செல்களின் தோற்றம் மாற்றம்
————-
அத்தனை ஆற்றல்களும் இருப்பதில் இருந்து தான்
உருவகமாகிறது.
உருவகம், ஒரு சில நானோ கதிர்களிலும் வடிவம் பெறலாம்.
தூசியாக இருப்பது கூட பற்பல எண்ணிக்கை உடைய எண்ணிக்கையற்ற ஆற்றல்கள்.
பூமியில், உயிரணுக்கள் தோன்றக்கூடிய வலிமை பெற்றதால், இங்கு புல்லாக, பூண்டாக, செடியாக, கொடியாக வளரக்கூடிய தன்மை பெற்றதால்,
இங்கு மற்ற உயிரணுக்களும் தோன்றக்கூடிய
வாயுப்பு ஏற்பட்டதால், மற்ற உயிரினங்களும்
தோன்றி அதனுடைய வீரியம் குறைந்து, உயிரணுக்கள் உயிரற்றவையாக, காற்றிலும், மற்ற
பொருட்களிலும் கலந்து விடுகின்றன.
மனித இனமும் உயிரணு செல்களில் தோன்றி மறையக்கூடியத் தன்மை பெற்றதால், மனித இனமும்
செல் வடிவங்களின் மாற்றத்திற்கேற்ப, ஓரு சில ஆற்றல்கள் பெற்று மறைகிறோம்.
ஆற்றல், தோன்றல்,புதுப்பித்தல், மறைதல் அந்தந்த உயிருள்ள,
செல்லும், உயிரற்ற பொருட்களின் வடிவமே.
இங்கு, உயர்வு, தாழ்வு என்பது பூமியின்
சூழற்சியை தவிர, வேறு எதிலும் காண்பது
கண்ணுக்கும் அழகல்ல. கற்று அறிந்தவர்களுக்கும்
அழகல்ல.
செல்களின் வேலை, செயல்களுக்கும், ஆற்றலுக்கும்
நிரந்தரம்.
செல்களுக்கு ஊக்கமளிப்போம்,
நற்செல்களை செயலாக்கப்படுத்துவோம்.