கரந்துறையில்
திருக்குறள் – கடவுள் வாழ்த்து – 1-5
கரந்துறையில்
குறள் கருத்துச் செறிவு உடையது.
கருத்துக்கள் காலத்தைத் தழுவியது.
கரந்துறை, சொற்களின் பொருளை உள்ளடக்கியது.
குறளில், கடவுள் வாழ்த்து அதிகாரம்
இயற்கையில், இறைவனை போற்றுவது.
கரந்துறைச் சொல்லில், இயற்கையில்
இறைவனை வாழ்த்தக் கூடியச் சொற்களை
இந்தப் பதிவில் பொருந்தி உள்ளது. இது
தமிழ் மொழியின் சிறப்பினை அறிவோம்.
இயற்கையும், இறைவனும் ஒன்றென அறிவோம்.
முதலில் ஓன்று முதல் பத்து எண் வரை உள்ள கடவுள்
வாழ்த்து குறள், கரந்துறைச் சொற்களில் பதிந்து
உள்ளது
1. வாசி, ஒரு பதமே
—————-
வா-வாழ்வதும்
சி -சிந்திப்பதும்,
ஒ – ஒவ்வொருவரின்
ரு – ருசிகரத் தன்மையை
ப – பக்தியுடன்
த – தரணியில் பதத்துடன்
மே- மேம்பாட்டுடனும் செயல்படுவதேயாகும்.
மேற்கூறிய கரந்துறை பாக்களுக்குரிய விளக்கம்
வாழ்வது, உயிரின் செயல்.
சிந்திப்பது, மனித பரிமாணத்தின் வளர்ச்சி.
அவரவர்களின் வாழ்வு, ஒருமைபாட்டுடன் தரணியில் நிலைக்கும். ஒருமைபாட்டின் செயல் நம் கையை கும்பிட்டு வணங்குதலை குறிக்கும்.
மேம்பாட்டின் செயல், இயற்கைத் தன்மையுடனே வளரும்.
ஒரு பதம் என்பது பிரபஞ்சம் என
நாம் அறிவோம்.
அகர முதல எழுத்துஎல்லாம் ஆதி
பகவன் முதற்றை உலகு.
2. தெரிவது, அரிது! -கரந்துறையில்
தெ – தெளிவுடன்
ரி – ரிதமாக
வ – வருவதையுணர்ந்து
து – துணை புரிந்து செயலாற்றுவதுடன்,
அ – அறியாததையும்
ரி – ரிதமென ஒத்துக் கொண்டு
து – துதிப்போம்.
சொற்களை தெளிவுடன் கற்பதும்,
மற்றவர்களுக்கு புரியுமாறு உணர்த்துவதோடு,
தெரியாததை அறிந்து கொள்ள வேண்டும்
என துதிப்பதும் மிகச் சிறந்த பழக்கமாகும்.
2. கற்றதனால் ஆய பயன்என்கொல்? வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
3 . நிலமிசை மலராக
நி – நிதமும்
ல – லட்சியத்தை
மி- மிடுக்குடன்
சை – சைகையினையும் கொள்கையாக
ம – மரிசிதமாக (பொறுமை)
ல – லட்சணத்துடன்
ரா- ராஜ பக்தியை
க – கடைபிடிப்போமே.
தினமும் ஒருங்கிணைந்த உணர்வுடன், பொறுமையும் நிதானத்தையும் கடை பிடிப்பவர்கள், நிலத்தில்
நீண்ட காலம் வாழும் தகுதியை அடைவார்கள்.
3. மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
4. இல சில
இ – இல்லாமையிலிருந்து மலரும்
ல – லட்சியம்
சி – சிறப்பான
ல – லட்சியத்துடன் கூடிய வாழ்க்கை உருவாகும்.
விருப்பு வெறுப்பு இல்லாமல் இருக்கும்
லட்சியம் சிறப்பை அடையும்.
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
5. சேராது இரு
சே- சேர்ந்து
ரா – ராசியான
து- துணையுடன்
இ – இயற்கையை
ரு -ருசிப்போம்.
இயற்கை/இறைமைத் தன்மையை
அறிந்துணர்ந்தவர்கள் எல்லாச் செயல்களும்
ஒன்றென கருதுவார்கள்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
திருக்குறள் – கடவுள் வாழ்த்து -6-10
கரந்துறையில்
6. ஐவகை போகாதே
ஐ – ஐம்பொறிகளை
வ – வகையாக
கை – கையகப்படுத்தி
போ – போதுமென்று
கா – காத்து
தே – தேர்ச்சி கொள்.
ஐம்பொறிகள் ஒழுக்க நல் நிலையை
காக்கும் தேர்ச்சி மையம்.
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்ஒழக
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
7. அமைதி அரிது
அ – அன்பினை
மை – மையமாக வைத்து
தி – தினமும் வழிபடுவோர்
அ – அனைத்தும் வாழ்வில்
ரி – ரிதமாக
து – துன்பமின்றி அமையும்.
அன்பு நிலையில் நின்று வழிபடுபவர்களுக்கு
ரிதமாக வாழ்வு துன்பமின்றி அமையும்.
7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
8. அகமே சரி
அ – அறத்தை இடைவிடாது
க – கடைபிடித்து
மே – மேலான கடவுளே
ச- சகலமென வணங்குபவர்கள்
ரி – ரிதத்துடன் வாழ்வர்
அறத்தை கடைபிடித்து மேலான கடவுளே
சகலமும் என வணங்குபவர்கள் அமைதியுடன் வாழ்வா்.
8 . அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
9. ஐவகை இல
ஐ – ஐம்பொறிகளின்
வ – வகையறிந்து
கை – கைம்மாறு கருதாது
இ – இறைவனை/இயற்கையை வணங்குவதை
ல – லட்சியமாக கொள்வோம்.
நம் உடலின் ஐம்பொறிகளையும் ஒருங்கிணைத்து
வணங்குவதை லட்சியமாக கொள்வோம்.
9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
10. பெரியதாக இரு
பெ- பெற்றவை யாவையும்
ரி – ரிதமாக
ய – யவனியில்
தா – தாம் தம் செயல்களுடன்
க – கடமையாற்றி
இ – இயற்கை/இறைவனின் கரங்களில்
ரு – ருசிகரமாக வாழ்வோம்.
பெற்றவைகளுடன், யவனியில் தத்தம் கடமையோடு இயற்கையில்/இறைமையில் வாழ்வோம்.
10.பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.
வான் சிறப்பு திருக்குறள்- கரந்துறையில்
வானில் இருந்து பொழியும் மழை:
நமக்கு அமிழ்தமாக, இன்றியமையாத உணவு
உப பொருளாக, நல்வாழ்வு அமைந்திட பயன்படுகிறது.
புல் பூண்டுகளை நிலை பெறச் செய்து,
மற்ற உயிர்களையும் வாழ வைக்கிறது.
பூமியை வளம் கொழிக்கச் செய்கிறது.
தானம், தவம் ஆகியவற்றை நிலை பெறச் செய்கிறது.
உலகத்தையே அமைக்க உதவுகிறது.
11. அமுது அது
அ – அனைத்திற்கும் மழை
மு – முற்றிலுமாக
து – துணையாக அமைந்து
அ- அனைத்து உயிரையும்
து – துளிர் விடச் செய்யும்.
அனைத்து உயிர்களுக்கும் மழை நீர் அமிழ்து
என உணர்வோம்.
11. வான்நின்று உலகம் வழங்கி வருதலான்
தான்அமிழ்தம் என்றுணரல் பாற்று.
12. சமையலாக ஆகுக
ச – சகல உயிர்களுக்கும்
மை – மையமாக மழை
ய – யதாரத்தமாக
லா – லாவகமாக பெய்து
க – கடந்தெங்கும் சென்று
ஆ – ஆக்கமான உணவை
கு – குதூகலமாக சமைக்க
க – கருத்துடன் பயன்படுகிறது.
சகல உயிர்களுக்கும் மழை எங்கும் பெய்து உணவாக பயன்படுகிறது.
12.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
13
விரி நீராக
வி – விண்ணில் இருந்து
ரி – ரிங்காரமாக மழை உயிர்களின் பசியை போக்க
நீ – நீரின் துளியாக
ரா – ராஜ்ஜியமெங்கும்
க – கடல், நிலத்தில் பெய்கிறது.
விண்ணிலிருந்து மழை, நீராக அனைத்து
உயிர்களின் பசியைப் போக்குகிறது.
13.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.
14 –
விவசாயமே விரிவாக
வி -விளைபொருள்களில்
வ – வரும்
சா- சாகுபடி
ய – யதார்த்தமாக
மே -மேன்மையடையவும்
வி – விண்ணிலிருந்து
ரி – ரிங்காரமாக பெய்யும் மழை
வா – வாரி வழங்கச் செய்யும்
க – கருதுகோலாகும் விவசாயிகளுக்கு.
மழை, விளை பொருள்களில் மூலம் வளமாக்கி
விவசாயிகளை மேன்மையடையச் செய்யும்.
14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றி்க் கால்
15. பருவகால சாராக
ப – பலருக்கும் மழை
ரு- ருசுப்படுத்தி
வ -வருடக்கணக்கில்
கா -காத்து
ல – லயத்துடன் வாழவும் வைக்கும்
சா – சார்பின்றி மழை
ரா – ராஜ்ஜியம் எங்கும்
க – கடக்காமல் கெடுக்கவும் செய்யும்.
மழை, பெய்யும் இடத்தை காக்கும்; பெய்யாத இடம் வளம் குன்றி விடும்.
15
கொடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
16- வான் சிறப்பு – திருக்குறள் கரந்துறையில்
பசுமை உயர
ப – பசும்புல்லும் மழைத் துளியால்
சு – சூழல் அழகை மேம்படுத்தும்
மை – மையமாகவும்
உ – உயிரை
ய – யதார்த்தமாக வளர்க்கும்
ர – ரகத்திலும் பயன்பாட்டுக்குரியதாகிறது.
பசும்புல்லும் ஒர் அறிவு உயிராக
வளர்வதற்கு மழை பயன்படுகிறது.
16. விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே
பசும்புல் தலைகாண் பரிது.
17 வான்சிறப்பு – திருக்குறள் – கரந்துறையில்
மேகமாக ஆகி
மே – மேலே உள்ள
க – கருவானம்
மா – மாகாணத்தில் நிலமெங்கும்
க – கடலிலும் மழை பெய்தால்
ஆ – ஆக்கபூர்வமான வளம் எங்கும்
கி – கிட்டும்.
மேகம் நிலத்திலும், கடலிலும் மழை பெய்தால்
ஆக்கப்பூர்வமாக எங்கும் வளம் பெருகும்.
17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்.
18 வான்சிறப்பு -திருக்குறள்- கரந்துறையில்
தேவராகி வசி
தே – தேர்ந்தெடுத்து
வ – வரும் மழையை
ரா – ராஜ்ஜியமெங்கும்
கி – கிட்டுமாறு செயல்படுவது
வ – வசிக்கும் உயிர்களை
சி – சிறப்புடன் வளமாக்கும்.
பெய்யும் மழையை மண்ணில் சிறப்புடன் செயல்படுத்துவோம்.
18 – சிறப்போடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
19 வான் சிறப்பு – திருக்குறள்- கரந்துறையில்
உலகே தவமாக
உ-யிர்கள் அனைத்திற்கும்
ல-லகுவான மழை பெய்வது
கே-கேடு எதனையும் தராமல்
த-தரணியில் நற் பொருட்களை
வ-வழங்கி
மா-மாதவமாக
க – கருத்துள்ள வாழ்வு அமையும்.
மழை பெய்வதால் தானமும் தவத்துடன் உலகில்
உயிர்களை நிலைக்கச் செய்யும்.
19
தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.
20 வான் சிறப்பு- திருக்குறள் – கரந்துறையில்
உலகு அமையாது.
உ – உயரத்தில் உள்ள வானம்
ல – லகுவாக
கு – குறைவில்லாமல் மழைநீராக பொழிந்து
அ – அனைத்து இடத்திலும்
மை – மையமாகி
யா – யாவற்றுக்கும்
து – துணையாக அமையும்.
வானத்திலிருந்து மழைநீர் குறைவில்லாமல் மையமாக பொழிந்து அனைவருக்கும் துணை புரியும்.
20
நீர் இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு.
21 . நீத்தார் பெருமை – திருக்குறள் – கரந்துறையில்
21. பெருமை நூலாக
பெ – பெயர் சொல்லில்
ரு – ருசிபட வினைச் சொல்லுடன்
மை – மையமாக விளக்கி
நூ – நூலில்
லா- லாவகமாக அறிந்து கொள்வது
க – கடமையென நீத்தார் பதிவிடுவர்.
பெயர் சொல்லில் வினைச்சொல்லை நூலாக்கி பதிவதே நீத்தாரின் ஒழுக்கமாகும்.
21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
22-நீத்தார் பெருமை-திருக்குறள்-கரந்துறை
22.வையக பெருமை
வை -வையக துறவிகளின் பெருமையை
ய – யதார்த்தமாக
க – கணக்கிடுவது
பெ -பெரும்பாலோர்
ரு -ருசிபட வாழ்ந்து மறைந்தோரை
மை – மையமாக அளவிடாதது போன்றது.
துறவிகளின் பெருமையை கணக்கிடுவது பிறந்து
இறந்தோரை அளவிட இயலாதது போன்றது.
22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
23. நீத்தார் பெருமை – திருக்குறள் – கரந்துறையில்
இருமை உலகு
இ – இங்கு வாழும் துறவியர்கள்
ரு – ருசிகரமாக ஆராய்ந்து
மை -மையமாக இருந்து
உ- உண்மையை
ல-லயக்குமாறு உள்ள
கு-குணங்களோடு பாராட்டி மகிழ்வர்.
துறவியர்கள் நன்கு ஆராய்ந்து உண்மையிது
என உலகறிந்து பாராட்டுவார்.
23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
24
நீத்தார் பெருமை – திருக்குறள்- கரந்துறையில்
ஐவகை விதை
ஐ – ஐம்பொறிகளிலும் அறிவை
வ – வழிப்படுத்தி காத்து
கை – கையகப்படுத்தி
வி – வினையை உறுதியுடன்
தை – தைப்பவன் உயர்வினை வி்த்திடுவான்.
ஐம்புலன்களையும் அறிவுடன் காப்பவன் உறுதியோடு உயர்வாக விதைப்பவன் ஆவான்.
24
உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து.
நீத்தார் பெருமை – திருக்குறள் – கரந்துறையில்
25 .சமயமே சரியாக
ச – சகல ஆசையையும்
ம – மதியினால் ஐம்புலன்களையும் அடக்கி
ய – யதார்த்தமாக
மே – மேன்மைபடுத்துவதே
சரி – சரிவர
யா – யாவற்றையும்
க – கடந்து செல்லும் செயலாகும்.
ஐம்புலன்களின் ஆசையை அடக்கி வலிமையுடன்
யாவற்றையும் கடந்து செல்லுதலேயாகும்.
25
ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.
26
நீத்தார் பெருமை – திருக்குறள் – கரந்துறையில்
பெரியது அரிது
பெ – பெரிய
ரி – ரிதமான செயல்களையறிந்து
ய – யதார்த்தமாக
து – துணை நிற்பார், பெரியர்.
அ – அருமைக்குரிய
ரி – ரிங்காரமான செயல்களுக்கும்
து – துணை நிற்கமாட்டார், சிறியர்.
பெரிய செயல்களையறிந்து செய்வர் பெரியர்
உரியவற்றையும் செய்யார் சிறியர்
26
செயற்குஅரிய செய்யார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
நீத்தார் பெருமை – திருக்குறள் – கரந்துறையில்
27
ஓசை வகை
ஓ – ஓங்காரத்தின் ஒசை, ஓளி
சை – சைகையுடன் உணர்வு
வ – வரும் மணம்,சுவை ஐந்தையும்
கை – கையகப்படுத்தி ஆராய்ந்தறிவதே உலகு.
