இன்று இந்து தமிழ் திசையில் விமர்சனம்

04-12-2018
இந்து தமிழ் திசை, இன்றைய விமர்சன தலைப்பு
இணைய களம்: தேர்தல் கணக்குகளைப் பிரதானமாக்கி நடக்கும் விவாதங்கள் ஒழியட்டும்

தேர்தல், அரசை இயல்பாக, சிறப்பாக நிர்வகிக்க கூடிய ஓர் நிகழ்வு. அரசியல் கட்சிகள் தரமாக, பொதுவான அத்தியாவசிய தேவைகளை அடித்தட்டு மக்களில் இருந்து அனைவருக்கும், செவ்வனே வழங்க வேண்டிய அமைப்பாக இருக்க வேண்டும். எப்பொழுது அது மாதிரி அரசியல் கட்சிகள் உருவாகும் என்ற சூழ்நிலை இன்றும் தெரியவில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும், தன்னைச் சார்ந்த, தம் இனத்தைச் சார்ந்த, குலத்தை சார்ந்த , மனித வரலாறே அறியாத அரசியல் கட்சிகளாக உருவாகி, தமக்கு ஒத்து வரக்கூடிய அரசியல் கட்சிகளை கூட்டாக்கி, அரசை அமைத்துக் கொள்கிறார்க்ள். சமயமோ, இனமோ நற்பண்புகளை செயலாக்க கூடிய மனித கலாச்சாரத்தை உருவாக்கும் ஓர் நிலை. அரசு அமைக்க இதன் நற்பண்புகள் துணை புரிய வேண்டும். பல்வேறு பிரிவினை வாதம் கொண்ட அரசியல் கட்சிகளால் என்றும் நிலைத்த ஆட்சி அமைக்க இயலாது. எப்படியாவது சமய, இன, சாதீய முறைகளைக்கு ஏற்ப, மக்களைப் பிரித்து, ஆட்சி அமைப்பதே இவர்களின் நோக்கம். இன்றைய, நெடுநாளைய மக்களின் அடிப்படைத் தேவைகளை, திறம்பட நிர்வகிக்க கூடிய தளமாக இருத்தலே என்றும் மக்களுக்கு வேண்டிய நலமான அரசியல் கட்சிகளாக இருக்கும். அந்த அரசியல் தளம் அமைப்போம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA