வாழ்க்கை கையைடு .
———————————–
கற்றலே , ஓவ்வொருவரின்
வளர்ச்சி , முன்னேற்றம் .
கற்பதற்கு , படிப்பு ,
ஓர் கருவி.
படிப்பு , வாழ்க்கையை
உணர்ந்து
கொள்வதற்குண்டான
ஓர் பரந்த நிலைப்பாடு .
ஒவ்வொருவரின்
தகுதியை
வளர்ப்பதே ,
சரியான வளர்ச்சி ,
முன்னேற்றம் .
தகுதி = த ரம் ,
கு ணம் ,
தி றமை .
தரத்தை மேம்படுத்துவதே ,
ஒவ்வொருவரின் பிரத்யேக
செயல் .
தரம் , அவரவர்களின்
உடல் செல்களின் அமைப்பினால்
உண்டாகும் ஒர் நிலை .
தரத்தை , மேலும் சீர்திருத்த
நற்குணங்களை
வளர்ப்பதே ,
அடுத்த நிலை .
ஒவ்வொருவரின் தனி்பட்ட
முயற்சியே ,
தரமாகிய , உடல் செல்களின்
அமைப்பில் இருந்து ,
நற்சிந்தனையை , செயலாக்க
உருவாக்கும்
ஓர் பயிற்சி .
PASS = P ersuasion
A nd
S teps ( into )
S ystem .
வாழ்க்கை முறைமையை
அறிதலே , முன்னேற்றத்திற்கு
உண்டான தேர்ச்சி .
- கையேடு தொடரும் . ,
வாழ்க்கை கையேடு – 2
————————————
தரமும் , குணமும்
ஒவ்வொருவரின் அடித்தளம் .
தரமான செல்களின்
தோற்றம் , நிலைப்புதன்மை ,
குணமாக அமையும் .
உயிர்ப்பித்தலே , செல்களின்
ஆதாரம் .
நல்ல சிந்தனை ,
ஓர் சிறந்த செயலுக்கான
வித்து .
நற்சிந்தனை , குணமாக
ஒவ்வொருவரின்
வாழ்க்கை நிலையை
உயர்த்தும் .
தரமும் , குணமும்
முக்கோண வடிவின்
இரு அடித்தள முனைகள் .
முக்கோண வடிவின்
கூரான
மேல் பகுதியே
ஒவ்வொருவரின்
திறமையாகும் .
எனவே , நம்
செல்களின் அடித்தளம்
தரமும் குணமும் .
நம் திறமை ,
நற்செயலுக்கான
கூர்மையான அறிவு .
தரம் , குணம்
திறமை நம் செல்களின்
முக்கோண பரிமாணம் (size).
தகுதி = த ரம் ,
கு ணம்
தி றமை .
நம் தகுதியை ,
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
மேம்படுத்துவோம் .
நிலையான வாழ்வு ,
தரத்தையும் , குணத்தையும்
கொண்டு
நம் , நல்ல திறமையை
வளர்ச்சி பாதைக்கு
கொண்டு செல்வோம் .
தொடரும் கையேடு . , . ,
வாழ்க்கை கையேடு -3
———————————-
தகுதியை மேம்படுத்த,
தன் முனைப்பே ,
முதல் செயலாகும் .
அவரவர்களின் ஆதார குறிப்பை
பதிவதேயே, கல்லிலும்,
ஏட்டிலும் பதித்தோம் .
கல்லில் , தம் ஆதாரத்தை
விளக்கியதால் ,
*கல்வி(ளக்கம் ) *
என குறிப்பிடுகிறோம் .
கல்வி = கல்+வி (ளக்கம்) .
மூதாதையர்களின் விளக்க
குறிப்பே , சமயமாக ,
சமுதாய கருத்துக்களாக
அறிந்து கொள்கிறோம் .
அன்பும் , அறனுமே
நம் பண்பும் பயனும்
ஆகும் .
அறத்துடன் வாழ்வது ,
சரியான ஆன்மீக நிலைக்கு ,
நம் வாழ்க்கையை
இட்டுச்செல்லும் .
ஔவையின் ஆத்திசூடியை
கற்றறிதல் ,
நம் ஆன்ம நேயத்தை
வளர்க்கும் ஓர் உன்னத
பாங்கு .
பட்டமும் , பதவியும்
நம் அறிந்து செயல்படுவதற்கான
ஓர் கருவி .
நாம் அறிந்து கொண்டதை ,
அனுபவத்தை
பதிந்ததனால் ,
ஏடாக மாறின .
ஏட்டில் பதிந்தது ,
எக்காலமும்
அறிவதற்குண்டான
வாய்ப்பு .
கற்றலுக்கு உண்டான
முதல் நிலை, அனுபவமே .
போற்றுவோம் , நல் கருத்துக்களை .
கையேடு தொடரும் . , ,
வாழ்க்கை கையேடு -4
———————————-
நம்உடலின் வளர்ச்சி ,
செல்களின் அமைப்பே .