ஓசைஒளி, மணம், சுவையுணர்வு என ஐந்தையும் ஆராய்ந்து அறிவது உலகு.
27
சுவைஒளி ஊறுஒசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
28 நீத்தார் பெருமை – திருக்குறள் – கரந்துறையில்
28. பெருமை மிகு
பெ-பெயருடன் ஆற்றலையும்
ர – ருசிகரமான மொழியையும்
மை-மைய நிலையில் பயன்படுத்தியோர்
மி-மிகு நிலை பெற்றதை
கு-குறிச்சொல் மொழி காட்டிவிடும்
பெயரும் பேராற்றலும் நிறையாக பெற்ற
குணத்தை ஆக்கப்பூர்வமொழி காட்டும்.
28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
29 நீத்தார் பெருமை – திருக்குறள்- கரந்துறையில்
29. வெகு அரிது
வெ -வெகுண்டு எழும் சினம்
கு – குணமுடையோர்க்கு
அ – அதிலிருந்து கணநேரமும்
ரி – ரிதமாக காப்பாற்ற
து – துணை நிற்காது.
நற்குணமுடையோரின் வெகுண்டு எழும் சினம்
கணநேரமும் காத்துநிற்க துணைஇருக்காது.
29
குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
30. நீத்தார்பெருமை- திருக்குறள்-கரந்துறயில்
30
உயர கருது
உ-உலக நன்மைக்கு
ய-யதார்த்தமாக அறநிலை புரிவோர்
ர-ரகவாரியாக
க-கருணையுடன்
ரு-ருதுவாகவும்
து-துணை நிற்பர்.
உலக நன்மைக்கு கருணையுடன் எவ்வுயிர்க்கும் அறநெறியுடையோர் துணை நிற்பர்.
30
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்.
.
31. அறன்வலியுறுத்தல்-திருக்குறள் -கரந்துறையில்
31 . யாதுமாகி உயர
யா-யாவும்
து -துணையாக
மா-மாந்தர்க்கு
கி -கிடைக்க
உ-உயிர்க்கு சிறப்பான செல்வமும்
ய-யதார்த்தமாக
ர-ரசிக்கக்கூடிய அறமேயாகும்.
உயிர்க்கு யாவும் கிடைக்க அறத்துடன்
கூடிய செல்வமே சிறப்பாகும்.
31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு?
32. அறன் வலியுறுத்தல்-திருக்குறள்-கரந்துறையில்
32. பெரியவை யாது
பெ-பெயரின் பேறு
ரி-ரிங்காரத்துடன்
ய-யதார்த்தமாக
வை-வையகத்தில்
யா-யாவும் கிடைக்க
து-துணை செய்வது அறமே.
உயர்வான பெரும்பேறு அறத்தின் மூலம்
கிடைப்பதைவிட வேறு ஏதுமில்லை.
32
அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.
33. அறன் வலியுறுத்தல்-திருக்குறள்-கரந்துறையில்
33. செயலாக ஆகு
செ-செய்யும் செயல்
ய-யவனியில்
லா-லாவகமான சிந்தனையுடன்
க -கடமையுணர்ந்த
ஆ-ஆக்கப்பூர்வமான சொல்லுடன்
கு – குணம் வாய்ந்த செயல் அறமாகும்.
சிந்தனை, சொல், செயல் இடைவிடாத
அறத்துடன் கூடியசெயலே சிறப்பாகும்.
33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.
34.அறன் வலியுறுத்தல்-திருக்குறள்-கரந்துறையில்
34 . மாசு அதோ
மா- மாசற்ற மனமே
சு – சுத்தமான அறமாக
அ – அறிவார்ந்த செயலாக
தோ – தோன்றி உறுதியாகும்.
மாசற்று இருக்கும் அறத்துடன்கூடிய
செயலே தன்மை உடையதாகும்.
34.
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
35 அறன் வலியுறுத்தல்-திருக்குறள்-கரந்துறையில்
35. விலகி இரு.
வி-வி்ண்முட்டும் பேராசை,
ல-லட்சிய நிறைவேறா கடும் சொல்லும்
கி-கிடைக்காத வேகமும்,
இ-இறுமாப்பு,
ரு-ருத்ரம் ஆகிய நான்கையும் விலக்குவதே அறம்.
பொறாமை, பேராசை, கடும்சொல், சினம்
ஆகியவற்றை தவிர்ப்பதே அறம்.
35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
36 அறன் வலியுறுத்தல்-கரந்துறையில்
36- செயலாக அது
செ-செவ்வனே
ய-யதார்த்தமாக
லா-லாவகமாக அறத்தை
க-கடமை என
அ-அன்றாடம் செய்வது
து-துணையாக உயிர்க்கு என்றும் இருக்கும்.
அன்றாடம் செய்யப்படும் அறம் உயிர்க்கு
என்றும் துணை நிற்கும்.
36
“அன்று அறிவாம்” என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
37 அறன் வலியுறுத்தல் – திருக்குறள்-கரந்துறையில்
37.சுமையாக கருதாதே
சு -சுமப்பவனும்
மை-மையமாக பல்லக்கிலிருப்பவனும்
யா-யாதும்
க-கருதாமல்
க-கடமை
ரு-ருசிகர வாழ்வு என்பதையும்
தா-தாண்டி
தே-தேர்ந்தெடுப்பதே அறமாகும்.
பல்லக்கை சுமப்பவனும் அமர்ந்திருப்பவனும்
ஏற்றத் தாழ்வுகளை கடந்தவைகளையே அறமெனப்படும்.
37
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை.
38 அறன் வலியுறுத்தல்- திருக்குறள்- கரந்துறையில்
38 . பாதை சீராக
பா – பாரமாக வாழ்நாளை
தை- தையலை(தொடர் செயலை) கருதாமல்
சீ – சீரான அறத்துடன்
ரா – ராத்திரி பகலென
க – கற்பதுடன் செயல்படுவதேயாகும்.
அறத்தை பாரமாக வாழ்நாளை கருதாமல்
தினமும் கற்பதுடன் செயல்படுவதேயாகும்.
38. வீழ்நாள் படாமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.
39. அறன் வலியுறுத்தல்-திருக்குறள்-கரந்துறையில்
39 . வருமே அது
வ – வரும் துன்பமும்
ரு – ருசிகரமான புகழும் மற்ற செயல்களால்
மே – மேன்மை தராது
அ – அறமே இன்பத்துடன் என்றும்
து – துணை நிற்கும்
அறமே நிலையான இன்பமாகும் மற்ற
செயல்கள் துன்பமே தரும்.
39
அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்
புறத்த புகழும் இல.
40. அறன் வலியுறுத்தல்-திருக்குறள்-கரந்துறையில்
40. உயர அது
உ-உண்மையான செயல்
ய-யதார்த்தமாக
ர-ரகவாரியாக
அ-அறத்துடனே
து -துணை நிற்கும்.
உண்மையான செயல் ஒருவற்கு பழிவராமல்
உயர்வுக்கு துணை நிற்கும்.
40. செயற்பாலது ஒரும் அறனே ஒருவற்கு
உயற்பாலது ஒரும் பழி.
41 .இல்வாழ்க்கை-திருக்குறள்-கரந்துறையில்
41. தாயாக இயலாக
தா-தாய், தந்தை, தாரம்
யா-யாவர்க்கும்
க – களிப்புடன் குழந்தை பேறும்
இ – இல்வாழ்வு நெறியுடன் அமைவது
ய – யதார்த்தமாக
லா – லாவகமாக
க – கடந்துநின்று நல்ல துணையாக அமையாகும்.
பெற்றோர், இல்லாள் குழந்தை யாவும்
நெறியுடன் அமைவது நற்துணையாகும்.
41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
42 இல்வாழ்க்கை திருக்குறள்- கரந்துறையில்
42 . தவமே ஆதரவாக
த-தவத்துடன்
வ-வறியவர்கள்
மே-மேன்மையுடன் இறநந்தோர்க்கும்
ஆ-ஆதரவளித்து
த – தவமாக
ர- ரம்மியமாக
வா-வாழ்வமைத்து
க-களிப்புடன் துணை இருப்பதேயாகும்.
இல்வாழ்வென்பது துறவி, வறியவர் ஆதரவின்றி இறந்தோர்க்கும் துணை இருப்பதேயாகும்.
42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
43. இல்வாழ்க்கை-திருக்குறள்-கரந்துறையில்
ஐவகை ஆசி
ஐ – வாழ்ந்தோர், சுற்றம், விருந்தோம்பல்,
தெய்வம், தான் என
வ – வகைப்படுத்தி, ஆராந்து, வாழ்ந்து
கை- கைமாறு கருதாது அறத்துடன்
ஆ -ஆசி பெற்று வாழ்வது
சி – சிறப்பாகும்.
ஐவகையின ஆசிகளுடன் வாழ்ந்து உபசரித்து
அறத்துடன் வாழ்வது சிறப்பு.
43
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஜம்புலத்து ஓம்பல் தலை.
44 . இல்வாழ்க்கை-திருக்குறள்-கரந்துறையில்
44 பகீரத உதவி
ப-பழிஇல்லாமல்
கீ-கீர்த்தியுடன் அறத்தை
ர-ரகவாரியாக அமைத்து
த-தரமான பொருட்களை உபயோகித்து
உ-உண்பதை
த-தரத்துடன் பகிர்ந்தளிப்பது இல்வாழ்வு சிறந்து
வி-விளங்கும்.
பழிஇல்லாமல் அறவழியில் கிடைக்கும் பொருட்களை
பகிர்ந்துண்பது சிறப்பு இல்வாழ்க்கையாகும்.
44.
பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் இல்வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
45. இல்வாழ்க்கை- திருக்குறள்-கரந்துறையி்ல்
45. பலமே, இது
ப-பண்பின்
ல-லட்சியமும்
மே-மேன்மையான அறமும்
இ-இல்வாழ்க்கையின் பண்பும்
து-துணையான பயனுமேயாகும்.
அன்புடன் கூடிய இல்வாழ்க்கை பண்பாகவும்
அறத்தின் பயனாகவே அமையும்.
45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
46 இல்வாழ்க்கை-திருக்குறள்-கரந்துறையில்
46. யாதுமா எது?
யா- யாவையும் அறத்தின்
து- துணையான இல்வாழ்க்கையில்
மா-மானிடர்களுக்கு அமைவது நலம்.
எ- எந்த புற வழியிலும்
து-துணையாக பெறமுடியுமோ?
அறத்தின் துணையோடு இல்வாழ்க்கை அமைவது நலம். வேறு எந்தவழியிலும் பெறமுடியுமோ?
46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்
புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?
47 இல்வாழ்க்கை-திருக்குறள்-கரந்துறையில்
47 முயலாக இரு
மு-முயற்சியுடன்
ய -யவனியில்
லா-லாவகமாக
க-கண்காணித்து
இ -இயல்பான வாழ்க்கையே
ரு-ருசிகரமான முன்னேறமாகும்.
இயல்பான முயற்சியில் இல்வாழ்க்கை
அமைதலே எல்லாவகையிலும் தலைசிறந்ததாகும்.
47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
48 . இல்வாழ்க்கை – திருக்குறள்-கரந்துறையில்
48 நலமே அது
ந-நம்பிக்கையுடன்
ல-லட்சியத்துடன்
மே-மேன்மையுடன்
அ-அற வாழ்வுடன் மற்றவர்க்கும் வழிகாட்டியாக
து-துணை புரிவது.
அறவாழ்வுடன் மற்றவர்க்கும் வழிகாட்டியான
இல்வாழ்க்கையே மேன்மையாகும்.
48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மைஉடைத்து.
49- இல்வாழ்க்கை-திருக்குறள்
49. நலமே தவமே
ந-நம் இல்லற வாழ்வு
ல-லட்சியத்துடன் நல்ல அறத்துடன்
மே-மேன்மை தருதல் சிறப்பு.
த-தன்னல பழியுடன்
வ-வரும் வாழ்வு
மே-மேன்மையுராது.
நல்அறத்துடன் கூடிய இல்வாழ்வு சிறப்புறும்.
பழியுறும் வாழ்வு மேன்மையுராது.
49
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.
50. இல்வாழ்க்கை – திருக்குறள்- கரந்துறையில்
50. வையக தகுதி
வை – வையகத்தில்
ய – யதார்த்த
க – கடமையுடன்
த -தன்னிலை அறிந்து
கு -குடும்பத்தையும் மேம்படுத்தும்
தி -திறமை உள்ளோர் தெய்வமாக கருதபடுவார்.
உலக வாழ்க்கைமுறை அறிந்து வாழ்பவன்
தெய்வமாக கருதப் படுவான்.
50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
51
வாழ்க்கைத்துணை நலம் – திருக்குறள்-கரந்துறையில்
51. உரியவராகி இரு.
உ-உயரிய குணங்களுடன்
ரி-ரிதமாக
ய-யதார்த்தமாக
வ-வருவாய்க்கு தகுந்தவாறு
ரா-ராசியாக
கி-கிடைத்த இல்வாழ்க்கைத் துணை
இ-இப்பிறப்பின்
ரு-ருசிகர வாழ்வாகும்.
மாண்புறுகுணத்துடன் வருவாய்க்கு தக்க வாழ்வது
வளமான இல்வாழ்க்கைத் துணை
51
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
52.
வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறையில்
52 உரியதாக அது
உ-உயரிய குணமுடன்
ரி-ரிதமாக
ய-யதார்த்தமாக
தா-தானும்
க-கடைபிடித்து மகிழ்ச்சியுடன்
அ-அற்புத இல்லாளாக
து-துணை கொள்வது நல்லது.
உயரிய குணமுடன் இல்லாள் இல்லையெனில்
எப்பெருமையும் இருந்தும் பயனில்லை.
52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.
53.
இல்வாழ்க்கைத்துணை – திருக்குறள் – கரந்துறையில்
53. பெருமை அது
பெ – பெரும்பாலும் பெருமையான
ரு – ருசிகரமான வாழ்வும்
மை – மையமான மாண்புடைய இல்வாழ்க்கைக்கு
அ – அன்பும் பண்புள்ள இல்லாளின்
து – துணையுடனே ஆகும்.
மனைவியின் மாண்பே இல்லத்தின் பெருமையும்
வாழ்வின் துணையுமாகும்.
53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
54
வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறையில்
54. பெரியவை யாது?
பெ-பெண்ணின் கற்பு
ரி- ரிதமான உறுதியுடன்
ய-யதார்த்தமாக
வை-வைபோகத்துடன்
யா-யாவருக்கும்
து-துணையாக இருப்பதைத் தவிர வேறு எது?
பெண்ணின் கற்பைத் தவிர வேறு
பெருந்தன்மையான துணை யாது?
54
பெண்ணின் பெருந்தக்க யாவுள? கற்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
55
வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறை
55 . அருமையாக வருமே
அ-அனைத்தும்
ரு-ருசிகரமாக
மை-மையமாக
யா-யாவும் பெற
க-கணவனை தொழுவது
வ-வந்து அமையும் வாழ்வும்
ரு-ருதுவாக
மே-மேன்மைப்படுத்தும்.
கணவனை துயில் எழுந்ததும் தொழுதால்
மழைபெய் என்றால் பெய்யும்.
55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
55
வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறை
55 . அருமையாக வருமே
அ-அனைத்தும்
ரு-ருசிகரமாக
மை-மையமாக
யா-யாவும் பெற
க-கணவனை தொழுவது
வ-வந்து அமையும் வாழ்வும்
ரு-ருதுவாக
மே-மேன்மைப்படுத்தும்.
