ஆளும் தரத்தை நிறைவில் பெருக்கு
நாளும் நினைத்து செயலில் பெருக்கு
தோளும் துணையாக வேள்வியில் பெருக்கு
பளுவும் பொருளினை கண்டு பெருக்கு.
தாரம் தமிழொலியால் இசைத்து பெருக்கு
நேரம் காலம் ஆய்ந்து பெருக்கு
ஆரம் புவிசார் இடமறிந்து பெருக்கு
ஓரம் போகும் வழியறிந்து பெருக்கு.
கூட்டலை சைகை நிலையினைப் பெருக்கு
இடரிடத்து கழித்து நோகாது பெருக்கு
தொடரும் ஆக்கம் தொடரட்டும் பெருக்கு
மாடம் பாடம் எதென பெருக்கு.
மாதம் மாறி மாசியில் பெருக்கு
வேதம் விவேக விரைவுப் பெருக்கு
நாத விந்து கலாபப் பெருக்கு
ஊத காலத்தும் உயிரதனைப் பெருக்கு .
தென்மேற்கு பருவத்தில் விதைத்து பெருக்கு
நன்னெறி வேளாண்மை நிலத்தில் பெருக்கு
பொன் நதி வயலினைப் பெருக்கு
இன்சொல் இன்முகத்தை இன்பத்தினைப் பெருக்கு.
வாடி பெருக்கு நிகரின பெருக்கு.
நாடி பெருக்கு நடந்து பெருக்கு
ஓடி பெருக்கு ஓய்வினில் பெருக்கு
ஆடி பெருக்கு பாடி பெருக்கு.