ஒரு பதமே, பூமியாக, புதிராக, நிலமாக பரவியதே.
ஓரு பதமே,
ஒ – ஒவ்வொரு
ரு – ருசிகர
ப – பருவ காலத்தின்
த – தன்மையும்
மே – மேன்மையடையும்,
பூமியாக
பூ – பூவுலகத்தில்
மி – மிஞ்சும்
யா – யாவும்
க – கடக்கும்
புதிராக
பு – புதுமையாக
தி – திக்கெட்டும்
ரா – ராஜ்ஜியமும்
க – கணமாக
நிலமாக
நி – நித்தமும்
ல – லட்சியத்துடன்
மா – மானிடர்களுக்கும்
க -கற்றலிலும்
உயிராக
உ – உடைமையுடன்
யி – (இ)யிந்தரமாகவும்
ரா – ராசியாகவும்
க – கடமையாகவும்
பரவியதே
ப – பல காலங்களாக
ர – ரசித்து
வி – வியக்க வைத்து
ய – யதார்த்த முறையில்
தே – தேர்ச்சி பெறும்.
2.கரந்துறை -புயலாக
புயலாக – கரந்துறையில்
பு – புரட்டும் காற்றாக
ய – யதார்த்தமாக
லா – லாவகமாக
க – கடக்கிறேன்.
புயலாக
————-
புரட்டும் காற்றாக புவி
எங்கும் சுழல்கிறேன்.
எங்கே என் திசை
என்று அறியாத பயணம்.
கரு மேகத்தையும்
கலைக்க வைக்கும்.
கடலும், நிலமும்
ஒன்றெனக் கடக்கிறேன்.
என் வேகத்தைக் கட்டுபடுத்த
என்னாலேயே முயல்கிறேன்.
தலைப்பாகை கட்டிக் கொண்டு
தரணி எங்கும் சுற்றுகிறேன்.
என் வட்டப் பாதையை
அடிக்கடி மாற்றிக்
கொள்கிறேன்.
என் தோற்றத்தையும்
மறைதலையும் மானிடர்களும்
காண முயல்கின்றனர்.
முயன்று கண்டுபிடிப்பது
அவர்கள் பணி.
தோன்றுகிறேன், சுழல்கிறேன்
மறைகிறேன்,
இது என் உருவாக்கம்.