கணவனை துயில் எழுந்ததும் தொழுதால்
மழைபெய் என்றால் பெய்யும்.
55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
56. வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறை
56 . தகை அவா
த-தம் குடும்பத்தை காத்து
கை-கைமாறு கருதாமல்
அ-அனைத்து பாங்கினையும் ஏற்று
வா-வாழ்பவளே, பெண்.
தம் நெறி, கணவன், குடும்பத்தையும்
காப்பவளே சிறப்பான பெண்.
56
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துத் சோர்விலாள் பெண்.
57.
வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறையில்
57. குலமே யாது ?
கு-குணமும்
ல-லட்சியமும் கொண்ட மகளிர்க்கு
மே-மேலும் நெறியுடன் காப்பதற்கு
யா-யாவும் சிறக்க கட்டுப்பாடை தவிர வேறென்ன
து-துணை செய்யும்?
மகளிர் சிறந்த விளங்க குணமும்
நெறியுமே காத்து நிற்கும்.
57
சிறைக்காக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
58
வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறை
58. அவரது இதயமே
அ – அன்புடன் கணவனை
வ – வணங்கி
ர – ரம்மியமான
து – துணையுடன் மனைவி
இ- இடம் பெற்றால்
த – தரமாக
ய – யவனியில் பெரிதும்
மே- மேன்மையுடைய வாழ்வு பெறலாம்.
உலகில் கணவனை பெருஞ்சிறப்புடன் காப்பது
பெண்டிர் மேன்மையுடைய வாழ்வடையலாம்
58
பெற்றான் பெரின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு.
59.
வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறையில்
59 . பெருமிதமே இல
பெ-பெண்ணின்
ரு-ருதுவான
மி-மிருதுவான
த-தரமான
மே-மேன்மையான வாழ்வு
இ-இருப்பதே
ல-லட்சியப் புகழை காப்பதாகும்.
வாழும் இல்லாள் என்றும் லட்சிய
புகழை காப்பதே சிறப்பு.
59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
60.
வாழ்க்கைத்துணை நலம்-திருக்குறள்-கரந்துறையில்
60. குலமே, மதி
கு -குடும்பத்தையும் காத்து, நல்
ல-லட்சியத்துடன் பிள்ளைகளை வளர்ப்பதே
மே-மேன்மையுடைய
ம-மனையாளுக்கான
தி -திண்மையான அணிகலனாகும்.
நற் குணம் உள்ள மனைவி பிள்ளைகளை
நன்றாக வளர்ப்பதே நற்பேறாகும்.
60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
61 மக்கட் பேறு – திருக்குறள் – கரந்துறையில்
61. மக மவ
மக்கட் பேறுகளில் மகளோ மகனோ
கற்றறிந்து இருப்பது
மனித இனத்திற்கு
வளரும் சிறப்பு பேறுகளாகும்.
அறிவு அறிந்த மக்கட்பேறு மனித
இனத்தின் சிறப்பான பேறுகளாகும்.
61. பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
62 மக்கட் பேறு – திருக்குறள் – கரந்துறையில்
62. தீயவை அரிது
தீ – தீர்க்கமான நல்ல பிள்ளைகள்
ய – யதார்த்தமான நல்ல பண்புகளுடன்
வை-வையகத்தில்
அ – அன்புடன்
ரி – தரமாக பெறுவது
து – துன்பங்கள் தீண்டுவதில்லை.
பண்புடைய மக்களைப் பெற்றால் வையகத்தில்
பழிச் சொற்கள் தீண்டுவதில்லை.
62
எழுபிறப்பும் தீயவை தீண்டா; பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
63. மக்கட்பேறு – திருக்குறள்- கரந்துறையில்
63. தமதே நமது
த-தம் பொருட்கள் என்றும்
ம-மனித இனத்திற்கு
தே-தேர்ச்சி பெற
ந – நற்செயல்கள் புரியும்
ம – மக்கட்பேற்றின்
து – துணையே நாளும் நன்மையாகும்.
நற்செயல்கள் புரியும் நன் மக்களாலே
மனித இனம் தழைக்கும்.
63 தம்பொருள் என்பதம் மக்கள்; அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
64 . மக்கட் பேறு – திருக்குறள் – கரந்துறையில்
64. அமுது, எமது
அ – அமிழ்து அது,
மு – முழு மனதுடன் தம் குழந்தைகள்
து – துடிப்பாக உணவை ஊட்டிவிடுவது,
எ – என்றும் தம்
ம – மக்கள் அன்புடன்
து – துணையாக இருக்கும் குணத்தைக் குறிக்கும்.
தம் மக்கள் உணவை ஊட்டிவிடுவது
அமிழ்தை விட இனியதாகும்.
64 . அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
65. மக்கட் பேறு – திருக்குறள் – கரந்துறையில்
65. தமது செவியாக
த – தம் குழந்தையின்
ம – மழலையுடன்
து – துள்ளித் ததும்பும் பேச்சும்
செ – செம்மையான உடலை தொட்டு
வி – விளையாடுதல்
யா – யாவும் இன்பமாக
க – கடந்து செல்லும் வாழ்வாகும்.
தம் குழந்தையின் மழலைப் பேச்சும்
தொட்டு விளையாடுதலும் இன்பமாகும்.
65.
மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
66. மக்கட் பேறு – திருக்குறள் – கரந்துறையில்
66 – ஓசை யாது
ஓ – ஓசைபடும்
சை – சைகை இனிமை என்பர்
யா – யாழிசையான குழந்தையின்
து – துதி பாடும் பேச்சை கேட்காதவர்கள்.
யாழிசை குழலிசை இனிது என்பர்
மழலை பேச்சை கேட்காதவர்கள்.
66 . குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்.
67 மக்கட் பேறு – திருக்குறள் – கரந்துறையில்
67. அவை செயலாக
அ – அன்புடன் தந்தை மகனை நன்கு படிக்க
வை – வைத்து
செ – செவ்வனே அவையில்
ய: – யதர்த்தமாக
லா – லாவகமாக
க – கற்றலின் படி செயல்பட
வைப்பது தந்தை மகனுக்கு
செய்யும் நன்றியாகும்.
தந்தை மகனுக்குதவும் நன்றி அவையில்
முன்இருக்க வைக்கும் செயலாகும்
67
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.
68. மக்கட் பேறு – திருக்குறள் – கரந்துறையில்
68 . மிகுதி தருவதாக
மி – மிகுந்த இன்பம் தருவது,
கு – குணமாக
தி – திறமையாக
த – தம் மக்களை
ரு – ருசிகரமான உலகில்
வ – வளரச் செய்வது
தா – தாம் பெறும் இன்பத்தையே
க – கடந்து இனிமை தருவதாகும்.
தம்மக்களின் அறிவுடைமை உலகத்து
உயிர்களில் அனைத்தையும்விட இனிது.
68
தம்மின் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.
69. மக்கட் பேறு – திருக்குறள் – கரந்துறையில்
69. பெரியது
பெ – பெற்றெடுத்த அன்னை
ரி – ரிதமாக வளர்க்கும் காலத்தை விட
தம் பிள்ளைகள்
ய – யவனியில் உயர் குணமுடையோர்
எனக் கேட்பது
து – துயரம் எல்லாம் மறைந்து இன்பம் காண்பர்.
தாய்தன் மகனை சான்றோன் எனக்கேட்பது
பெற்றெடுத்து வளர்ப்பதைவிட இன்பமாகும்.
69
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
70. மக்கட் பேறு திருக்குறள் கரந்துறையில்
70. தவ உதவி
த – தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி
வ – வண்ணமயமான
உ- உலகில்
த – தரமான மனிதனாக, அறிவுடையவனாக
வி – விளங்குதலே ஆகும்.
தந்தைக்கு மகன் செய்யும் உதவி
அறிவுடையவனாக இருத்தலே ஆகும்.
70. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
71. அன்புஉடைமை – திருக்குறள் – கரந்துறையில்
71 . அவரவராக
அ – அன்பினால்
வ – வரும்
ர – ரம்மிய
வ – வரவு
ரா – ராசியான மகிழ்வுடன்
க – கனிவுடன் நற்குணத்தை தரும்.
அவரவரின் அன்பு நிலை நற்குணத்தை
என்றும் பறை சாற்றும்.
71
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.
72 அன்புஉடைமை-திருக்குறள் – கரந்துறையில்
72. உரிய உரிமை
உ – உள்ளன்போடு அன்புடையோர்
ரி – ரிதமாக
ய – யவனியில் தம்
உ- உடல், பொருள் அனைத்தையும்
ரி – ரிங்காரமாக அன்புடன்
மை – மையமாக வழங்கி மகிழ்வர்.
அன்புடையோர் தம் உடமையையும் வழங்கி மகிழ்வர்
அன்பிலார் அனைத்தும் தமதென்பர்.
72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
73. உரியதாக
உ- உன்னதமான ஆருயிர்
ரி – ரிதமாக கலந்த உறவுடன்,
ய – யதார்த்தமாக பிற உயிர்களின் தொடர்புடன்,
தா – தாரணியில் அன்புடன்,
க – கடந்து வாழ்வதே சிறப்பு.
ஆருயிர் கலந்த உறவு பிற உயிரின் மேல் அன்பு
கொண்டு வாழ்வதே சிறப்பு .
73.
அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
74. அன்புஉடைமை -திருக்குறள் – கரந்துறையில்
74. நேயமாக தருமே
நே – நேசத்துடன்
ய – யதார்த்தமாக
மா – மாந்தர்களிடம்
க – கலந்து கூடிய அன்பும், நட்பும்
த – தளர்வில்லா ஆர்வமும்
ரு – ருசியாக நம்மை
மே – மேம்படுத்துவோம்.
அன்பு தரும் ஆர்வமும், நேசமும் கூடிய
நட்பு சிறப்பைத் தரும்.
74
அன்புஈனும் ஆர்வம் உடைமைஅதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
75. அன்புடைமை திருக்குறள் கரந்துறையில்
75. வையக மரபு
வையகத்தில் இன்புற்று
யதார்த்தத்துடன்
கடந்து சென்று என்றும்
மக்களிடம் அன்புடனும்
ரசனையுடன்
புரிந்து வாழ்தலே சிறப்பு
வையகத்தில் அன்புடன் மக்களிடம் இன்புற்று
வாழ்தலே என்றும் சிறப்பு
75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
76. அன்பு உடைமை – திருக்குறள் -கரந்துறையில்
76. அது அதே
அ – அறம் அன்பிற்கு மட்டும்
து – துணை என்பர் அறியார்.
அ – அனைத்து நல் ஆற்றலுக்கும் அஃதே
தே – தேயாத செயலாக துணை நிற்கும்.
அன்பு அறம் செய்பவர்க்கு மட்டுமல்ல
அனைத்து நல்ஆற்றலுக்கும் துணை நிற்கும்.
76
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை .
77. எசகு பிசகாக
எ- எலும்பு இல்லாத புழுவை வெயில்
ச-சடலமாக்கி
கு-குறுக்கி சுட்டு விடும், அதுபோல
பி – பின்பு , அன்பு இல்லாதோர் உயிரை அறம்
ச – சருகு போல
கா – காக்காமல் சுட்டு
க – கருக்கி விடும்.
வெயில் எழும்பில்லா உயிரை சுடுவது போல
அன்பில்லா உயிரை அறம் சுடும்.
77.
என்புஇல் அதனை வெயில்போலக் காயுமே
அன்புஇல் அதனை அறம்.
78. அன்புஉடைமை திருக்குறள் கரந்துறையில்
78. உயர அகமே
உ – உயிர் வாழ்க்கை
ய – யதார்த்த
ர – ரகமாக
அ – அன்பு அகத்தின்
க – கண் ஒளிர்தலே
மே – மேன்மையாகும்.
அன்பு அகத்தில் இல்லையெனில் வாழ்க்கை பாலைவனத்தில்
மரம்தளிர் விடுவதுபோலாகும்.
78
அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
79. அன்புஉடைமை – திருக்குறள் – கரந்துறை
79. அமைவது யாது?
அ – அகத்தில் அன்பு
மை – மையமாக
வ – வலிமையுடன்
து – துணை புரியவில்லையெனில்
யா- யாக்கை (உடம்பு) அழகு
து – துணை புரிந்து என்ன பயனை தரமுடியும்?
அகஅன்பு இல்லையெனில் புற அழகிருந்து
என்ன பயனைத்தர முடியும்?
79.
புறத்துஉறுப்பு எல்லாம் எவன் செய்யும்? யாக்கை
அகத்துஉறுப்பு அன்புஇல் அவர்க்கு.
80. அன்புஉடைமை – திருக்குறள் – கரந்துறையில்
80.உயரிது
உ – உண்மையில் அன்பு மட்டும்தான்
ய – யதார்த்தமாக
ரி – ரிங்காரமிடும் உயிர்நிலையின்
து – துணையாகும்.
அன்பு வழியே உயிர்நிலை அஃதில்லாதவர்க்கு
எலும்பு போர்த்திய உடம்பேயாகும்.
80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
81. விருந்துஒம்பல் – திருக்குறள் – கரந்துறையில்
இரு, உதவியாக.
இ – இல்வாழ்க்கையின் சிறப்பே
ரு – ருசிகரமான
உ- உணவை
த – தரமாக சமைத்து
வி – விருந்து
யா- யாவருக்கும்
க – கவனித்து வழங்குவதேயாகும்.
இல் வாழ்க்கையில் பொருள் சேர்ப்பதே
விருந்து உபசரிப்பதன் பொருட்டேயாகும் .
81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
82 விருந்துஓம்பல் – திருக்குறள் – கரந்துறையில்
82 . இரு சாகாம
இ-இனிய உணவை
ரு-ருசிபட சமைத்து
சா-சார்ந்தோரை
கா-காக்க வைத்துவிட்டு சாகா
ம -மருந்தெனினும் சாப்பிடுவது நல்லதல்ல.
விருந்தினரை காக்கவைத்துவிட்டு சாகா
மருந்தெனினும் சாப்பிடுவது நல்லதல்ல.
82
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டாற்பாற்று அன்று.
83. விருந்துஓம்பல் – திருக்குறள் – கரந்துறையில்
83. நலமே ‘ வருக ‘
ந – நல்ல
ல – லட்சியம்
மே- மேற்கொள்ள
வ – ‘ வருபவர்களுக்கு தினமும் விருந்தளித்து
ரு – ருசிபட காப்பவன் வறுமையில்
க – கஷ்டபடுவதில்லை ‘.
வரும் விருந்தினர்களை தினமும் காப்பவனின்
வாழ்க்கை வறுமையில் பாழ்படுவதில்லை
83
வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
84. விருந்துஒம்பல் திருக்குறள் கரந்துறையில்
84. திருமுகமே வருக
தி – தினமும்
ரு – ருசியுடன்
மு – முகமலர்ச்சியுடன்
க – கறிகாய்களுடன்
மே – மேன்மேலும்
வ – வரும் விருந்தினர்க்கு
ரு – ருசிபட சமைப்பவர்கள் வீட்டில்
க – களிப்புடன் திருமகள் குடியிருப்பாள்.
அகமகிழ்வுடன் வருவோருக்கு விருந்தளிப்போர் வீட்டில் திருமகள் குடியிருப்பாள்.
84
அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஒம்புவான் இல்.
85. விருந்து ஒம்பல் திருக்குறள் கரந்துறையில்
85. விரு(ந்து) விருது
வி ருந்தை மகிழ்ச்சியாக
ருசியாக வழங்குவோரின்
விளைநிலங்களில்
ருசிகரமான பொருட்கள் விளைந்து
துணை புரியும்.
விருந்தை மகிழ்ச்சியாக ருசியுடன் வழங்குவோரிடம்
நல்விளைபொருட்கள் தானே வரும்.
85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்ப
மிச்சின் மிசைவான் புலம்.
86. விருந்துஓம்பல் – திருக்குறள் – கரந்துறையில்
86. வரவாக இரு
வ – வரும் விருந்தினருக்கு
ர – ரக
வா- வாரியாக விருந்து படைத்து
க – கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள்
இ – இனி வரும் காலங்களிலும்
ரு – ருசிபட உணவு வழங்குவோராவர்கள்.
86
செவ்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
87. விருந்து ஓம்பல் திருக்குறள் கரந்துறையில்
87. வகை யாது
வ – வகை வகையாக விருந்து படைத்து
கை – கைமாறு கருதாது உதவி செய்வது
யா – யாவருக்கும் பயனாகும் என்பதை பொறுத்தே
து – துணையாக அமையும்.
விருந்தினரி்ன் தகுதியை பொறுத்தே விருந்தின்
வேள்விப் பயன் அமையும்.
87
இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
விருந்தோம்பல் – திருக்குறள் கரந்துறையில்
88 .விதியாவது
வி-விருந்தோம்பலில்
தி-தினமும்
யா-யாவருக்கும் தராதவர்களின் பொருட்கள்
வ-வருந்தி இழந்து இறுதியில்
து-துன்புறுவர்.
விருந்தினர்க்கு வழங்காமல் காப்பவர்களின் பொருட்கள் இழந்து வருந்தி இறுதியில் துன்புறுவர்.
88
பரிந்துஓம்பி பற்றுஅற்றேம் என்பர் விருந்துஓம்பி
வேள்வி தலைப்படா தார்.
89. விருந்துஓம்பல் திருக்குறள் கரந்துறையில்
89 . பேதமை
பே- பேரன்புடன் வளமைக் காலத்தில்
த – தரமாக விருந்தினரைப் போற்றாமல் இருப்பது
மை-மைய மடமையை உருவாக்கும்.
உடைமையுடன் இருக்கும்பொழுது விருந்தினரை
போற்றுவதே சாலச் சிறந்தது.
89
உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
90
கரு முகமாக
க – கனிவுடன்
ரு – ருசிபட விருந்தினரை கவனிக்கவில்லையெனில்
மு-முகம்
க -கருப்பாக
மா-மாறி, அனிச்சப்பூ மோந்தால் வாடுவது போல
க -கருப்பாகி வாடி விடுவர்.
அனிச்சப்பூ மோந்தால் வாடும் விருந்தினரை
முகந்திரிந்து நோக்கினால் வாடிவிடுவர்.
90
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
91. இனியவை கூறல் திருக்குறள் கரந்துறையில்
தீயவை அகல
தீய சொற்களை அகற்றி
யதார்த்தத்துடன்
வையகத்தில்
அன்பு சொற்களைப் பேசி
கனிவுடன் செம்பொருள்(மெய்ப் பொருள்) பட
லட்சிய வாழ்க்கையில் பயணிப்போம்.
இன்சொல்லில் பேசி, தீயவற்றை அகற்றி
மெய்பொருளுடன் நற்செயல்களை புரிவோம்.
91
இன்சொலால் ஈரம்அளைஇ படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
92. இனியவை கூறல் – திருக்குறள் – கரந்துறையில்
முகமது நலமே
மு-முகம் மலர்ந்து
க-கனிவுடன் பேசுவது
ம-மனமுவந்து பொருள் வழங்குவதைவிட
து-துணை புரிந்து நன்கு மதிக்கப்படும்.
ந-நல் மதிப்புடன் கூடிய
ல-லட்சிய வாழ்வுடன்
மே-மேன்மை தரும்.
அகம் மலர்ந்து இன்சொல்லில் கூறுவது
பொருள் வழங்குவதை விடச் சிறந்தது.
92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
93. இனியவை கூறல் திருக்குறள் கரந்துறையில்
93. அதுவே அகமே
அ-அகமலர்ச்சியுடன்
து-துணைபுரிந்து
வே-வேற்றுமை இல்லாமல்
அ-அன்பு கலந்த
க-கனிவான இன் சொல்லுடன் கூறுவதே
மே-மேன்மையான அறமாகும்.
முகமலர்ச்சியுடன் அன்பு கலந்த இன்
சொல்லே உயர்ந்த அறமாகும்.
93
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
94. இனியவை கூறல் – திருக்குறள்-கரந்துறையில்
94. யாவருமே இயலாக
யா-யாவரும்
வ-வறுமையின்றி
ரு-ருசிபட வாழ,
மே-மேன்மை தர,
இ-இன் சொல்லை
ய-யதார்த்தமாக
லா-லாவகமாக
க-கனிவுடன் சொன்னால் இன்பமே தரும்.
யாவரிடமும் இன்சொல்லை வழங்கினால்
வறுமையின்றி இன்பமே தரும்.
94.
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
95 இனியவை கூறல் திருக்குறள் கரந்துறையில்
95. பதவி ஆகுமே
ப-பணிவுடன் கூடிய
த-தரமான இன் சொல்
வி-விருப்பமுள்ள
ஆ – ஆற்றலாகி
கு – குன்றாமல்
மே-மேன்மையாக விளங்கும்.
பணிவு உடையவனின் இன்சொல் பல
அணிகலன்களை விட சிறந்ததாகும்.
95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற.
96. இனியவை கூறல் – திருக்குறள் – கரந்துறையில்
தேயாது அவை
தே-தேடி நன்மை தரும் சொற்களை
யா-யாவரிடமும் கலந்து பேசினால்,
து-துணை புரியும் புண்ணியம்.
அ-அறம் பெருகும்
வை-வையகத்தில்.
நல்லவற்றை நாடி இனிய சொற்களை
சொன்னால் அறம் பெருகும்
96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
97. இனியவை கூறல் திருக்குறள் – கரந்துறை
97. நயமாக பேசு
ந-நன்மை தரும் சொற்களை
ய-யதார்த்தமாக பண்பின்
மா-மாண்போடு
க-கனிவுடன்
பே-பேசுவது
சு-சுகமான இன்பமாகும்.
பயன் தரும் இன்பமான சொற்களை
பேசுவது நன்மை அளிக்கும்.
97
பயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
98. இனியவை கூறல்-திருக்குறள்-கரந்துறையில்
98. சில தருமே
சிறப்பான
லட்சிய மனப்பான்மை கொண்ட
தரமான இன்சொல்
ருசிகர வாழ்வையும்
மேன்மையும் என்றும் தரும்.
இன்சொல் சிறுமை கலவாமல் இருந்தால்
என்றும் இன்பம் தரும்.
98
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
99. இனியவை கூறல்-திருக்குறள்-கரந்துறையில்
99. இலகுவாகுமே
இ – இன்சொல்லில் கூறுவதை
ல – லட்சியமாக்கிக் கொண்டு,
கு – குற்றமுள்ள வன்சொற்களை தம்
வா- வாயால் கூறாமல் , நன்கு
கு – குதூகூலத்துடன்
மே -மேன்மையடையலாம்.
பிறரின் இன்சொற்கள் உணர்ந்து இனிமை காணலாமே
வன்சொல் கூறுவதால் பயனாகுமா?
99
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?
100. இனியவை கூறல் -திருக்குறள் – கரந்துறையில்
100. காயாக இலமே
கா-காய்
யா-யாரையும்
க-கவர்ந்திழுப்பதில்லை
இ-இனிய சொற்களை கூறி
ல-லட்சிய வாழ்க்கை
மே-மேற்கொள்வதே சிறப்பாகும்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருக்க காய்கவராதது போலாகும்.
100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்ப காய்கவர்ந் தற்று.
101.
செய்ந்நன்றி அறிதல்-திருக்குறள்-கரந்துறையில்
101. வையக உதவி
வை-வையகத்தில்
ய – யதார்த்தமான
க – கடமையுடன் பிரதிபலன் கருதாது
உ- உண்மையாக செயலாற்றி
த- தரமாக உதவுவது
வி-விண்ணுலகத்தையும்
உலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.
பிரதிபலன் பாராமல் பிறருக்கு உதவிசெய்வது
எந்த உலக ஆற்றலையும் விட அரிது.
101.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
102.
செய்ந்நன்றி அறிதல் – திருக்குறள் – கரந்துறையில்
102. பெரிய உதவி
பெ-பெரிதாக கருதப் படுவது
ரி – ரிதமாக
ய – யவனியில்
உ-உற்ற நேரத்தில்
த-தரமான சிறு உதவியை ஆபத்தான சமயங்களில்
வி-விருப்பமுடன் செய்வது, உலகை
விட மிகப் பெரியது.
தக்க காலத்தில் செய்யும் சிறு உதவி
இவ்வுலகை விட மிகப் பெரியது.
102
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
103. செய்ந்நன்றி அறிதல் திருக்குறள் கரந்துறையில்
103. நயமாகுமே!
ந-நல் உறவுடன்
ய-யதேச்சையாக
மா-மாற்றாக பயன் ஏதும் கிடைக்கும் என கருதாமல்
கு-குன்றா பெருமையுடன் செய்யும் உதவி
மே-மேதினியில் கடலைவிட பெரிதாக விளங்கும்.
பயனை எதிர்பாராது செய்யும் உதவி
மாபெரும் கடலைவிட பெரிதாகும்.
103.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
104.
செய்ந்நன்றி அறிதல்-திருக்குறள்-கரந்துறையில்.
104. தகுதி கருது
த-தரமான உதவி
கு-குணத்துடன்
தி-திணை அளவு
கரு – கருதி செய்தாலும் அச்செயலை பெரிய
து – துணை என கருதுவர்.
சிறு அளவு உதவி செய்தாலும்
பெரியதுணை எனக் கருதுவர்.
104
தினைத்துணை நன்றி செயினும்பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
105.செய்ந்நன்றி அறிதல்-திருக்குறள்-கரந்துறையில்.
105. மதி உதவி
ம-மனமுவந்து
தி-திடமாக
உ-உள்ளன்போடு உதவுவது
த-தரமான பொருள் வரம்பில் மதிக்கப்படுவதில்லை
வி-விரும்பி பெறுபவரின் பண்பில் மதிப்பிடப்படும்.
உதவி பொருட்களில் அளவிடப்படுவதல்ல பெறுபவரின் பண்பினாலே அமையும்.
105
உதவி வரைத்துஅன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
106.செய்ந்நன்றி அறிதல்-திருக்குறள்-கரந்துறையில்.
106. மாசிலா உதவி
மாசிலா அறிவோரிடமும்
சிந்தனையில் குற்றமற்று
லாவகமாக உள்ளோரிடமும் நட்புடன் இரு.
உண்மையில் துன்பப்படும்பொழுது
தம்மீது நட்பு பாராட்டி
விரும்பியோரையும் மறவாதே.
துன்பத்தில் துணை நின்றவரிடமும் அறிவில் குற்றமற்றவரின் நட்பையும் மறவாதே.
106.
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்புஆயார் நட்பு.
107.செய்ந்நன்றி-திருக்குறள்-கரந்துறையில்
நலமே அது
ந-நட்புடன் பிறரின் துன்பத்தை
ல-லட்சியமாக கொண்டு துடைப்பவரின்
மே-மேன்மை எழு பிறப்பிலும்
அ-அறத்தோடு என்றும்
து-துணை நிற்கும்.
துன்பம் துடைத்தவரது நட்பை நல்லவர்கள்
எப்பிறப்பிலும் நினைப்பர்.
107.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
108.செய்ந்நன்றி அறிதல்-திருக்குறள்-கரந்துறையில்
நமது நலமே
ந-நன்றி
ம-மறப்பது நல்லது அல்ல
து-துன்பம் வரினும்
ந – நல்லது அல்லாதவைகளை மறப்பதையே நம்
ல -லட்சியமாகக் கொண்டு
மே-மேலும் பல நற்செயல்கள் புரிவோம்.
நன்றி மறப்பது நல்லதல்ல நல்லதல்லாதவைகளை
அன்றே மறப்பது நல்லது.
108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
109
தீமை செயலா
தீ-தீமையை ஓருவர் நிறைய செய்தாலும்
மை-மையமான ஒரு நல்ல
செ-செயலை இயல்பாக
ய-யதார்த்தாமாக கொண்டால்
லா-லாவகமாகி தீமை நினைவு போகும்.
கொல்வதைபோன்ற தீங்கு பலசெய்தாலும் அவரின்
ஒருநன்மை தீமையின்நினைவை மறைத்துவிடும்.
109
கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
110.செய்ந்நன்றி அறிதல்-திருக்குறள்-கரந்துறையில்
110. பாவமே இல
பா-பாவம் அனைத்திற்க்கும்
வ-வழி உண்டு
மே-மேன்மை அடைய
இ-இப்பிறப்பில் செய்த நன்றியை மறந்தோர்க்கு
ல-லகுவான வாழ்வில்லை.
எந்நன்றியை சிதைத்தவர்க்கு பாவம் நீங்கிவிடும்.
செய்நன்றி சிதைத்தோர்க்கு வாழ்வில்லை.
110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் உய்வுஇல்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.
111. நடுவு நிலைமை – திருக்குறள் – கரந்துறையில்
111. பகுதி வகை
ப-பக்குவமாக தகுதியை
கு-குணத்தோடும்
தி-திறமையோடும் நடுவு நிலைமையோடு
வ – வழி முறையாக கடைபிடித்தால்
கை – கைமாறு கருதாத நன்மையுண்டாகும்.
தகுதியான நடுவு நிலைமையை கடைபிடித்தால்
ஒப்பற்ற நன்மை உண்டாகும்.
111
தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
112-நடுவு நிலைமை திருக்குறள் கரந்துறையில்
112. நயமாகு
ந-நடுவு நிலைமை உடையவர்கள்
ய-யதார்த்த ஆக்கம் பெற்று
மா-மாபெரும் புகழுடன் வலிமையான
கு-குணமுடைய தலைமுறையாக அமையும்.
நடுவு நிலைமை உடையவர்கள் ஆக்கத்துடன்
வழித் தோன்றல்களுக்கும் வலிமை உடைமையாகும்.
112
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.
113 நடுவு நிலைமை திருக்குறள் கரந்துறையில்
113. சமமாக
ச-சகல நன்மை
ம-மதிப்பும் தரும் செல்வம் வரினும்
மா-மாண்புறும் செயல்களோடு நடுநிலைமையாக
க-கடமையாற்றுவதே ஆக்கம் தரும்.
நன்றை வரினும் நடுவு நிலைமை இழந்தால்
அன்றே விட்டுவிட வேண்டும்.
113.
நன்றே தரினும் நடுவுஇகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.
114. நடுவு நிலைமை- திருக்குறள் – கரந்துறையில்
114. அவரது
அ-அவரவது புகழ்
வ-வளர்ந்து நடுவுநிலைமையில் உள்ளனரா என்பதை
ர-ரசிப்புடன் கூடிய பிள்ளைகளின் பண்பில்
து-துடிப்பில் அறிய முடியும்.
நடுவு நிலைமையுடையவரா என்பதை அவரவர்களின்
பிள்ளைகளால் காணப் படும்.
114. தக்கார் தகவிலர் என்பது அவர்அவர்
எச்சத்தால் காணப்படும்.
115. நடுவுநிலமை- திருக்குறள்-கரந்துறையில்
விதி அமைவது
வி-விழுதலும், எழுதலும்
தி-தினமும் இல்லாததல்ல
அ-அன்பினால் நெஞ்சார
மை-மையமாக வாழ்த்தி
வ-வளர்ச்சியை போற்றுதலே சான்றோர்க்கு என்றும்
து-துணையாக அமையும்.
அழிவும் ஆக்கமும் இல்லாதாதல்ல நெஞ்சத்தின்
நீதியே சான்றோர்க்கு அழகு.
115
கேடும் பெருக்கமும் இல்அல்லநெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.
