ஊடிழை 2

ஊடிழை 2 (Inter Literariness)

ஊடிழை இயக்கவியல் இலக்கு முறை
நாடிழை நகரும் மெய் இயல்பு
ஆடிழைந்து ஊக்கம் தரும் சொல்
ஏடிலிழைந்து கணிப்பில் கணிக்கும் பழக்கம்.

பழக்கம் உள்ளவர் கவி பாடுவர்
கழகம் கூடி கட்டும் பணி
மழலையர் பேச்சிலும் தொடரும் பதிவு
ஆழம் கொண்ட உரையும் விளங்கும் .

விளங்கும் ஆர்வமிகு கதை கதைக்கும்
நளமிகு மொழி ஆற்றல் ஆதரவு
வளமிகு உரையிடை வழங்கும் வளரும்
தளமிகு மனமது நினைவு மலரும்.

மலரும் முகம் மேலும் சொல்லும்
அலகியல் அறிவுக் கூர்மை நிகழும்
நலமுடன் வாழ வளர் இளம் பருவம்
கலம்(உயிரணு) செல்லும் காலமே வாழ்வு.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA