‘ இல சில ‘ பயணம் – கரந்துறை பா
இ(ன்மையிலிருந்த) ல(ட்சியம்)
சி(று) ல(ட்சிய) பயணம்.
இன்மையிலிருந்து லட்சிய சிதறல்கள்
வெடித்து சிதறல்களாகி வெளிச்சங்களுக்கான பயணம்.
சிதறல்கள் உருண்டு திரண்டு கோளங்களாகின
கோளங்கள் பாதைகளாகிய வெளிச்சத்தை சுற்றுகின்றன.
வெளிச்சம் வெட்ட வெளிச்சமாகி
தமது வட்டத்தை சுற்றுகின்றன.
வெளிச்சத்தின் வட்ட எல்லைக்குள்
பல கோளங்கள் சுழல்கின்றன.
கோளங்களும் தனக்குள்ளும் வட்டமிடுகின்றன
வட்டங்களும் வடிவம் பெற்று நேர எல்லைக்குள்
கடக்கின்றன.
நேர எல்லைகள் காலத்தை நிர்ணயித்து யாருக்கும்
காத்திருக்காமல் காலத்திற்குள் சுற்றுகின்றன.
கோளங்களுக்குள் ஓர் கோளம் பூமி, புவியின் மிடுக்கு.
புவியின் ரிங்காரம் மலைகளும், கடல்களும், காடுகளும், தட்டு தடுமாறும் தரைகளும்.
பூமியின் மிடுக்கில், ஊற்று நீர் சுனைகளாகி,
நீர் தனைப் பெருக்கி, பள்ளத்தை நோக்கிய பயணம்.
பூமியின் வட்டத்தில் கரு மேகங்களும் தோன்றும்
கரு மேகங்கள் மழைத்துளியாகி பூமியை நோக்கி காற்றின் விசையோடும் பயணம்.
மழை நீர் துளி பட்டு பிரகாசமளிக்கும்
புல் பூண்டு, தளிர் செடி கொடிகள் வளர் பருவத்தை
நோக்கிய பயணம்.
வனங்களும், காடுகளும் மலைகளும் மடுவுகளும்
தம் இருக்கையில் தளர்வில்லா செருக்குடன் பயணம்.
ஓரினம், ஈரினம், மூவினம், நான்கு, ஐந்து இனமென
ஆயிரமாயிரம் உயிர்களும் பூமிதனில் லட்சியத்தை நோக்கி ஆர்ப்பரிக்காத பயணம்.
ஆறறிவு உள்ளவன் நாம், அடங்கமாட்டோம்
நம் எல்லைகளை விரிக்க.
இன்மையில் உள்ள நம் லட்சியம் நியாயமான
உயிரினமாக நம் பயணம் சிற்சில லட்சிய எல்லைக்குள் பயணிக்கட்டுமே.