கடுகு பெரிது பொடுகு சிறிது
வடுகு எனும் தெலுங்கு வழி
கிடுகு வழங்கும் குடி இருப்பு
முடுகு அசை வடுகர் வகை.
வகை படகுகள் முந்தி செல்லும்
அகை(தளிர்) மலர்ந்து கிளை பிரியும்
சிகை அழகு பிறவி முகடு(பயன்)
முகை அரும்பும் துளசி திருநிலை.
திருநிலை வளரும் தன்மை மிகும்
உருவம் நிறம் படிமம் ஐந்தும்
அருவம் தெரிவது அரிது அருமை
கரு அளவு கருவிகளின் உறுப்பு.
உறுப்புகள் தரும் திசு திசை
மறுப்பு(தடை) எதுவும் உருப்படி வித்திடும்
சறுக்கி எழுவதும் திசுவின் சுரம்(வழி)
நறுமணம் கமழும் சந்தன மரம்.
**இன்றைய எமது பதிவு:**
**கா எனும் சோலை காக்கும்**
**காவிரி ஆறு வளம் நிறைநாடும்**
**நாவினம் வியந்து பாட்டு பாடும்**
**பாவினப் பட்டினப்பாலை வியல்(அகன்ற) முற்றப்பாக்கம்(கடல்சூழ் நாடு).**
**முற்றப்பாக்கம் வெள்ளை உப்பு படகில்**
**ஏற்றி வல்வாய்(அகன்ற இடம்) புது வருவாய்**
**ஏற்று பல பண்டம் காத்து**
**பற்றிய உயர் கோட்டத்து படப்பை(தோட்டம்)**
**படர் சுற்றிய பொறி களம்**
**மடல் நிரை(திரள்) விரிமலர் தூண்டில்**
**இடம் பொருந்தும் வல் அணங்கு**
**இடவலம் கானல்(கடற்கரைச் சாலை) புணரி(கடல்) மலி(மிகுதி).**
**மலியுடைய பயணப் பகுதி குறியீடு**
**கலி(மகிழ்ச்சி) மணங்கூட்டும் வாலிணர்(வெண் கொத்து) வியன்தெரு**
**ஒலி ஒளிப் பரப்பும் வகையில்**
**பலிசிதறி பாகு(திறன்) தொகுத்த நல்லாசிரியரே .**