மோனை உயிரெழுத்து பா
மோனை உயிரெழுத்து பா
அந்நாள் முதலே, சுழலும் புவி
ஆதி மனிதருள் அனைவரின் மரபணு.
இந்நாள் நமது இனிதான அமைப்பு
ஈந்தோர் தொகுப்பின் மூலச் சேர்க்கை.
உண்மை கண்டோர், மேலும் சொல்வர்.
ஊரார் வாழ்த்தும் உயரிய பாங்கும்
என்றும் அன்புடன் கூறுவதே நிலைக்கும்.
ஏனென்று கேட்பதும், அறியும் வழி.
ஐக்கிய முறைப்படி வழங்க இசைவோம்
ஒன்றியதே உயிரிய புவிசார் சுற்று
ஓராயிரம் ஆண்டும் கணிப்பு முறை.
ஔவை வரிகளில் கற்போம்! வாழ்வோம் !!
அஃதே நிலை ஆளும் பண்பாடு.