அவரவர்களின் தனிப்பட்ட
தோற்றம் , செல்களால்
உருவாக்கப்படும் சீரமைப்பே .
செல்களை மேலும் வளர்ச்சி
பெறச்செய்வது , நாம்
உண்ணும் ஆகாரமே .
உடலும் , உள்ளம்
வளர்ச்சி பெறுவது ,
நம் பெற்றோர்களின்
பெரு முயற்சி .
எங்கு வளர்கிறோமோ ,
அந்தந்த மொழி ,
கலாச்சாரம் ,
நம்மில் உருவாக்கப்படும் .
நல்ல பல மாற்றங்கள் ,
ஒவ்வொருவரின் வாழ்வில்
தோன்றும் அரிய
நிகழ்ச்சிகள்.
சுற்றுப்புற சூழ்நிலை ,
நம் வாழ்வின் தரத்தை
நிலை நிறுத்தும்
ஓர் பொக்கிஷம் .
ஒரே உடல் ,
ஒரே தோற்றம்
ஒரே பதமாகிய
இப்பிரபஞ்சம் .
நம் வாழ்வுக்கு
ஆதாரம் ,
காற்று , நீர் ,
நம் உடல் ,
நம்மை இயக்கும்
எரி பொருளாகிய சக்தி ,
நாம் இருக்கும்
இப்பிரபஞ்சமாகிய
ஒரே பதம், நம் உடல் .
நாம் உணரும் ,
ஒவ்வொரு
நிலையும்
எண்ணிலடங்காதவையே .
உடலும் , உயிரும்
ஒருங்கே வளருவதே
நம் தோற்றம் ,
நம் வளர்ச்சி .
நற்குணங்களுடன்
வாழ்வோம் .
நல்ல தகுதியை
பெறுவோம் .
கையேடு தொடரும் .
வாழ்க்கை கையேடு – 5
————————————–
நம் செல்களினால்
உருவாகும் , தரமும் ,
குணமும் ,
திறமையினால்
வெளிப்படும் .
நம்
கட்டளை , மந்திரம்
தரத்தையும் ,
குணத்தையும்
மேம்படுத்துவதே .
நற்குணங்கள் ,
நாளும் வளர்கின்ற
ஓர் அற்புதம் .
திறமை ,
நம்மை வளர்க்கும் ,
ஓர் இயந்திரம் .
நல்ல பயிற்சி தான்
என்றும் சிறந்து
விளங்கும்
நம் நிலை .
பயிரிடுவோம் ,
நல்ல தரத்தையும்
குணத்தையும் .
நல்ல பழக்கம் ,
கற்று உணர்ந்து
செயல்படுதலில் ,
நன்மையை
தோற்றுவிக்கும் .
வளர்ச்சி ,
என்றும் நம் தரத்தையும்
குணத்தையும்
ஓர் கருவி.
திறமைதான்
நமது செல்வம் .
வாழ்க்கை கையேடு – 6
————————————-
திறமை தான் நமது
செல்வம் .
திற(உன் )மை(யத்தை) .
திறமையை வெளிகொணர்வது
உங்களின் தனிப்பட்ட முயற்சியே .
உங்களின் தரத்தையும் ,
குணத்தையும்
செயல்படுத்துவது .
திறமையே .
திறமை , ஒவ்வொருவரின்
தனிப்பட்ட முயற்சி .
ஒவ்வொருவருக்கும் ,
திறமை தான்
பொக்கிஷம் .
திறமையின் ,
திறவுகோலே
செயல் தான் .
திறம்பட
செயல்படுத்துவோம் ,
நம் திறமையை .
நமது திறமை ,
அனவருக்கும்
பயன்படுவதாக
இருக்கட்டும் .
தொடரும் கையேடு . ,
வாழ்க்கை கையேடு – 7
————————————-
கல்வி , தகுதியை
வளர்க்கும் .
செல்வம் , செயலை
மேம்படுத்தும் .
வீரத்தின் வெளிப்பாடு
சேவையே .
*தகுதியும் , செயலும் ,
சேவையும் *
மக்களின்
நிரந்தர அடிப்படை
தொடர் நிகழ்ச்சிகள் .
இத்தொடர் நிகழ்ச்சிகள் ,
ஒவ்வொருவரின்
வாழ்க்கையை
அமைக்கும்
தேவையான கடமைகளாகும் .
செயலே , பொருள்
ஆதாரத்திற்கு
ஊன்றுகோல் .
* செயலாக = செ வ்வனே
ய தார்த்தமாக
லா வகமாக
க டமையாற்றுவதே .*
செயலே , பொருள் உருவாக்கம் .
பொருள்கள் அனைத்தும்
பிரபஞ்சமாகிய
ஒரே பதத்தின்
உடைமை .
- அந்த * ஒரேபத *
உடைமையில்
தொடர்ச்சியாக
பணியாற்றுவதே
நம் கடமை .
வாழ்க்கை கையேடு – 8
————————————–
வாழ்க்கை புரியாத புதிர் .
புரிந்து கொள்ளுதலே உயர்வு .
