கருப்பு ஒன்றே!
ஒற்றுமைக்கு சான்று!!
கருப்பு சாமி சான்றுகளின் மிடுக்கு
துருப்பு துலக்கும் கருத்து உணரும்
நெருப்பு தீ தீண்டும் சுடர்
உருப்படி வகை இலக்கினை அடையும்.
அடையும் இலக்கு நடைமுறை கிட்டும்
கடைமடை பகுதி குறியீடு எழுத்து
தடைகளை தாண்டி உருவாய் மலரும்
இடை யிடையே படையும் அமையும்.
அமையும் தன்மை கொண்டது நாடும்
இமைப் பொழுதும் பொறுப்பும் கடமையும்
தமையன் தங்கை அங்கம் வகிக்கும்
உமை எமை ஆளும் திறம்.
திறம் வாய்ப்பு வாழும் நாள்
நிறம் மாறும் வரை செல்லும்
அறம் பொருள் இன்பம் வீடு
துறவறம் ஒற்றுமை ஒருமை பாடே!
ஒருமைப்பாடு சேவை சேர்க்கும் வையகம்
கருமை நிறம் கடக்கும் சிறப்பு
இருமை நட்சத்திரம் முதல் செயலி
அருமை பெருமை பாலகப் பாதையே!