116. நடுவுநிலைமை-திருக்குறள்-கரந்துறையில்
116. தீய
தீ-தீய விளைவு நடுவுநிலையிலிருந்தால் பிசகினால்
ய-யதார்த்தமாக உள்மனம் அறியும்.
நடுவுநிலையிலிருந்து தவறி காரியம் செய்தால்
தம் நெஞ்சம் அறியும்
116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவுஒரிஇ அல்ல செயின்.
117- நடுவு நிலைமை – திருக்குறள் – கரந்துறையில்
117.சமமாக
ச-சரியாக நடுநிலையில் உள்ளோர்
ம-மக்களில் உயர்ந்தோர் பொருள் இழந்தாலும்
மா-மானிட பண்பெனக் கருதி தாழ்வாக
க-கருதமாட்டார்கள்
நடுநிலையில் உள்ளோர் பொருள் இழந்தாலும்
உலகோர் குறைவாக கருதமாட்டார்கள்.
117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
118. நடுவுநிலைமை திருக்குறள்-கரந்துறையில்
118. நீதி சமமாக
நீ-நீதியின்
தி-திசை எப்பொழுதும்
ச- சரி சம நிலை நாட்டி
ம – மக்களுக்கு தீர்ப்பை ஒரு பக்கமாக சாயாமல்
மா- மாண்புற்ற சான்றோர்கள்
க – கற்றலுடன் அமைக்கும் அழகாகும்.
தராசு போல ஒருபக்கம் சாயாமல்
நடுவுநிலைமையே சான்றோர்க்கு அழகாகும்.
118
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
119. நடுவுநிலைமை திருக்குறள்-கரந்துறையில்
119. பேசுவது
பே-பேசும் சொற்கள்
சு-சுகமாக உறுதிப் பட நின்று
வ-வரும் சொற்களும் நடுநிலை எனில், என்றும்
து-துணையாக நிற்கும்.
சொற்கள் ஒரு தலைப்பட்சமாக இல்லாமல்
நடுநிலைமையானால் நல்நிலை உண்டாகும்.
119.
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
120. நடுவுநிலைமை-திருக்குறள்-கரந்துறையில்
120. அது போல
அ-அடுத்தடுத்தது வாணிகம் செய்வோர் நல்
து-துணையாக கருதி பிற பொருளையும்
போ-போதுமான அளவு தம் பொருள் போல
ல-லட்சிய வணிகம் செய்வது நல் முறையாகும்.
வாணிகம் செய்வோர் பிறர் பொருளை
தம்பொருள் செய்தல் நலமாகும்.
120.
வாணிகம் செய்வோர்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம்போல் செயின்.
121 அடக்கம் உடைமை திருக்குறள்- கரந்துறையில்
பாவமாக
பா-பார்த்து பக்குவமாக பழக்கமாக
வ-வரும் அடக்கம்
மா-னிடப் பண்பின் உயர் அறமாகும்; அடங்காமை
க-கடந்து இருளுக்குள் தள்ளிவிடும்.
அடக்கம் உயர் அறமாகும் அடங்காமை
பாவமாகி இருளுக்குள் தள்ளிவிடும்.
121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
122. அடக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்
பெரியது அது
பெ-பெரும் பொருளாக
ரி-ரிதமான
ய-யதார்த்தமான அடக்கமே
து-துணை புரியும் செல்வம்.
அ-அடக்கத்தை விட
து-துணைபுரிவது எதுவுமில்லை.
அடக்கத்தை விட பொருளை காப்பது
வேறெந்த செல்வமும் இல்லை.
122
காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம்
அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு.
123. அடக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்
123. சீரமை
சீ-சீராக அறிந்து அடக்கத்துடன்
ர-ரக வாரியாக என்றும்
மை-மையமாக இருப்பது நன்மை விளைவிக்கும்.
அறியவேண்டியவற்றை அறிந்து அடக்கத்துடன்
இருப்பது நற்பலனைத் தரும்.
123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
124. அடக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்
பெரிது அமை
பெ-ரிய அளவு
ரி-ரிங்காரமாக
து-துணிவோடும் உயர்வோடும் வாழ
அ-அடக்கத்துடன் நிலை திரியாது
மை-மையமாக வாழ்வோரேயாகும்.
அடக்கத்துடன் நிலை திரியாது உள்ளோரின்
வாழ்வு மலையினும் பெரிதாகும்.
124.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
125.அடக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்
யாவருமே
யா-யாவரிடமும்
வ-வணங்கி அடக்கத்துடன்
(இ)ரு-ருப்பது
மே-மேன்மை தரும் செல்வமாகும்.
அனைவரிடமும் அடக்கத்துடன் இருப்பது செல்வர்க்கும் செல்வமாகும்.
125.
எல்லோர்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
126. அடக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்
ஆமை போல
ஆ – ஆக்க பூர்வமாக ஐம்புலன்களையும்
மை- மையப்படுத்துகின்ற செயல், ஆமை
போ- போல அடக்கம் உள்ள மனிதனின்
ல- லட்சியப் பிறப்பில் காவலாக அமையும்.
ஒருவரின் ஐம்புலன்களின் அடக்கமான
மையச்செயல்கள் பலகாலத்துக்கும் பாதுகாவலாகும்.
126.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
127. அடக்கம் உடைமை-கரந்துறையில்
யாகாவாக
யா-யாவற்றையும்
கா-காக்க இயலாமல் போனாலும்
வா-வாயில் நற் சொற்களை சொல்லி வாழ்வில்
க-கற்றுணர்ந்து செல்ல வேண்டும்.
வாயில் கூறும் சொற்களை காக்கப்படவேண்டும்
அவ்வாறில்லையெனில் துயரடைய நேரும்.
127.
யாகாவா் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு.
128 . அடக்கம் உடைமை – திருக்குறள்- கரந்துறையில்
128. ஆகாது
ஆ-ஆயிரமாயிரம் நன்மையும் நாவை
கா-காக்காவிடில் நன்மைகள் தீமையாக மாறி
து-துணை நிற்காது, தீய சொல் ஓன்றினால்.
ஒரு தீச்சொல்லாயினும் பொருட்களின்பயன் அனைத்தும் நன்றல்லாது ஆகி விடும்.
128
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றுஆகாது ஆகி விடும்.
129. அடக்கம் உடைமை-திருக்குறள்- கரந்துறையில்
தீயா! நாவிலா!!
தீ – தீயினால் சுட்ட புண்
யா – யாவருக்கும் உள்ளத்தால் ஆறிவிடும்.
நா – நாவினால் சொல்லும்
வி – விபரித சொற்கள் உள்ளத்தில்
லா – லாவகமின்றி என்றும் நீடித்து இருக்கும்.
தீயின் புண் ஆறிவிடும். நாவில்கூறும்
கடுஞ்சொற்கள் உள்ளத்தினில் ஆறாது.
129.
தீயானால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
130. அடக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்
கலமாக
க-கல்வி கற்று, சினத்தைக் காத்து
ல-லயம்பட, அடக்கத்துடன்
மா-மானிட பண்புகளுடன் இருப்பவரை
க-கலமாக காலமே காத்திருக்கும்.
சினம்காத்து கற்று அடக்கத்துடன் இருப்பவனை நன்மை செய்ய முறையாக காலமே காத்திருக்கும்.
130
கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
131
மதி ஓயாது.
ம-மக்களின் உயிரை விட ஒழுக்கம் உயர்ந்த
தி-திறமையாக சிறப்பாக கருதப்படுவதால்
ஒ- ஒழுக்கத்தை
யா- யாவரும் கடைபிடித்து
து – துவர(மிக நன்கு) மதிக்கப்பட வேண்டும்.
ஒழுக்கம் அனைவருக்கும் மேன்மை தருவதால் உயிரைவிட உயர்வாக கருதப்படும்.
131
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும்.
132. ஒழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்
கருதுவது அது
க – கண்ணும்
(க)ரு-ருத்துமாக ஒழுக்கத்தின்
து-துணையுடன் அறத்தை கடைபிடித்து
வ-வளர்வதும்
து-துவண்டு விழாமல்
அ-அதையே சிறந்தது என ஆராய்ந்து
து-துணை கொள்வோம்.
ஒழுக்கத்தை காத்து எது சிறந்ததென ஆராய்ந்து
அதையே சிறந்ததென துணைக்கொள்வோம்.
132.
பரிந்துஒம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை.
133. ஓழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்
ஆகுக
ஆ-ஆக்கபூர்வ ஓழுக்கம்
கு-குடிபெருமையை காத்து அறங்களில் சிறந்தென
க-கடைபிடிக்கும் அறமாக விளங்கும்.
ஓழுக்கம் குடிப் பெருமையை உயர்த்தும்
இழுக்கம் தவறுதலுக்கு இட்டுச்செல்லும்.
133.
ஓழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
134. ஓழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்
134. குலமது
கு-குன்றாப் பண்புகளுடன்
ல-லட்சியத்துடன்
ம-மனிதர்கள் ஒழுக்கத்தின்
து-துணையுடன் இருப்பதே சிறந்தது.
பார்த்து நடப்பவன் கற்றதை மறந்தாலும்
ஒழுக்கம் குன்றாமல் இருப்பதே சிறந்தது.
134.
மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும்.
135. ஒழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்
இல ஆக
இ-இருக்கும் வரை ஒழுக்கத்தை
ல-லட்சியமாக கொண்டவர்கள்
ஆ – ஆக்கம் பூர்வ வாழ்வு வாழ்ந்து தன்
க – கடமையாற்றுவார்கள்.
பொறாமை உடையோர் ஆக்கமிலாததாகி விடும்
ஒழுக்கம் இல்லாதோரிடம் உயர்விலாது.
135.
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
136. ஒழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்
136. விலகா
வி-விரும்பி ஒழுக்க நெறியை
ல-லட்சியமாகக் கொண்டு
கா-காப்பவர்கள் மனவலிமையுடைய நல்லோராவார்.
ஓழுக்கத்தை மனவலிமையுடையோர் கடைபிடிப்பர்
தவறினால் குற்றமாகும் என்றறிவர்.
136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
137. ஒழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்
தகாது வருமே
த-தரமான ஒழுக்கம்
கா-காக்கும் மேம்பாட்டின்
து-துணையினால்.
வரு-வருமே பழி
மே-மேம்பாடும் அடையாது இழுக்கத்தினால்.
நல்ஒழுக்கம் மேன்மை தரும்; இழுக்கத்தினால்
பழியே பெருகும்.
137.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
138. ஒழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்
138. நல விதை
ந-நல்ல ஒழுக்கம்
ல-லட்சியத்துடன்
விதை-விதைக்கப்படும் பொழுது
நல்லுறவாகும் நன்றியுடன்.
நல்ல ஒழுக்கம் நல்விதையாகும் தீயொழுக்கம்
பாவமாகி துன்பம் தரும்.
138
நன்றிக்கு வித்துஆகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
139. ஒழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்
139.சொலலாகாது
சொ-சொற்களிலும் தம் ஒழுக்கத்தை
ல-லட்சியமாக் கொண்டவர்களுக்கு
லா-லாவகமாக தம் வாய் சொல்லும்
கா-காத்து
து-துணை நிற்கும்.
ஒழுக்கம் உடையவர்கள் தவறியும் தீய
சொல்லை தம்வாயால் சொல்லமாட்டார்கள்.
139.
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.
140. ஒழுக்கம் உடைமை-திருக்குறள்-கரந்துறையில்
140.
கருதுபவராக
க-கற்றலை
ரு-ருசிபட வாழ்தலின்
து-துணைக் கொண்டு
ப-பல நூல்களை கற்று
வ-வந்த போதிலும்
ரா-ராஜ்ஜயத்தில் ஒழுக்க நெறியற்றவர்
க-கல்லாதவராகவே கருதபடுவார்.
பல நூல்களை ஒழுக்கநெறியற்றவர் கற்றபோதிலும்
அறிவில்லாதவராகவே கருதப்படுவார்.
140.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
141. பிறன்இல் விழையாமை- திருக்குறள்-கரந்துறை
141. மதி இல
ம-மக்களில் பிறர் மனைவியை விரும்புவது
தி-திருட்டுத் தனமாக ரசிப்பது என்பது
இ-இவ்வுலகில் அறநெறி காப்பவரின்
ல-லட்சியமாக இராது.
பிறர் மனைவியை அறநெறி காக்கும்
நல்லோர் விரும்பமாட்டார்கள்.
141
பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார் இல்.
142.
பிறன்இல் விழையாமை-திருக்குறள்-கரந்துறையில்
142. பேதமாக
பே-பேறு பெற்ற அறம் பொருளுடையோர்
த-தரம் குறைந்து அடுத்தவர் மேல் காமமுற்றால்
மா-மானிட பண்புகளற்று பேதையராக
க-கயவராக இருப்பர்.
அறத்திறன் உடையோர் அடுத்தவர் மேல்
காமமுற்றால் பேதையுடையோராக இருப்பர்.
142.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
143.
பிறன்இல் விழையாமை-திருக்குறள்-கரந்துறையில்
143. தீமையாகுமே
தீ-தீமை எண்ணத்துடன்
யா-யாதொரு இல்லாள்
கு-குடும்பத்திற்குள் சென்றால்
மே-மேன்மையுராத இறந்தவராகவே கருதப்படுவர்.
அடுத்தவரின் வீட்டில் சென்று தீமை புரிந்தால்
விளிந்தாராகவே (இறந்தவராக) கருதப்படுவார்.
143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்தொழுகு வார்.
144.
பிறன்இல் விழையாமை திருக்குறள் கரந்துறையில்
144. புகாதே
பு-புண்ணியத்தை
கா-காத்து நல்நெறியுடைவராக
தே-தேறி இருந்தாலும் காமுகர் நல்நெறியை இழப்பர்.
எந்த நல்நெறியுடையவராயினும் தினையளவு
காமமுடையோர் நன்னெறியாகாது.
எனைத்துணையர் ஆயினும் என்னாம்? தினைத்துணையும்
தேரான் பிறன்இல் புகல்.
145. ஆகாதெது -திருக்குறள்- கரந்துறையில்
ஆ-ஆகிற காரியம் என
கா-காக்காது, மற்றவரின் இல்லத்தில்
தெ-தெகட்டாது நெறிகளை மீறி நுழைவது
து-துன்பமும் பழியுமே நிற்கும்.
எளிதென எண்ணி நல்நெறியை கடைபிடிக்காதவர்கள்
என்றும் அழியாப்பழியே நிற்கும்.
145
எளிதுஎன இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
146.
பிறன்இல் விழையாமை திருக்குறள் கரந்துறையி்ல்
146. இகவா (நீங்கமாட்டா)
இ- இந்த பகை,பாவம்,பயம் பழி என நான்கு உடைய
க- கயவர்கள் நெறி தவறி பிற இல்லாளிடம்
வா-வாழ்பவர்களின் குற்றங்கள் நீங்காது.
பகை, பாவம், பயம், பழி என நான்கு
குற்றங்களும் நெறிகெட்டோரிடமிருந்து நீங்காது.
146
பகை, பாவம், பயம், பழி எனநான்கும்
இகவாவாம் இல்இறப்பான்கண்.
147.
பிறன்இல் விழையாமை-திருக்குறள்-கரந்துறையில்
147. நயவா (விரும்பாத)
ந – நல் அறநெறியுடையவர்
ய- யதார்த்தமாக பழகி பிற இல்லாளை விரும்பாது
வா- வாழ்பவரே ஆவர்.
அறநெறியுடையோன் பிறனியலான் பெண்மையை
விரும்பாதவரே ஆவார்.
147.
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்.
148
பிறன்இல் விழையாமை-திருக்குறள்-கரந்துறையில
148. அதுவே
அ-அறனாவது பிறன் மனை நோக்கா
து-துணை நின்று பேராண்மையுடன்
வே-வேண்டி விரும்பி நிற்கும் ஒழுக்கமாகும்.
