செயல் மன்றம் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி
உரத்த சிந்தனை மாதாந்திரக் கூட்டத்தில் ‘ செயல் மன்றம் ‘
நூல் 20-10-2018 அன்று மாலை திருச்சி அருண்
ஹோட்டலில் வெளியிடப் பட்டது.
இக்கூட்டத்திறகு, கேத்தரின் ஆரோக்கியசாமி, அவர்கள்
இந்த நூலை வெளியிட, உரத்த சிந்தனை உதவி ஆசிரியரும்
நண்பருமான அப்துல் சலாம் அவர்கள் இந்த நூல் குறித்து
திறனாய்வு செய்தார்.
இந்நூல் குறித்து மறைந்த கரந்துறை சொல் நற்றிணை
போன்ற தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு கையாளப்பட்டது
என்றும், ஆங்கில மொழியில் ‘ ACROSTIC ‘ என
அழைக்கப்படுவது என்பது குறித்து எவ்வாறு பதிந்து
உள்ளார் என்றும் அறிமுகம் செய்து கொண்டு இருந்த
பொழுது, பாதியில், சலாம் அவர்கள் அனுமதியோடு,
ஆர்வத்தோடு திரு.கருணாகரன், பொதுப்பணித் துறை
பொறியாளர் இந்நூலை நான் சிறிது அறிமுகம் செய்கிறேன்
என பல ஆங்கிலச் சொற்களையும், பல தமிழ் கரந்துறை
சொற்களையும் விவரித்ததோடு, மேலும் இந்நூல் 5
கைவிரல்களையும் தமிழ் 5 வகையான தமிழ் இலக்கண
பிரிவோடு மேற்கோள் காட்டி எவ்வாறு சிறப்பாக
இருந்ததையும் கூறினார்.
அதற்கு முன்னர் எம்மை மேடையில் வந்து ‘ நான் இந்த
நூல் படித்து விட்டேன் ‘ மிகவும் சிறப்பாக உள்ளது.
அது வரையில் இந்த நூல் அனைவருக்கும் கடினமாக
இருக்குமே என்று எண்ணிய எமது எண்ணத்தை மாற்றிக்
கொண்டேன்.
இக்கூட்டத்தை தலைமை ஏற்று சிறப்பித்த எழுத்தாளர்
வை. தியாகராசன் அவர்களும், உரத்த சிந்தனை திருச்சி
மாவட்ட தலைவருமான நண்பர் சேது மாதவன் அவர்களும்
பாராட்டி, அந்த நூலில் எமது கையொப்பமும் வாங்கினர்.
சீரங்கன் என்ற எழுத்தாளர் எழுதிய சிறு கதை
களஞ்சியத்தை புலவர். தியாக சாந்தன் அவர்கள்
திறனாய்வு செய்தார். ‘ பிள்ளைகளின் கல்வியில்
பெற்றோர்கள் ‘, ‘ தாயுமானவர் ‘ போன்ற நூல்களும்
திறனாய்வு செய்தனர்.