இந்து தமிழ் திசை பத்திரிக்கை 04-12-2018 தலையங்கம் தலைப்பு விமர்சனம்:
புயல் நிவாரணமாக ஒரு லட்சம் வீடுகள்: ஆக்கபூர்வ அறிவிப்பு!
இயற்கை பேரிடர்கள் முதலில் பாதிக்கப்படுவது எங்கும் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்பவர்களே, அவர்களுக்கு வீடு கட்டித் தருவது மிகவும் பாரட்டத்தக்கது, நிரந்தரமான, தரமான குடியிருப்புகள், அவர்கள் வாழ்வின் குடியுரிமை. அத்துடன் நிரந்தர பொருளாதார, தொழில், சமூக மேம்மபாட்டிற்கு வழிவகை செய்வதை எந்த அரசும் கருத்தில் கொண்டு செயல்படுவது மிகவும் நல்லது. அரசு வேலை எப்பொழுதும் பாதி வேலையில் முற்றுப் புள்ளியாகிறது. பெரும்பாலான் அரசு வேலைகள் அவரவர்களின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு, அவர்களின் ஆட்சி நிலைப் பெறவில்லை எனில் அத்துடன் நின்று விடுகிறது. இந்த தலையங்கத்தில் சிறப்பாக குறிப்பிட்டது போல பல அரசு குடி இருப்பு கட்டுமான பணிகள் வரவு செலவுத் திட்டத்தில ஒதுக்கப்படாமல் அப்படியே நின்றுவிடுகிறது. அந்த பணியின் ஒப்பந்தக்காரர்களும், அப்பணியை நிறுவும் அரசு இயல்பாளர்களுக்கே இது மாதிரியான ஏழை மக்களின் திட்டங்களின் நிதி பயன்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை. நிரந்தரமாக, உருப்படியாக என்று பயன்படும் இது போன்ற அரசின் நலத் திட்டங்கள் ?
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.