பிறன்மனை நோக்கா பேராண்மை சான்றோருக்கான
நிறைந்த ஒழுக்கமாகும்.
148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன் ஒன்றோ? ஆன்ற ஒழுக்கு.
149
பிறன்இல் விழையாமை திருக்குறள் கரந்துறையில்
149. தோயாத(சேராத)
தோ-தோளுடன் மாற்றான் மனைவியுடன்
யா-யாரொருவர் துய்க்க விரும்பாதவரோ அவரே
த-தரமான பல நன்மைகளை பெறமுடியும்.
நலமுடையார் யாரெனில் பிறரில்லாளை
தோள்நலம் துய்க்காதவரே ஆவார்.
149. நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பில்
பிறற்குஉரியாள் தோள்தோயா தார்.
150.
பிறன்இல் விழையாமை திருக்குறள் கரந்துறையில்.
150. நயவாமை( விரும்பாமை )
ந-நயமுடன்
ய-யதார்த்தமாக பிறர்மனைவி விரும்பினாலும்
வா-வாழும் காலத்தில் அறவழியில்லாதோரும் கூட
மை-மையமாக விலகி இருப்பதே உத்தமம்.
அறவழியில்லாதோரும் பிறன்வரையாள் விரும்பினும் விலகியிருப்பதே நல்லது.
150.
151. பொறை உடைமை திருக்குறள் கரந்துறையில்
151. நிலமாக
நி-நின்று நிலைத்து தன்னை இகழ்வாரைப் பொறுக்கும்
ல-லட்சியமாகக் கொண்டு
மா-மானிடர்களின் பண்புகள் நிலம் போல
க-கண்ணியமான மனித குணமாகும்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை
இகழ்வோரையும் பொறுப்பது தலையேயாகும்.
151.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
152. பொறை உடைமை – திருக்குறள்- கரந்துறையில்
152. தீமையா அலசாதே
தீ – தீமையை பொறுத்து
மை-மையப்படுத்தி
யா-யாவற்றையும்
அ-அகற்றி மறந்து
ல-லட்சியக் கோட்டைச்
சா-சார்ந்து
தே-தேர்ச்சி பெறுவது நன்று.
தீமையை பொறுத்தல் நன்று அத்தீமையை
மறத்தல் அதனினும் நல்லது.
152.
பொறுத்தல் இறப்பினை என்றும்; அதனை
மறத்தல் அதனினும் நன்று.
153. பொறை உடைமை-திருக்குறள்-கரந்துறையில்
153. அவமதி
அ-அன்பு இருந்தும்
வ-வரும் விருந்தினரை இல்லாமையால்
ம-மதிக்காமலும் அறியாமையால் மற்றவர்
தி-திட்டுவதை பொறுத்துக் கொள்ளுதலும் நன்று.
இன்மையால் விருந்தோம்பலை விடுதலும் அறிவிலிகளை பொறுத்தலும் வலிமையாகும்.
153
இன்மையுள் இன்மை விருந்துஓரால் வன்மையுள்
வன்மை மடவாப் பொறை.
154. பொறை உடைமை- திருக்குறள்- கரந்துறையில்
154. பொதுவாக
பொ-பொறுமையுடைய
து-துவளாத நிறைந்த பண்புடையோர்
வா-வாழும் காலங்களில் நீங்காமல்
க-கடமையுடன் பாதுகாத்து இருக்க வேண்டும்.
நீங்காத நிறையுடைய பொறுமையுடையோர்
போற்றி பாதுகாக்க வேண்டும்.
154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும்.
155. பொறை உடைமை – திருக்குறள்- கரந்துறையில்
155. மதியாதே
ம-மற்றவர்களை
தி-திட்டுபவரையும்
யா-யாதொருவர் மதிக்கிறாரோ அவரை
தே-தேர்ந்தெடுத்து பொன் போல மதிப்போம்.
தீயாரை மதியாதே தீயோரை பொறுப்போரை
பொன் போல மதிப்போம்.
155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.
156
உமதாகுமே
உ-உமக்கு தீங்கு செய்பவரின்
ம-மனதுக்கு ஒரு நாள் இன்பம்.
தா-தாங்குகின்றவர்களின்
கு-குணநலன்கள் என்றும் புகழும்
மே-மேன்மை தரும்.
தீங்கு செய்பவருக்கு ஒரு நாளின்பம். பொறுமையுடையோர்க்கு
புகழ் என்றும் துணையாகும்.
156.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கு
பொன்றும் துணையும் புகழ்.
157.பொறை உடைமை-திருக்குறள்-கரந்துறையில்
157.நோகாத
நோ-நோநொந்து பிறர் தீங்கிடினும் அவரையும்
கா-காத்து அறன் அல்லாத
த-தரமற்ற செயல்களை செய்யாமை நன்று.
தகாத செயல்களை பிறர் செய்யினும்
அறமற்ற செயல்களை செய்யாதது நன்று.
157
திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று.
158. பொறை உடைமை – திருக்குறள் -கரந்துறை
158.மிகுதியாக
மி-மிகுதியான அளவு தீய
கு-குணங்களுடன் செய்தாருக்கும்
தி-திறமையான தம் தகுதியால்
யா-யாவற்றையும் பொறுமையாக
க-கடந்து வென்றிட வேண்டும்.
தம்முடைய தகுதியால் தீயோரையும்
கடந்து வென்றிட வேண்டும்.
158.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தம்
தகுதியான் வென்று விடல்.
159. பொறை உடைமை – திருக்குறள்- கரந்துறையில்
159. தூயவராக
தூ-தூய சொற்களை காக்கும்
ய-யதார்த்தவாதிகள்
வ-வரம்பு கடந்து சொற்களாற்றும்
ரா-ராசியற்ற துறவியரை விட
க-கடந்து தூய்மையுடையவராக இருப்பர்.
நெறிகடந்த சொற்களை பொறுத்துக் கொள்பவர்கள்
துறவியரை விட தூய்மையுடையவரவார்.
159.
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
160. பொறை உடைமை-திருக்குறள் – கரந்துறையில்.
160. உயராத
உ-உண்ணாமல் தவ வாழ்வில்
ய-யதார்த்தமான பெரியவரை
ரா-ராஜ்ஜியம் எங்கும் கூறிடினும்
த-தரமற்ற சொற்களை பொறுப்பவரே உயர்ந்தவர்.
உண்ணாநோன்புடையோரே பெரியவர் எனினும் பிறரின் உன்னதமற்றவைகளை பொறுப்பவரே உயர்ந்தவர்.
160.
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
161.அழுக்காறு-திருக்குறள்-கரந்துறையில்
161. இலாத
இ-இயல்புடன்
லா-லாவகமாக ஒழுக்கத்தை
த-தன் நெஞ்சில் அழுக்காறின்றி இருத்தல் நலம்.
அழுக்காறு இல்லாத ஒழுக்க நெறியை
தன்னில் இயல்பாக்க வேண்டும்.
161.
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
162. அழுக்காறாமை-திருக்குறள்-கரந்துறையில்
162. நிகராக
நி- நிம்மதியாக
க- கற்றுணர்ந்து
ரா- ராசியாக பொறாமையின்றி வாழ்க்கையை
க- கடப்பதற்கு நிகர் வேறொன்றும் இல்லை.
பொறாமை கொள்ளாத மனநிலை பெறும் பேறுகளுக்கு நிகர் வேறொன்றுமில்லை.
162.
விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
163. அழுக்காறாமை-திருக்குறள்-கரந்துறையில்
163. அவராவது.
அ-அறன் ஆக்கமாக
வ-வரும் என்று விரும்பாதவர்
ரா-ராசியாக அடுத்தவருக்கு
வ-வரும் செல்வத்தை கண்டு மகிழாமல்
து-துன்பமென எண்ணி பொறாமைப் படுபவரே.
அறன் ஆக்கமென விரும்பாதெவரும் பிறரின் ஆக்கத்தை விரும்பாது பொறாமைப்படுவார்.
163.
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
164. அழுக்காறாமை-திருக்குறள்-கரந்துறையில்
164. ஏதமாக
ஏ- ஏதும் துன்பம் பொறாமையினால் வருவதை
த- தடம் அறிந்த
மா-மானிடர்களில்
க- கற்றோர் அறமற்றதை செய்யமாட்டார்.
பொறாமையினால் துன்பம் வருவதை அறமற்ற
வழி அறிந்தோர் செய்யமாட்டார்.
164.
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
165. அழுக்காறாமை-திருக்குறள்-கரந்துறையில்
165. பகை அமைவது:
ப-பலரின் ஆக்கபூர்வ
கை-கையகப்படுயத்திய கருதாத செயல்கள் கண்டு
அ-அழுக்காறு அடைபவர்கள்
மை-மையமாக பகை அமைந்து,
வ-வழுக்கி கேடும்
து-துன்பமும் தரும்.
பிறரின் ஆக்கச்செயல்களில் அழுக்காறு காண்பவர்கள்
பகைமையோடு அழிவினை உண்டாக்கும்.
165.
அழுக்காறு உடையர்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடுஈன் பது.
166. அழுக்காறாமை-திருக்குறள்-கரந்துறையில்
166. நலமெது
ந-நல்
ல-லட்சியத்துடன் ஒருவர்
மெ-மென்மையாக கொடுப்பவரை தடுப்பவர், எவ்வித
து-துணையின்றி அவரது சுற்றமும் கெடும்.
ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதினால் பொறாமைப்படுபவரது
சுற்றமும்கூட முற்றிலும் கெடும்.
166.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
167. அழுக்காறாமை-திருக்குறள்-கரந்துறையில்
167. மூதேவி
மூ-மூர்க்க பொறாமை கொண்டோரின் வாழ்வு
தே-தேர்ந்தெடுத்த செல்வமும்
வி-விலகிப் போய் விடும்.
பிறரின் ஆக்கத்தை பொறுக்காதவர்களின்
வாழ்வு செல்வ வளமும் குன்றி விடும்.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
168. அழுக்காறாமை-திருக்குறள்-கரந்துறையில்
168. பாவியா!
பா-பாவமே, பொறாமையால்
வி-வித்தியாச பெறும் செல்வம்
யா-யாவும் தீய வழிக்கு சென்றுவிடும்.
அழுக்காறினால் பெறும் செல்வம் யாவும்
தீவினையினால் அழிந்து விடும்.
168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்,
தீயுழி உய்த்துவிடும்.
169.அழுக்காறாமை-திருக்குறள்-கரந்துறையில்.
169. மேலாக அமை.
மே-மேலும் உயர்பவனின்
லா-லாகவமான அழுக்காறும்
க-கடமையில் நேர்மையுடையவனின்
அ-அழிவும்
மை-மையமாக ஆராயப் படும்.
அழுக்காறு உடையவன் மேலும் உயர்தலும்
நேர்மையானவனின் அழிவும் ஆராயப்படும்.
169.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
170. அழுக்காறாமை-திருக்குறள்-கரத்துறையில்
170.தீராதது
தீ-தீரச்செயலைக் கண்டு பொறாமைபட்டவர்கள்
ரா-ராஜநிலையில் செல்வரானவரும் இல்லை.
த-தரமான ஆக்கச்செயல்கள் செய்து
து-துன்பப் பட்டவரும் இல்லை.
மனதழுக்குடையோர் செல்வந்தரானது இல்லை
ஆக்கமுடையோர் வீழ்ந்ததும் இல்லை.
170.
அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
171 .வெஃகாமை-திருக்குறள்-கரந்துறையில்
171.வேகாதே
வே-வேற்றோர் நல்பொருட்களை நடுநிலையின்றி
கா-காக்காமல் அபகரித்தால் குடும்பம்
தே-தேறாமல் குற்றமே பெருகும்.
நடுநிலையின்றி பிறர் நற்பொருட்களை அபகரித்தால் குடும்பத்தில் குற்றமே பெருகும்.
171.
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
172. வெஃகாமை-திருக்குறள்-கரந்துறையில்.
172. பெருகுது.
பெரு – பெரும் பயன் விரும்புவோர்
கு – குடிப்பழியாகும் செயல்களை நடுநிலையின்றி
து – துணிந்து செய்ய அஞ்சுவர்.
நடுநிலையின்றி பெரும் பயன் விரும்புவோர்
பழியுண்டாகும் செயலை செய்யஅஞ்சுவர்
172
படுபயன் வெஃகிப் பழிப்ப்டுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
173. வெஃகாமை-திருக்குறள்-கரந்துறையில்
173.சுகமது.
சு-சுகமான மற்றின்பம் பெறுவதை தவிர்த்து
க-கற்றறிந்த அறனுடையோர் ஆகாதவைகளை
ம-மறுத்து அறனையே
து-துணையாக கொள்வர்.
மற்றின்பம் பெறுவதற்காக நல்வினைகளற்றவற்றை
அறனுடையோர் விரும்பி செய்யமாட்டார்.
173.
சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
174. தமது புலமே
த-தமக்கு இல்லாமையிலுள்ள சூழலிலும்
ம-மறந்தும்
து-துயர் என கருதாது தம்
பு-புலன்களை வென்ற குற்றமற்ற
ல-லட்சியவாதிகள்
மே-மேலான பிறர் பொருளை விரும்பார்.
இல்லாமையெனினும் புலன்களை வென்ற குற்றமற்றவர் பிறர்பொருளை விரும்பார்.
174
இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
175.வெஃகாமை-திருக்குறள்-கரந்துறையில்
175. அது எது?
அ-அகன்ற அறிவின்
து-துணையால் என்னபயன்
எ-எல்லோரிடமும் அறிவற்ற
து-துன்பமுறு செயல்கள் செய்வதினால்?
எல்லோரிடமும் அற்ப செயலில் ஈடுபடுவாரானால்
பரந்த அறிவிருந்து என்னபயன்?
175
அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
176. வெஃகாமை-திருக்குறள்-கரந்துறையில்
176. அவாவி
அ-அறநெறியில்
வா-வாழ்பவர்களும் பிறர் பொருளை
வி-விரும்பினால் குற்றநெறி சிந்தனையால் கெடும்.
அறநெறியுடையோரும் பிறர்பொருள் விரும்பினால் குற்றநெறிகள் சூழக் கெடும்.
176.
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப பொல்லாத சூழக் கெடும்.
177.வெஃகாமை-திருக்குறள்-கரந்துறையில்
177.வெஃகாதே.
வெஃகா-வெஃகிந்து அடுத்தவர் பொருளை விரும்பி
தே-தேக்கி அனுபவிப்பது நன்மை தராது.
(வெஃகி-கவர்ந்து இழுத்தல்)
அடுத்தவர் பொருளை கவர்ந்து அனுபவித்தல்
பாவத்தின் பயன் நன்மைதராது.
177.
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் வினைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்.
178. வெஃகாமை-திருக்குறள்-கரந்துறை
178. அஃகாமை எது
அஃகா -அஃகாமல்(சுருங்காமல்) செல்வம்
மை -மையமாக பெருகுவதற்கு
எ-எவரது பொருளையும்
து-துணையாக பெறாமல் இருப்பதே ஆகும்.
சுருங்காத செல்வம் யாதெனில் பிறர்பொருளை
விரும்பாதிருத்தலே ஆகும்.
178.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
179. வெஃகாமை-திருக்குறள்-கரந்துறையில்
179. தகுதி அது
த-தரமான நல்வினையும்
கு-குணமும் அறிவும் உடையோரிடம்
தி-திறமை கூடி
அ-அவ்வகையுடனே செல்வமும்
து-துணை நிற்கும்.
நல்வினை அறிந்த வெஃகா அறிவுடையோரிடம்
திறமையறிந்து செல்வம் சேரும்.
179
அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு.
180. வௌவாதே;
வௌ-வௌவக் கருதமால் இருந்தால்
வா-வாழ்வில் மிகப் பெரிய
தே-தேர்ச்சியைத் தரும்.
(வௌவல்-பிறர் பொருளை அபகரித்தல்)
பிறர் பொருளை வெஃகின் வாழ்வில்
பெருமிதத்துடன் வெற்றியைத் தரும்.
(வெஃகின்-விரும்பாதிருப்பின்)
180.
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
181. புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்
181. அவலமா
அ-அறம் கூறாமல் அல்லவை செய்யினும்
வ-வசைபாடி புறங்காறாமல் இருப்பவன்
ல-லகுவாக
மா-மாபெரும் இனிமையாக சூழ்நிலை அமையும்.
அறத்தை பேசாமல் தீமையை செய்தாலும்
பிறரை புறங்கூறாதவர் எனில் இனிமையாகும்.
181
அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது.
182. புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்.
182. நலமே தீதே.
ந-நல்வினைகளின்
ல-லட்சியம்
மே-மேன்மை எனிலும், புறங்கூறின்
தீ- தீவினைகளால்
தே-தேய்ந்தழிந்து பொய்யாகி நகைப்பாகிவிடும்.
புறங்கூறினால் நல்வினையழிந்து சிதைந்து
பொய்யாகி நகைப்புக்குரியதாகி விடும்.
182.
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
183.புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்
183. ஆவது
ஆ-ஆக்கமான அறம் மேன்மையுரும்.
வ-வழக்கமாக பொய்யினை
து-துணிவோடு புறங்கூறி வாழ்தல் சாதலேயாகும்.
புறம்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தல் சாதலே
அறம் என்றும் ஆக்கம் தரும்.
183
புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்.
184. புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்
184. பேசாதே
பே-பேசும் போது கண் முன் அறிவுரை கூறிடினும்
சா-சாடும் போது மறைவில் எம்மொழியிலும்
தே-தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டாம்.
கண்ணெதிரே நன்கு பேசி பின் இல்லாதபோது
அவரை இகழ்ச்சியாக பேசாதே.
184.
கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.
185. புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறை.
185. நீதி பேச
நீ-நீங்கள்
தி-தினம் நல்வினை
பே-பேசுபவரின் உள்ளத்தை புறங்கூறுவதிலும்
ச-சமநிலையற்ற கருத்துக்களின் மூலம் அறியலாம்.
அறக்கருத்து சொல்பவரின் நெஞ்சத்தை புறங்கூறும் புன்மை(இழிவு)சொல்லினால் அறியலாம்.
185
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால் காணப் படும்.
186. புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்
186. அலசி ஆய
அ-அடுத்தவரை பழி கூறுபவன்
ல-லட்சணம், அவனுடைய
சி-சிறப்பியல்புகளை பேசுவதை
ஆ-ஆராய்ந்து பார்த்தால்
ய-யதார்த்தமாக அப்பழியே அவர் மேல் சுமத்தப்படும்.
பிறன் பழி கூறுவோனின் பழியுள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும்.
186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்
187. பக நகுக.
ப-பகையாளர்களிடமும்
க-கலந்து உறவாடாமல் பிரிப்பவர்கள்
ந-நண்பர்களிடமும்
கு-குறை சொல்லி
க-கலந்துறவை மேற்கொள்ளாதவராகவே இருப்பர்.
புறங்கூறிச் சொல்லி விலகப் பண்ணுபவர்
நட்பு மேற்கொள்வதை அறியாதவரே.
187
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
188. புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்.
188. மரபு யாது ?
ம-மற்ற நண்பர்களிடம்
ர-ரக வாரியாக குற்றம் சாட்டி இகழ்ச்சியை
பு-புரிவதையே இயல்பாக கொண்டவர்கள்
யா-யாதொரு அயலாரிடம்
து-துணையாக என்ன செய்வாரோ?
நண்பர்களிடம் குற்றம் காணும் மரபினர்
அயலாரிடம் என்ன செய்வாரோ?
188 .
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
189. புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்
189. வையக சுமை
வை-வையக நல் அறனை
ய-யதார்த்தமாக தாங்கும் பூமி
க-கடிந்து சொல்லும்
சு-சுடு சொல்பவனை, பூமி
மை -மையமாக கருதி அறனென பொறுக்கும்.
அறனை காக்கும் பொருட்டு வையகம் புன்சொல்லை சொல்லுபவனை பொறுத்துக் கொள்ளும்.
189
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை.
190. புறங்கூறாமை-திருக்குறள்-கரந்துறையில்
தீதாகுமா
தீ- தீமையின்
தா-தாக்கம் உண்டாகுமோ அயலார்
கு-குற்றத்தை தம் பிழை என
மா-மாறாக காணமுடியும் உயிருக்கு.
அயலாரின் பிழையை தமதாக காண்போமெனில்
தீமையுண்டோகுமோ நிலைபெறும் உயிருக்கு.
190.
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
191.
பயனில சொல்லாமை-திருக்குறள்-கரந்துறையில்
191. பலரது நலமா
ப-பல
ல-லட்சியமற்ற சொற்களை
ர-ரசிக்கும் படி சொன்னாலும்
து-துஷ்டனாக
ந-நன்மையற்றவைகளை சொல்லுபவன் என
ல-லட்சியமுடையோர் அனைவராலும்
மா-மாண்பின்றி இகழப் படுவான்.
பலர் வெறுக்கும் பயனற்ற சொற்களை
சொல்லுபவன் பலராலும் இகழப் படுவான்.
191.
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப்படும்
192. பயனில சொல்லாமை
192. நலமே இலது-
ந-நன்மையற்ற
ல-லட்சியமற்ற சொற்களை
மே-மேன் மேலும் சொல்லுதல்
இ-இன்புறும் நண்பர்கள்கூட
ல-லட்சிய இல்லாத செயல் எனக் கருதி
து-துன்புற்று தீதென விலகிடுவர்.
பலனில்லாதவைகளை பலரிடம் சொல்வது நீதியற்ற
செய்தலை நண்பரிடம் செய்வதைவிட தீமையாகும்.
192.
பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது.
193.
பயனில சொல்லாமை-திருக்குறள்-கரந்துறையில்
193. நீதி இல
நீ-நீதியற்றவன் என அறிவது
தி-தினமும் அவன் சொல்லும்
இ-இயல்பிலே பயனற்ற சொற்களை
ல-லட்சியமின்றி சொல்லும் சொல்லாகும்.
நீதியற்றவன் எனஅறிவது பயனற்ற சொற்களை
விரிவாக சொல்லும் உரையாகும்.
193
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை.
194.
பயனில சொல்லாமை- திருக்குறள்-கரந்துறையில்
சேத நயமே
சே-சேராத பயனற்ற சொற்களை
த-தரமற்ற ஒருவன் பேசுவானேயானால்
ந-நன்மைகளில் இருந்து விலகி
ய-யதார்த்தமான நீதி கூட
மே-மேன்மையற்றதாகி விடும்.
பலரிடத்தும் பயனற்ற பேச்சு விருப்பமற்று
நீதி இல்லாமை ஆக்கிவிடும்.
194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.
195.
பயனில சொல்லாமை-திருக்குறள்-கரந்துறையில்
195. சீரமை
சீ-சீராக இனிய இயல்புடன்
ர-ரசித்து இனிமையாக பயனற்றவற்றை பேசினால்
மை-மையமான நன்மதிப்பும் அகலும்.
பயனற்றவைகளை சொல்பவரின் சீர்மை இனிய இயல்புடையவரின் சிறப்பும் நீங்கும்.
195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்.
பயனில சொல்லாமை-திருக்குறள்-கரந்துறையில்
196. பதராத
ப-பயன்
த-தராத சொற்களை
ரா-ராசியான தாய் மொழியிலே கூறினாலும்
த-தன்மையற்ற சொல்லை சொல்பவர் பதர் என்போம்.
பயனிலா மொழியிலே சொல்பவனை மனிதனல்ல
மக்கள் பதர் என்பர்.
196
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.
197.
பயனில சொல்லாமை திருக்குறள்-கரந்துறையில்
197. நீதி சாரா
நீ-நீதியற்ற சொற்களை சான்றோர்
தி-திறம்பட கூறினாலும்.
சா-சால்புற்றோர் எந்த வகையிலும் பயனற்ற
ரா-ராசியற்ற சொற்களை சொல்லாமை நன்று.
சான்றோர் இனிமையற்றவற்றை கூட சொன்னாலும்
பயனற்றவற்றை சொல்லாதிருத்தல் நல்லது.
197
நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
198.
பயனில சொல்லாமை-திருக்குறள்-கரந்துறையில்
198. அருமை இல
அருமை-அரும்பயன் ஆராயும் அறிவினோர் இலக்கு
இ-இல்லாதவைகளை எம்மொழிகளிலும்
ல-லட்சியமற்ற சொற்களை சொல்லமாட்டார்.
அரும்பயனை ஆராயும் அறிவுடையோர் பயன்
தராத சொற்களை சொல்லமாட்டார்.
198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
199.
பயனில சொல்லாமை-திருக்குறள்-கரந்துறையில்
199. மாசு
மா-மாண்புடையோர் பயனில்லாத
சு-சுகமற்ற சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்.
மாண்புமிக்க அறிவுடையோர் பொருட்பயனற்ற
சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்.
199
பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீரந்த
மாசறு காட்சி யவர்.
பயனில சொல்லாமை-திருக்குறள்-கரந்துறையில்
200. பேசுக
பே- பேச வேண்டிய பயனுடைய சொற்களை
சு-சுத்தமாக அறிந்ததை
க-கற்றதை பகிர்க,சொல்லாதே பயனற்ற சொற்களை.
பயனுடைய சொற்களை சொல்லுக பயனற்ற
சொற்களை சொல்லாதே.
200
சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்.
201. தீவினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்
201. தீய செயலாகுமே
தீ-தீவினையாளர்கள்
ய-யதார்த்தமாக தீயவை
செயலாகுமே-செய்ய அஞ்சார்; மேலோர் செய்ய அஞ்சுவர்
தீவினையாளர் தீய செயல் அஞ்சார் மேலோர்
பாவச்செயல் செய்ய அஞ்சுவர்.
201.
தீவினையார் அஞ்சார் விழுமியர் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
202. வினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்
202. தீயவை
தீய-தீய செயல்கள்
வை- வையகத்தில் துன்பமானதால்
தீயைவிட அஞ்சப்படும்
கொடிய செயல்கள் துன்பமானதால்
தீயைவிட அஞ்சப்படும்
202.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
203. தீவினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்
203. தலையாய
தலை-தலையாய அறிவு
யா-யாதெனில் பகைவர்க்கும் தீய செயலை
ய-யதார்த்தமாக கூட செய்யாதிருத்தலாகும்.
தீய செயலை பகைவர்க்கும் செய்யாதிருத்தலே
தலையாய அறிவாகும்.
203.
அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
204. தீவினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்
204. நினையாதே
நினை-நினைவு மறந்துக் கூட கேடு
யா-யாதொருவருக்கும் செய்யாதிரு, செய்திடில்
தே-தேர்ந்தெடுத்து அறமே கெடுதியுண்டாக்கும்.
மறந்தும் யாருக்கும் கேடு செய்யாதே செய்திடில்
செய்திடும் அறமே கெடுதியாகும்.
204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
205. வினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்
தீய இல
தீய-தீய செயல்கள் வறுமை என்பதற்காக செய்யாதே;
இல-இல என செய்தால் மீண்டும் வறுமை நிலையே.
இல்லையென்பதற்காக தீயவை செய்யற்க செய்தால் மீண்டும் வறுமை நிலையாகும்.
205:
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.
தீவினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்
206. தீ பகுதி
தீ-தீமை
ப-பக்கத்தில் வர வேண்டாதவன் எந்த
கு-குறுகிய வழியிலும் தீயவை செய்யாதிருப்பது
தி-திடிரென கூட மற்றவர்களிடம் செய்யாதே.
தீமை தன்னைருகே வர விரும்பாதவன்
தீவினைகளை மற்றவர்க்கு செய்யாதே.
206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
207. தீவினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்
207. எது பகை
எ-எவ்வுளவு பெரிய பகையுடையோரும்
து-துணைபுரிந்து தப்ப இயலும்.
பகை-பகையுடைய தீச்செயல் தொடர்ந்து கொல்லும்.
எவ்வுளவு பெரிய பகையுடையோரும் உய்வர்(தப்புவர்)
செயல் பகை வீயாது(தொடர்ந்து) நின்று கொல்லும்.
207
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
208. தீவினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்
208. தீய கெடு
தீய-தீய செயலர்களுக்கு அழிவு நிழல் போல
கெடு-கெடுதலாகி தொடர்ந்து வரும்.
தீய செயலர்களுக்கு கெடுதல் நிழல் போல வீயாது(தொடர்ந்து) பற்றும் தன்மையாகும்.
208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
209. தீவினை அச்சம்-திருக்குறள்-கரந்துறையில்
209. தமது பகுதி
த-தன்னை என்றும் காதலிக்கும்
ம-மனித நேயம் மிக்கவரானாலும்
து-துன்பம் தரும் சிறு
பகுதி-பகுதி தீவினையைக் கூட
துன்னற்க(விட்டொழிக)
தன்னையை காதலனாக நேசித்தாலும் சிறிய தீய
செயலையும் முற்றிலும் விட்டொழிக.
209
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
210. தீவினையச்சம்-திருக்குறள்-கரந்துறையில்
210. கேடு அறிக
கேடு-கேடில்லாதவன் நன்கு வாழ்வதை
அறிக-அறிவது தீயவினை செய்யமாட்டான் என்பதே.
அருங்கேடன் வாழ்வதை அறிவது தீவினை
செய்யாமாட்டான் என்பதேயாகும்.
210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
211.ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்
211. கை உதவி
கை-கைம்மாறு கருதாது உதவி செய்யவும்.
உ-உலகுக்கு தம் கடமையென
த-தரும் மழைக்கு
வி-வியந்து என் செய்யும் இந்த உலகம்
பிரதிபலனை எதிர்பார்த்து உதவி செய்யாதே.
வளம் தரும் மழைக்கு என் செய்யும் இவ்வுலகம்.
211
கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ வுலகு.
212. ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்
212. ‘தமது உதவி’
த-தமது முயற்சியினால்
ம-மக்களில் தகுதியுடையோர்க்கு பொருள்
து-துணையாக அமைவது
உ-உதவியை
த-தகுதியுடையோருக்கு
வி-வியாபித்து வழங்குவதற்கே.
முயற்சியினால் பொருள் பெறுவோர்க்கு
அமைவது தகுதியுடன் வழங்குவதற்கே.
212.
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
213. ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்
213. உதவி அரிதே
உ-உலகத்தில் வேறெங்கும்
த-தரமாக கொடுக்கும் பெறும்
வி-விதத்தில் உதவி செய்வதை காண்பது
அரிதே-அரிதே.
பொது நலனே பெரிது; வானுலகத்தும்
பெறுதல் கொடுத்தலும் அரிதே.
213
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
214. ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்
214. உலக ஒருமை
உ-உலக நடை அறிந்த
ல-லட்சியத்துடன்
க-கடமை புரிகிறவன்
ஒரு-ஒரு உயிரோடு கூடி வாழ்பவன்; மற்றவனை
மை-மையமாக இறந்தவருள் வைக்கப்படும்.
ஒத்தது(உலக நடை) அறிபவன் உயிர் வாழ்பவனாகும்
பிறன் செத்தாருள் வைக்கப்படும்.
214
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
215. ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்
215. உலக நலமா
உல -உலக நலத்தை விரும்பி
க-கற்றறிந்தவன்
நல- நல்ல நன்மையுடன் நீர் நிரம்பிய குளம் போல
மா-மாபெரும் செயல்களில் செல்வனாவான்.
