படி நிலை -நலம் தரும் இயற்கை இறைமை.

நலம் தரும் இயற்கை இறைமை.

இயல் அசை போட மனம்
பயிற்சி காணும் உள்ளத்தின் வகை
உயிர் மூச்சு நின்று விடுமென
வயல் வெளி அறிந்தோர் பயணமோ?

கல்லை கண்டு கற்ற குறியீடு
எல்லை வகுத்த நில மேம்பாடு
உலக வகுப்பு சமயச் சமூகம்
நலம் தரும் இயற்கை இறைமை.

அற்ற நிலை அறியும் காலம்
உற்ற நட்புத் தரைத் தளம்
பெற்ற பொருள் யாவும் மாறுமென
கற்ற பலரில் உணர்வில் எங்கே?

இழப்பு இலக்கியத்தில் வரலாறு காணும்
பிழைப்பு தேடி வரும் அணுகல்
உழைப்பு வேதியியல் இயல்பின் இருப்பு
மழைநீர் உயிர் நீரிலும் உயிரற்றவையே.

அவை உயரிலா சில சமயமே
இவை இதென கலையிசை அறிவர்
சுவை மணம் உணவு உணர்வு
எவையெவை என்பது குறியீடு வகையே.

திரை கொண்டு உள்ளம் வகுக்கும்
நரை முடி வரவேற்று மகிழ்வோம்
உரை நாடி உரையாடல் பகுதி
கரை சேரும் வரை துடிக்கும்.

பறை சாற்றும் வழிபாடு மொழி
உறை வாழ்வும் வாக்கும் மனமும்
அறை அலையாய் கொண்டு செல்வோம்
நிறை வாழ்வு நிம்மதி தரும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA