நாணயம் சுழல்      ஆதார நம்பிக்கை.

நாணயம் சுழல் ஆதார நம்பிக்கை.

அங்கத்தை அங்குலமாக ஆடியோடி காக்கும்
       பங்கீந்து பகிர்ந்து அளிக்கும் பாங்கு
அங்கும் இங்கும் ஓடியாடிய தசை;
      தங்கி வழங்கும் கடை ‘அங்காடி.’

அங்கம் ஆடும் கடைசி வரை
      பங்கு சந்தை, பழைய வரி
தங்களது வருமானம் தரும் மானம்
      சங்க கால நிலவரி தலைவரி.

தலைவரி ஆள்வரி நாணய வரிவகை
      கலை இலக்கியம் பண்பாடு வரலாறு
ஆலையியந்திரம்; கணினியெணினி, துணைக் கருவி
     வலைப் பக்கம், ஊராட்சி, உலகாட்சி
        நிலையாட்சி.

நிலைகொள்ளும் யாவும் நிலம் கொள்ளுமா?
    ஓலைச் சுவடிபதிவு அகராதி
இலைதழை உண்ட மெய் ஞானம்
      வலைப்பதிவு வரை சுழலாளாதார குடும்பம்.

குடும்ப நலம்,  நீதிமன்றம் அரசு நிறுமம்
      நடுங்க வைக்கும் போரிடமா மாநிலம்?
உடுப்பு உடுத்தி உண்டுவாழ கண்டம்
      துடுப்பு செலுத்தி கடக்கும் கடல்.

கடல்சார் வரலாறு கணிப்பில் பயணம்
      உடல்சார் உயர உயிர் திணையாய்
படல் மறைப்புதட்டி தூங்கும் காலமொன்று
      ஊடல் கூடல் நிகழ்வு வீடுபேறு.

வீடுபேறு, இறைவணக்கம், கல்வியறிவு பெற்றோர்
       நடுத்தர வர்க்க இனத் தொழிலே ;
ஏடு படிப்பறிவே சார்புத் திறன்
       நாடு நாளும் புதுப்புதுவிசையே புவி.

புவிக்கோளம் சுற்று முற்றுப் பார்வை
       ஏவிவிடும் ஏவுகணை  நாடித் துடிப்பு
தாவி தவழ்ந்த காப்பீடே அறிவியல்
     சாவிகொண்டு இயங்கும் மனமே வாய்ப்பு.

வாய்ப்பு வழங்கி இயங்கும் படிக்கட்டு
      தாய் தந்தையர் சேவை நிலையம்
ஆய்ந்து அறிந்து கொள்ளும் முறை
      பாய்ந்து செல்லும் இயக்கம்  பரவட்டும்.

பரவி விடும் அளவுகோல் குடியரசு
      புரவி கொண்ட வேகம் இயற்பியல்
தரவு மதிப்பு பெறும் வரையறை
     இரவு பகலும் அறிவுப் பரவல்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA