ஏமாற்றத்தில் முடியும் எழுச்சிகள்!
தினமணி 21-12 2018
கட்டுரையாளர் பழனிதுரை அவர்கள் தற்கால அரசியல் நடைமுறைப் போராட்டங்களை அலசி இருக்கிறார். எழுச்சி ஏற்படாமல் ஏற்றம் இல்லை, நாடறிந்த உண்மை.எழுமின், விழுமின் குறிக்கோள் நிறைவேறும் வரை கை விடாதே என்ற விவேகானந்தர் வாக்கும், போராட்டம் இல்லாமல் ஓர் சிறு அணு கூட முன்னேறாது என்ற சமூக சித்தாத்தங்களும், அரசியல் கட்சிகள் என்று வந்தவுடன் தமக்கு என்று ஒர் கொள்கை கோட்பாடுகள் வகுத்து அவரவர்கள் கட்சிகளின் விகிதாச்சாரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பொது நல அரசியல் கட்சிகள் என வருகிறவர்கள் தமக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றே அடித்தளம் போடுகின்றனர். நமது நாட்டின் இயற்கை வளம் வளர தாம் வகுத்த கொள்கைகளை காற்றில் பறக்க விடுகின்றனர். மக்களின் அரசியல் கட்சிகள் மக்களுக்கு முக்கியத்தவம் தர மறுத்து, ஆளும் ப்ண்புகளுக்கே முக்கியத்துவம் அளிப்பதே இது வரை நாம் கண்டறிந்த உண்மை. இயற்கை சூழ்நிலை தரங்களை அமைத்த கட்டமைப்பு, தம் முயற்சியுடன் பொது நல மேம்பாட்டிற்கான உத்தி, இன்றைய, வருங்கால நிலைகளை அறியும் பொது மக்களாக அறியும் தனமை, நாட்டின் ஒருமைபாட்டை நிலை நிறுத்தும் அமைப்பே இன்றைய தேவை.