எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய
‘ மறைக்கப் பட்ட இந்தியா ‘
‘ தாகூரின் கல்விமுறை ‘
என்ற தலைப்பு குறித்து விமர்சனம்
‘ சாந்தி நிகேதன் பல்கலைக்கழக வளாகம்
ஒரு பயிற்சி பட்டறை.
இங்கு நாடகம், இசை போன்றவை கற்பிக்கப்பட்டு ஆராய்ச்சி செய்வதற்கும் உருவாக்கப் பட்டது.
மரம் மற்றும் கல்லில் சிற்பம் செய்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
கிராமப்புற வாழ்வு குறித்தும், வேளாண்மை குறித்தும் தனிப் பிரிவாகவும், கணிதம், புள்ளியியல் இயற்பியல், தாவரவியல், உயிரியல், வரலாறு, பொருளாதாரம் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இந்திய கலாச்சாரம், இலக்கியம் வங்காளம் ஆங்கில இலக்கியங்களும் போதிக்கப்பட்டன.
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் தாகூரின் பிள்ளைகள் சேர்க்கபட்டன. இங்கு லட்சக்கணக்கான புத்தகஙுகளைக் கொண்ட நூலகம் இடம் பெற்று உள்ளதையும் விவரிக்கிறார். சீன, ஜப்பான் அரசு வழங்கிய புத்தகங்கள் மற்றும் சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன.
எஸ். ரா எந்தக் குறிப்பையும் நேரில் சென்று பார்த்து அனுபவித்து எழுதும் பழக்கம் கொண்டவர். அதனால்
அவரது பதிப்புகள் அனைத்தும் படித்தோம் எனில் நாம் நேரில் சென்று பார்த்தது போன்ற அனுபவம் படிப்பவர்களுக்கும் ஏற்படும்.
நேரு தமது மகள் இந்திரா காந்தி அங்கு பயிலச் செய்தார். ரவீந்திரநாத் தாகூர் தான் இந்திரா என்ற பெயருக்கு பின்னால் பிரியதர்ஷினி என்ற பெயரைச் சூட்டினார்.
பள்ளிப் பருவத்தில் இருந்து கல்லாரி வரை அனைத்துத் துறைகளும் இந்த ஓரே பல்கலைக் கழகத்திற்குள் இருக்கின்றன ‘
என்ற இதன் தனிச் சிறப்பை குறிப்பிடுகிறார்.
காந்தியும், தாகூரும் நண்பர்களாயினும், அவர்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை பதிகிறார்.
மகாத்மா காந்தி என்ற பட்டத்தை
காந்திக்கு அளித்தவர் தாகூர்.
தாகூர் சுதந்திர போராடத்தில் நேரடியாக பங்கு கொள்ளாததை காந்தியடிகள் விமர்சனம் செய்ததை குறித்து பதிகிறார்.
ஆனால் இ.ஜே. தாம்சன் என்ற ஆங்கிலேயர் தமது நூலில் தாகூர் செய்த வீராவேச பிரசாரங்களைப் பற்றி
எழுதி இருக்கிறார்.
1913-ல் தாகூருக்கு நோபல் வழங்கபட்டது, பின் 1915- ல் ‘ ஸர் ‘ பட்டம் வழங்கப் படடது.
1919ல் ஏப்ரல் 13-ம் தேதி ஜாலியன் வாலாபாக் தொடர் துப்பாக்கி நடத்தப்பட்தை கண்டித்து, ‘ ஸர் ‘ பட்டத்தை துறந்தார்.
இயற்கையோடு இணைந்த கற்பித்தல் முறையில் மாணவனது உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, ஒழுக்க ஆன்மிக வளர்ச்சி ஆகிய மூன்றும் வளர்ச்சியடையும் என தாகூர் நம்பினார்.
இந்த புத்தகம் மறைக்கப் பட்ட இந்திய வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றை வெளிக் கொணர்ந்து உள்ளார்.
வரலாற்றை அறிய, படிக்க வேண்டிய புத்தகம் ஆகும்