மாபெரும் தமிழ்க் கனவு-அண்ணா – இந்து தமிழ் திசை வெளியீடு- M.S உதயமூர்த்தி கட்டுரை

‘மாபொரும் தமிழ்க் கனவு’ –
“இந்து தமிழ் திசை ”
தொகுப்பு நூல் விமர்சனம்-செயல் மன்றம்.

தலைப்பு:
‘இந்தியாவுக்கு வெளியே அண்ணா’-
பதிவர் : எம்.எஸ். உதயமூர்த்தி-

எம்.எஸ். உதயமூர்த்தி தம்முடைய
எழுத்துருவில் குறிப்பிட்ட
ஒரு சில பகுதிகளை
இந்நூலில்

‘அண்ணா முதல்வராக ‘

பொறுப்பேற்றபின்
மேலை நாட்டு பயணங்களில்

“அமெரிக்காவில் அண்ணா”

என்ற பதிவை
ஆவணங்களாக இந்நூல்
தொகுப்பு ஆசிரியர் ‘சமஸ் ‘
மற்றும் பல வல்லுநர்கள்
தொகுப்பாக
வெளியிட்டு உள்ளனர்.

‘பேரறிஞருக்கு மரியாதை’

என
இந்நூலில் கே.அசோகன்,
இந்து தமிழ் ஆசிரியர்
முன்னுரை அளித்து உள்ளார்.

அண்ணா தன் வாழ்நாளில்
என்னென்ன நிகழ்ச்சிகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்து
உள்ளார் என்பதனை இந்நூல்
மூலம் அறிந்து கொள்ளலாம்.

அண்ணாவின்
‘சட்ட மன்ற, நாடாளுமன்ற உரைகள்’
மிகவும் சிறப்பாக
தமிழ்நாட்டின்
தமிழக கனவுகளை
இந்நூல் சிறு
தொகுப்பாக
பதிந்து உள்ளது.

தமிழ் நாட்டிற்கு
என்னவெல்லாம்
மேலை நாடுகளின்
அனுபவங்களில்
இருந்து பெறலாம் என்பதன்
தொகுப்பு இந்த
விமர்சனப்பதிவு.

மாபெரும் கனவு பதிவாக
அண்ணாவின் வருகையை
அமெரிக்காவில் அப்பொழுது
அங்கு குடி இருந்த
இந்திய குடிமக்கள்,
பத்திரிக்கையாளர்களின்
வருணனையை
‘உதயமூர்த்தி’
அவர்கள்
குறிப்பிடுகிறார்.

‘அண்ணாவின்
‘சொல்லும் செயலும் ‘
அவரது
பண்புகளும் குணங்களும்
பேச்சில்
பரிமளிக்கின்றன’

என அண்ணாவைப் பற்றி
விவரிக்கிறார்.

‘ ஏன் காங்கிரஸ் தோற்றது ‘
என்ற கேள்விக்கு
‘நீண்ட நாட்கள்
பதவியில் இருந்ததால்’

எனக் கூறிவிட்டு உடனே

‘ எந்த கட்சியும் அதிகமாகப் போனால்
10 ஆண்டுகளுக்கு மேல்
பதவியில் இருக்கக் கூடாது’

என அமெரிக்காவில் உள்ள
திட்டத்தையும் கூறிவிட்டு

‘ அதிகார போதை
என் மண்டையில் ஏறாமல்
இருக்க வேண்டும் ‘

என்று அண்ணா
பதிலளிப்பதை பதிகிறார்.

‘நாம் பிரச்னைகளைத்
தீர்க்கத்தான் வேண்டும்,
நழுவ முயலக் கூடாது’ என

‘உள் நாட்டு போர்’
அபாயத்தைப் பற்றிய
பிரச்னைகளை
ஏல் கல்லூரி வளாகத்தில்
பதிலளித்ததை
குறிப்பிடுகிறார்.

‘உங்கள் நாட்டுக்கு
ஜனநாயகம்
புதிதல்லவோ’

என்ற கேள்விக்கு

எங்கள் நாட்டுக்கு
மக்களின் பங்களிப்பு
புதியதல்ல எனவும்

2000க்கு முன்பே
பனை ஓலையில்
குடவோலையில்
சமுதாயத் தலைமைத்
தேர்ந்தெடுத்ததை
அண்ணாவுடன் அமெரிக்காவில்
பயணம் செய்திட்ட நாட்களில்
‘அண்ணா ‘ பதிலளித்ததை
‘உதயமூர்த்தி’ அவர்கள்
ஆவணபடுத்துகிறார்.

நேருவும், இந்திராவும்
மொழிக் கொள்கைகளில் எடுத்த
அவசரமுடிவுகளை
அண்ணா பதிலளித்ததை பகிர்கிறார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு
தமிழ்நாட்டு
தேவை குறித்து கேட்டதற்கு
உடனே
120 கோடி தேவை என்று
அன்றைய
தமிழ் நாட்டுத் திட்டத்தையும்
பல தொழில்
முன்னேற்றத் திட்டங்களை
விளக்குவதை
இந்த தொகுப்பில் உதயமூர்த்தி
அவர்கள்
விளக்குகிறார்.

தமிழ் நாட்டு மாணாக்கர்கள்,
அரசுப்பணியாளர்கள்
இயக்க, கட்சி முன்னோடிகள்
படிக்க வேண்டிய
மாபெரும் தமிழ்க் கனவை,

உண்மையில் செயல் படும்
ஆர்வலர்கள்
தத்தம் செயலாற்றலுக்கு உகந்த நூல்.

‘நாடு என்பது
பூகோளப் படம் அல்ல,
அங்கு வாழும்
மக்களின் உணர்ச்சி
தொகுப்பு;

‘நாடு வாழ
நம்முடைய உழைப்பும்
தேவை என்ற
உணர்வு எல்லோருக்கும்
எழ வேண்டும்.’

என்ற அண்ணாவின் வரிகள்

நம்
ஒவ்வொருவரின்
‘மாபெரும் தமிழ்க் கனவு’

நினைவுடன் செயல்படுவோம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA