நன்றிகள் பல கோடி
தமிழ் மொழி கவி யாலே
இன் சொல் தொடுத்து
பண் ணிசைத் தருள் வாயே
இன்பமும் துன்பமும் கலந்தாலும் நின்
நன் மதிப்பும் புகழும்
எப்பொழுதும் எந் நாளே!
வண்ணத் திருமேனி வார்குழல் பூங்குழலாள்
எண்ணத் திலாடும் புன்னகை விழியாலே
திண்ண மாயொரு பார்வை பார்த்தாலே
விண்ண கத்திரை யெலாம்
என் னகத்தை பார்க்க
மண்ணு லகத்தில் எமை
படைத் தாலும் திருமகளே!
உலக நலனில் உன் தரவும்
பரப்ப
பலப் பல பலன்கள் திசை யெங்கும்
நல் நிலை யகம் பொருள் வளம் சூழ
இல் வாழ்வு அணி சேர்ப்பாய்.