மறைந்துப் போன பொருட்கள் – நெகிழ் வட்டு
(floppy disc)
‘ வாம்மா மின்னல் ‘ என்று நடிகர் வடிவேலு படத்தில் சொல்வார்.
ஒரு சில பொருட்கள் மின்னல் போல மறைந்து விடும்
சில பொருட்கள் நம் காலத்தில் தோன்றி
நம் இருக்கும் காலத்திலே மறைந்து விட்ட பொருள்கள் பல.
மின்னல் போல, பல மின்னணு சாதனங்கள் பயன்பட்டன. பயன்படுவதும் சில காலங்களே.
அடுத்த பொருள்கள் அதைவிட பயன்பாட்டுக்கு வந்தவுடன், பழைய பொருட்கள் மறைந்து விடும்.
கணினி பொருள்களில் சொல்ல வேண்டுமெனில், நெகிழ் வட்டு என்று தமிழில் கூறுவோம்.
நெகிழ் வட்டு, குறு வட்டு வந்தவுடன் மறைந்து விட்டது.
நெகிழ் தட்டு, வளையக்கூடியதும், காந்தவட்டாகவும், செவ்வக வடிவில் நெகிழியால்(plastic) மூடப்பட்டு இருக்கும்.
இதற்கு என்று கணினியில் ஒரு இயக்கி(drive) ஒன்று உள்ளது. இதை IBM நிறுவனத்தில் ஆலன் சுகார்ட் என்பவர் 1967ல் கண்டுபிடித்தார்.
இது 8 அங்குலமாக இருந்ததை 5.25 அங்குலமாக 1981ல் IBM தனிப்பட்ட கணினியாக பயன்படுத்தியது.
1.44 MB வடிவில் மிகப் பெரிய துண்டு உள்ளடக்கம் உடையதாக இருந்தது.
பல மத்திய அரசு அலுவலகங்களில் 1999-2005 வரை மிகுந்த பயன்பாட்டில் நெகிழ் வட்டு பயன் பட்டது.
அதை எடுத்துச் செல்வதற்கும் அதை உபயோகிப்பதற்கும் தனிப்பட்ட நிபுணத்துவம் பெற்றவர்களே பயன்படுத்த முடியும்.
தற்பொழுது நெகிழ் வடிவத் தட்டு மறைந்து விட்டது.
கணினியிலும் அதற்கென்று ஓர் இயக்கி பொருத்தப்படுவதில்லை.
அப்புறம் குறு வட்டு அதிக பயன்பாட்டில் இருந்தது. அப்பொழுது அதனுடைய வடிவம் வட்ட வடிவமாக இருக்கும். தற்பொழுது அதன் பயன்பாடும் குறைந்து விட்டது. அந்த சமயங்களில் கிடைப்பதும் மிகவும் கடினம்