அறமும் தரமும் அற்ற ஆய்வுகள்
டிசம்பர் 12 2018
Discussion தினமணி
கல்லூரி படிப்பு கலை, தொழில் நுட்பம் ஆகியவற்றின் முழுமையான அறிவை தொடர் செயலாக நடைமுறை படுத்த வேண்டிய பயிலரஙகம். அங்கு, இந்த கட்டுரையாளர் குறிப்பிட்டு உள்ளது போல, கல்லூரி ஆசிரியப் பணி, ஆய்விலும், பயிற்றுவிப்பதிலும் முன்நிலை அடைய வேண்டும். ஆய்வுப் பணி கல்லூரி ஆசிரியர்களின் தொடர் வேட்கை. மாணவர்களுக்கு பயிற்றுவிப்பது ஆசிரியர்களுக்கான நடைமுறைப் பணி. கல்லூரி ஆய்வறிக்கை முறை, அந்தந்த துறைக்கான செயல்படுத்தக் கூடிய முறைகளை மேலும் செம்மைபடுத்துவதே சிறந்தது. தற்பொழுதைய ஆய்வாளர்களின் தகுதி முறையும், கல்லூரி முது நிலை ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் நெறிமுறைகள் காலத்துக்கு தக்கவாறு இருப்பதே மிகவும் சிறந்தது. சில கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆய்வும், பயிற்றுவிப்பதும் இயல்பாகவே அமைந்துவிடும். தனியார் பல்கலைக் கழகங்கள் ஆய்விற்கு ஒதுக்கும் தொகையும், அரசு பல்கலைக் கழகங்கள் ஆய்விற்கு பயன்படுத்தும் தொகையும் பாடங்களின் பயிற்றுவிப்புக்கு தகுந்தாற் போல அமைதல் மிகவும் சிறந்தது.