ஊருணி நீர்நிரம்புவது போல உலகநன்மை
கருதுபவன் அறிவுடன் செல்வந்தனாவான்.
215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
216. ஒப்புரவறிதல்-கரந்துறையில்-கரந்துறையில்
216. நயமது
ந-நன்மை தருகின்ற
ய-யதார்த்தமாக வளரும் உள்ளூர்
ம-மரம் கனிந்து செல்வம் தருவது போல
து-துணைபுரியும் நல்லவரிடம் சேரும்.
மரம் உள்ளூரில் பழுத்து பயன் தருவதுபோல நல்லவனிடம் பொருள் சேருவதனாலாகும்.
216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
217. ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்
217. தகைமை(தன்மை)
த-தரமான மருந்தாக மரம் போன்று
கை-கைமாறு கருதா பெருந்தகையோனின் செல்வம்
மை-மையமாக அனைவருக்கும் பயன்படும்.
மிகுதியான பெருந்தகையோனின் செல்வம் மருந்தாக மரம்போன்று தவறாது பயனுறும்.
217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
218. ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்
218. வசதி இல
வ-வளம்
ச-சரியாக அமையாவிடினும்
தி-திறமையுள்ள ஒப்புரவாளர்(பொது நலவாதி)
இ-இல எனும் நிலையிலும் தம்மை உணர்ந்து
ல-லட்சியத்துடன் உதவி செய்ய தளர மாட்டார்.
வசதி இல்லாத காலத்தும் பொதுநலவாதி
கடமையறிந்து தளராது உதவுவார்.
218
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
219. ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்
219. நலமாகாத
ந-நன்மை செய்யும்
ல-லட்சியமுடைய நல்கூர்ந்தவர்க்கு
மா-மாபெரும் பொது நலன்களை
கா-காத்து அமையாத
த-தன்மைக்கு வருந்துவான்.
செய்வதைச் செய்யமுடியாது வருந்தும் தன்மையே பொதுப்பணி ஆற்றுபவனின் வறிய நிலையாகும்.
219.
நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
220. ஒப்புரவறிதல்-திருக்குறள்-கரந்துறையில்
220. பொது தகுதி
பொது-பொது நன்மை கருதி கேடு வருமெனில்
த-தன்னை விற்றாவது
கு-குன்றாத நிலையில் அந்த
தி-திறமை பெறத்தக்க தகுதி உடையதாகும்.
பொதுநன்மை செய்வதினால்
கேடு வருமெனில்
அஃதை தன்னை
விற்றாவது பெறத்தக்க
தகுதியை உடையதாகும்.
220.
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.
221. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்
221. ஈவதே
ஈ-ஈவது இல்லாதோர்க்கு கொடுப்பது ஈகை மற்றவை
வ-வரும் என்று எதிர்பார்த்து
தே-தேர்ந்து வழங்கும் தன்மையுடையது.
வறியோர்க்கு உணவு ஈவதே கொடை மற்றவை
பயனை எதிர்பார்க்கும் தன்மையது.
221.
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து.
222. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்
222. யாசி, தீது
யாசி-யாசிப்பது நல்நெறி எனினும். கொளல்
தீது-தீது, உலகமே இல்லையெனினும், ஈதலை நன்று.
நல்நெறியெனினும் கொளல்(ஏற்றல்)தீது மேல்
உலகமே இல்லையெனினும், ஈதலை நன்று.
222
நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
223. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்
223. இலது கலமே
இலது-இலன் என்று சொல்லுவதற்கு முன்பே ஈதல்
க-கற்றுணர்ந்தோரின்
ல-லட்சிய
மே-மேன்மையுடைமையாகும்.
இலன்என்னும் எவ்வம்(துயரம்) முன் கொடுத்தல்
நற்குடிப் பண்புடையோரிடத்தில் இருக்கும்.
223.
இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள.
224. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்
யாசி யாசி
யா-யாசிப்பவர்க்கு வழங்கி அவர் இன்முகத்துடன்
சி-சிறப்போடு ஏற்க்கப்படுதல் நன்று, அஃதில்லாமல்
யா-யாசிப்பவர் இல்லாமல் வாடுவது துன்பமான
சி-சிந்தனையாகும்.
ஏற்றவர் இன்முகம் காணும் வரை
இனியதன்று ஏற்கப்படுதல்.
224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.
225.ஈகை-திருக்குறள்-கரந்துறையில்
225. தவ பசி
த-தமக்கு
வ-வரும் பசியை பொறுத்தல் வலிமை
பசி- பசியை மாற்றுவார் தவ வலிமையுடையோர்.
செய்யவல்லவர்க்கு வலிமை பசி; அப்பசியை
மாற்றுபவர் தவ வலிமையுடையோர்.
225
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
226. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்
226. அது உதவி
அ-அற்றாரின்(பொருள் இல்லோரின்)பசி தீர்க்கும்
து-துணையாவது
உ- உண்மையிலே
த – தரமான பல பொருள்கள் சேர்க்கும்
வி-விந்தையூட்டும் சேமிக்குமிடமாகும்.
அற்றார் மிகுபசி தீர்த்தல் அஃதுஒருவனுக்கு
பொருள் வைப்பிடமாக உதவும்.
226.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
227. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்
227. அவரது பசி
அ-அடுத்தவர்க்கு
வ-வரும்
ர-ரக வாரியான
து-துன்பமான நோய் தீண்டலரிது
ப-பலரோடு பகுத்து உண்ணும்
சி-சிறப்பான பழக்கம் உள்ளவனை.
பகுத்து உண்ணும் பழக்கமுள்ளவனை பசியெனும்
தீப்பணி தீண்டல் அரிது.
227.
பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
228. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்
228. தராத
த-தம்
ரா-ரசிப்பு பொருட்களை வைத்து இழப்பர்
த-தராமலிருக்கும் இன்பத்தையறியா கொடியவர்
கொடுப்பதால் அடையும் இன்பத்தை அறியாதவர் வைத்திழக்கும் தம்பொருளை தராதக் கொடியவர்.
228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்க ணவர்.
229. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்
229. தாமே
தா-தாங்களாகவே தனியராக உண்ணுவதற்காக
மே-மேலும் பொருள் நிரப்புவது
ஏற்பதைவிட கொடியது.
தாமே தனியராக உண்ணுவதற்காக பொருள்
நிரப்புவது, ஏற்பதைவிட கொடியது.
229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
230. ஈகை-திருக்குறள்-கரந்துறையில்
230. தருவது
தரு-தரும் நிலை இல்லை எனும் போது
வ-வருந்தும் சாவும் நிலை கூட
து-துன்பமில்லை இன்பமாகும்.
கொடுக்கும் நிலை இயலாத போது சாதலும்
துன்பமில்லை இன்பமே.
230
சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
231. புகழ்-திருக்குறள்-கரந்துறையில்
231. இசை அது
இ-இன்பமான
சை-சைகையாகும் உயிருக்கு
அ-அன்புடன் கொடுத்து உதவுவது புகழேயன்றி
து-துன்பமில்லை ஊதியமே.
கொடுத்து உதவுவது வாழ்வு அதுவன்றி
ஊதியமில்லை உயிர்க்கு.
231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
232.புகழ் -திருக்குறள்-கரந்துறையில்
232. அவரவை
அ-அனைத்து நற் சொற்கள்
வ-வரும் நாவில்
ர-ரசிக்க சொல்பவை, இரப்பார்க்கு ஒன்று ஈவாருக்கு
வை-வையகத்தில் என்றும் நிலைக்கும் புகழ்.
உரைப்பவர்(சொல்லுபவர்) சொல்பவையெல்லாம் இரப்பார்(ஏற்பவர்)க்கு ஒன்று
ஈவார்(கொடுப்பவர்க்கு)மேல் நிற்கும் புகழ்
232
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
233. புகழ்-திருக்குறள்-கரந்துறையில்
233. இது மரபே
இ-இணையில்லாத உலகில்
து-துலங்கிடும்
ம-மங்கா புகழ்
ர-ரசனையுடன்
பே-பேராற்றலுடன் பொங்காது நிற்பதொன்று இல்.
இணையில்லா புகழன்றி அழியாது நிற்பது
வேறொன்றும் இல்லை.
233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்.
234. புகழ்-திருக்குறள்-கரந்துறையில்
234. புகுமே
பு-புகழுடைய செயல்களை
கு-குன்றாது செய்வானெனில்
மே-மேலும் உலகப் புகழ் பெறுவர், புலவரை புகழாது.
நிலைத்து நிற்கும் செயலுக்காக உலகமே
புகழும், புலவரை போற்றாது.
234.
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
235. புகழ்-திருக்குறள்-கரந்துறையில்
235. ஆவதாவது
ஆ-ஆக்கமிக்கோர் அழிவும்
வ-வரும்
தா-தாமும் இறப்போம் என்ற
வ-வல்லமையையும்
து-துணையாக கொள்வர்; பிறருக்கு அரியதாகும்.
கேடும், இறப்பும் வருமென வித்தகர்
அறிவர் மற்றவர்க்கு அரிது
235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.
236. புகழ்-திருக்குறள்-கரந்துறையில்
236. புகு; விலகு
பு-புகழுடன் தோன்றி
கு-குணத்துடன் நிலை பெறுக
வி-விரும்பும்
ல-லட்சியப் புகழ்
கு-குன்றும் எனில் விலகு.
புகழோடு தோன்றுக அதில்லாதவர்
அத்துறையில் ஈடுபடாதது நன்று.
236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
237. புகழ்-திருக்குறள்-கரந்துறையில்
237. நோவாத
நோ-நோவது ஏனோ?
வா-வாழ வழி வகை செய்யும்
த-தம் முயற்சியானால் புகழ் அடைபவரை
புகழுண்டாக வாழாதவர் தம்மை நொந்துகொண்டு
தம்மை பழிப்பவரே வருந்துவதுஏனோ?
237.
புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
238. புகழ்-திருக்குறள்-கரந்துறையில்
238. நில வசை
நில-நிலையான புகழ் ஒருவருக்கு இல்லை எனில்
வசை-வஞ்சமே நிலவும்.
புகழ் ஒருவருக்கு நிலை பெறாவிடில்
வையகத்தார் வசை பாடுவர்.
238
வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
239. புகழ்-திருக்குறள்-கரந்துறை
239. புவி இசை
பு-புவியின் வளம் குன்றும்
வி-விளங்குகின்ற
இசை-இசை(புகழ்)இலா யாக்கை(உடல்)
பொறுத்த நிலம்.
குறைஇலா நல்லபயன் குன்றும் புகழ்இலா
யாக்கை பொறுத்த நிலம்.
239
வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
240. புகழ்-திருக்குறள்-கரந்துறையில்
240. வசையாவது
வசை-வசையின்றி
யா-யாதொருவர் புகழுடன்
வ-வளருவதே வாழ்க்கை; புகழின்றி வாழ்வது
து-துன்பத்துடன் வாழ்பவரே.
பழியின்றி வாழ்வாரே வாழ்வார்; புகழின்றி
வாழ்வோர் வாழாதவரே
240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசை
ஒழிய வாழ்வாரே வாழா தவர்.
241. அருளுடைமை-திருக்குறள்-கரந்துறையில்
241. அருமை உடைமை; அழியாது.
அரு-அருள் செல்வமே
மை-மையமான உயர்வுள்ள
உடைமை-உடைமையாகும்
அழி-அழிந்து போகும் பொருட்செல்வம்
யா-யாதொருவருக்கும்
து-துணைபுரியாது.
அருட்செல்வமே செல்வத்தில் உயர்வானது
பொருட்செல்வம் பூரியாரிடமே(இழிந்தார்) உள (இருக்கின்றன).
241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
242. அருளுடைமை-திருக்குறள்-கரந்துறையில்
242. உதவி யாது
உ-உள்ள நல் நெறியை
த-தரத்துடன் ஆராய்ந்து
வி-விழையச் செய்க
யா-யாவருக்கும் அருளுடையராகி
து-துணையாகும்.
நல் நெறியை ஆராய்ந்து அருளுடயராகுக பலநெறி
ஆராய்ந்தாலும் அதுவே துணை.
242
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை.
243. அருளுடைமை-திருக்குறள்-கரந்துறையில்
243.தீயவை இல
தீயவை-தீய உலகம் புகல்
இல-இல்லை லட்சியமுள்ள அருளுடையோருக்கு
அருளுடைய நெஞ்சினை உடையோருக்கு இருள் செறிந்த தீய உலகம் புகுதலில்லை
243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
244. அருளுடைமை-திருக்குறள்-கரந்துறையில்
244. ஏதுவாக
ஏ-ஏற்ற
து-துணையுடன்
வா-வாழும் மற்றுயிர்களை பேணி காப்பது தமது
க-கடமை என்போற்கு அருளாட்சிமை புரியும்.
மற்ற உயிர்களை பேணி ஆள்கின்றவர்க்கு தீவினையஞ்சும் அருள் பெறுவர்
244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
245. அருளுடைமை-திருக்குறள் – கரந்துறையில்
245. உலக மதி
உ-உரிய அருளுடைய
ல-லட்சிய ஆள்வார்க்கு துன்ப
க-கதியில்லை
ம-மக்களில் காற்றின் இயங்குகின்ற
த-திசை மல்லலே(வளப்பம்) உலக சான்று
துன்பம் அருளில்லோர்க்கு இல்லை வளி(காற்று)
இயக்கமே உலக சான்று.
245
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு
மல்லல்மா ஞாலம் கரி.
246. அருளுடைமை-திருக்குறள்-கரந்துறை
246. அவை தீயது
அ-அருள் நீங்கி அல்லவை செய்வோரை
வை-வையகத்தில்
தீயது- தீயது செய்து நடந்து கொள்பவரென்பர்
அருள்நீங்கி அல்லவை செய்தவரை
பொருள்நீங்கிப் பொச்சாந்தார்(மறந்தவர்)என்பர்.
246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்துஒழுகு வார்.
247. அருளுடைமை-திருக்குறள்-கரந்துறையில்
247. அருளது இலாரது.
அருளது- அருளற்றவர்க்கு அவ்வுலகம்இல்லை
இலாரது- பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாதது போல
பொருள்இலார்க்கு இவ்வுலகம் இல்லதாதது போல அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை.
247
அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லைபொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
248. அருளுடைமை-கரந்துறை-கரந்துறை
248. ஆகுதலாக
ஆ-ஆக்கத்துடன்
கு-குணமுடையவராக
த-தரமான பொருட்களற்றவரும்
லா-லாவகமாக அடைவர்
க-கடமையை செய்தாலும் அருளற்றவர் ஆதலரிது.
பொருளற்றார் ஒருகால் பொலிவுடையவராவர்
அருளற்றார் அருமையாக ஆவது அரிதே
248
பொருளற்றார் பூப்பர் ஒருகால்அருளற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது.
249. அருளுடைமை-திருக்குறள்-கரந்துறையில்
249. அருள் இலாத
அருள்-அருள்
இலா-இல்லாதவனின்
த-தரமான நற்செயலை ஆராய்ந்தால்
தெளிவிலாதவன் கற்றுணர்தல் போலாகும்.
ஆராய்ந்து பார்த்தால் அருளில்லாதவன் செய்யும் அறம் தெளிவிலாதவன் கற்றுணர்ந்ததை போலாகும்.
249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டு அற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
250- அருளுடைமை-திருக்குறள்-கரந்துறையில்
250. மெலியது-மெலியவரிடத்தில் தானே
அருள் உண்டாகும்
வலியவர்முன் தன்னை நினைக்க.
மெலியவரின் முன் தானே அருள் பிறக்கும்
வலியவரிடத்தில் தன்னை எண்ணும்பொழுது.
250
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.