தந்தம் கொண்ட யானை தரணிக்கு சிறப்பு
பந்தம் உள்ள அகவை அண்டம் சுற்றும் அளவு
நன்று பற்றும் உறவும் நின்று நிலைக்கும்
என்றும் அறிந்து கொள்ள
முடியும் எனும் முனைப்பே.
கங்கை நதி நீர் நிலம்
மங்கை நீ வாழும் வாழ்வு
தங்கை தம்பித்துணை நம்பும் நலமே
எங்கும் எதிலும் வெற்றி தரும்.
கடக்கும் ஒவ்வொரு செல்லும் நொடியும்
கடந்து உள்ளே செல்லும் உள்ளமும்
நடந்து நிலைக்கும் மலர்ச்சி பருவம்
உடன்பாடு கொண்டே உறுதி பெறும்.
நல்வரவு இசைவில் நிறைவு காண்
இல்லம் இன்பம் மழலைக் குழந்தை
அல்ல பெரிய தொடரும் உயிரே
வல்லுநர் முனைவர் பட்டம் முனைந்த செயலே.
நிறைந்து பெருகும் வடிவ நிலையும்
உறைந்து ஊர்ந்து செல்லும் வழியும்
மறைந்து விடும் படத்தின் மூலமும்
இறைந்து வழங்கும் கொடை இயற்கை.