தேர்ந்த வைப்பகமே – தேவை;
சேர்ந்த வையகமே – சேவை.
மலை உள்ள நிலைத் தொடர்
அலை அலையாய் கடல் நீளம்
இலை தழை முளைக்கும் புவி
தலைமுறை தாங்கும் திறன் சிறப்பு.
சிறப்பு வரிசை வரையறை விளக்கும்
உறவு முறை கொள்ளும் வகை
பறந்து சென்று பற்றும் போற்றும்
ஆற அமர வைக்கும் இடம்.
இடம் பாலினத் தேர்வு மூலம்
உடம்படு மெய் ஞானம் பெறும்
கடந்த கால வரலாறு கூறும்
நடப்பு அமைவிடமாக தேடிய வீடு.
வீடு பேறுகள் கொண்ட ஊர்
நாடும் நகரமும் நகர்ந்த கோலம்.
ஆடு, மாடு சொத்தின் மதிப்பு
இடும் பழக்கப் பொறுப்பில் உண்டு.
உண்டு உயிர்த்து உற்று நோக்கு
பண்டு தொட்ட வையகப் பார்வைகொள்.
கண்டு புரியும் ஆற்றலே கல்வி
தொண்டு சேவை சேர்ப்பதே வையகம்.