சிந்தனைகளும்

ஓராயிரம் நற்செயல் புரிய

ஔவையின் வரிகளில்

ஔவியம் இன்றி நல்வழி நடப்போம்.

அஃதே நன்றென உரைப்பாய்.

மறுமொழி இடவும்