நம் உடலும் , உயிரும்
செல்களின் பரிணாம
தோற்றம் .
செயல்களின்
கட்டுபாட்டில்
இயங்கும் நம் தசைகள் ,
உணர்வின்
இயக்க
புரிதல்,
நம் உடல்
பருவ மாற்றத்தின்
நிலை .
இளமை பருவம் ,
இயங்கும் பருவம் .
முதுமை தோற்றம் ,
இயக்கும் பருவம் .
இயங்குவதும் ,
இயக்குவதும்
நம் இன்றியமையாத
நிலை .
இயக்குவோம் ,
நல்ல செல்களின்
வடிவை .
புரிந்து கொள்வோம் ,
நம் உடல் , உயிர்
மாற்றத்தின் நிலையை .
வாழ்க்கை கையேடு – 9
————————————-
தேடல் , ஆன்ம அமைதியும் ,
சேவையின் தேவையும் .
ஆன்ம அமைதியே ,
அனைவரின் வழிபாடு .
சேவை செய்வதே ,
நமது தேடலின்
முக்கிய
நோக்கம் .
சேவையின் தேவையை ,
கலந்து உரையாடுதல்
எக்காலத்திற்கும்
பயன் தரும் .
ஆன்மீக தேடலில்
இசையே பிரதானமாக
கருதுகிறோம் .
இசை = இ னிமையின்
சை கை .
இசை = இ றைவனின்
சை கை கோட்பாடு .
கோயில் வழிபாடு ,
அனைவரையும்
ஆன்மீகத்துக்கு
இட்டு செல்லும் வழி .
சேவை = சே ர்ப்போம்
வை யகத்தில் .
தேவை = தே டுவோம்
வை யகத்தில் .
சேவை ,
நாம்
பெற்றதை ,
பகிர்ந்து
அளிப்பதாகும் .
சேவையின் தேவையே
நமது தேடலாக
இருக்கட்டும் .
பொருள் ,
அடிப்படை
தேவையை
பூர்த்தி
செய்வதாக
இருக்கட்டுமே .
வாழ்க்கை கையேடு – 10
————————————–
நேரமே = நே ர்த்தியான
ர கவாரியான
மே ன்மைக்கு .
——————————————–
மானிடர்கள் பயன்படுத்தும்
மேன்மைக்குரிய கருவி.
இயற்கையின் பங்களிப்பே ,
நேர்த்தியான நேர
மேலாண்மை .
நாம் இருக்கும்
இடத்தை ,
சுழலும்
பூமியில் ,
ரக வாரியாக
காட்டும் .
360 ் அளவையும்
துல்லியமாக
காட்டும்
நம் வாழ்க்கை
ஓட்டமும் ,
நேரத்தின்
ஊடாக
செல்லும் .
நேரம் அறிந்து
செயல்படுதல் ,
நம் வாழ்க்கை
பகிர்வுக்கு
ஓர் நிலை கண்ணாடி .
நேரமே ,
நம் எல்லோருடைய
வாழ்நாளிலும்
தொடரும் ,
ஓர் ஓட்ட பந்தய
நிகழ்ச்சி .
நேரம் ,
நாம் செல்லும்
வாழ்க்கையின்
செல்வம் .
வாழ்க்கை கையேடு – 11
காலங்கள்
—————–
ஒவ்வொருவருக்கும்
இளமை பருவம் ,
இனிமையான அனுபவம் .
பெற்றோர்களின்
ஆதரவும் , பாராட்டுதலும்
சிறப்பாக இருக்கும் ,
இளமை பருவத்தில் .
இளமை கால லட்சியம் ,
பெரியோர்களின்
வளர்ப்பே .
இளமை காலத்தில் ,
அறிவு , ஆற்றல்
மிளிரும் தன்மை ,
மொழி மற்றும் கலாச்சாரத்தின்
தூண்டுகோலே .
சமுதாய நோக்கு ,
கற்றலிலும் ,
அனுபவத்திலும்
வெளிப்படும் .
காலமே = கா க்கும்
ல ட்சியத்தின்
மே ன்மைக்காக .
இளமை கால குறிக்கோள்கள் ,
சமூக வரையறையே .
சமய கோட்பாட்டுகளும் ,
பழக்கத்தினால்
உருவாகுபவையே .
சமய நோக்கும் ,
பழக்க வழக்கத்தின்
அடிப்படையே .
வாழ்வின் அமைப்பே ,
சமுதாய வழிமுறைகளே .
சமுதாயமே = ச மமான நோக்கு ,
மு ன்னேறத்திற்காக ,
தா மே
ய தார்த்தமான முறையில்
மே ன்மையடைபவயே .
சமமான பார்வை நோக்கு ,
கற்றலினாலும் ,
அனுபவத்தினாலும்
பெறுபவையே .
மனிதர்களின்
வரலாற்றில் ,
சமுதாயத்தை ,
யதார்த்தமான
வகையில்
மேன்மையடைய செய்யும் ,
ஒவ்வொரு
பருவகாலங்களின்
அமைப்பும் .
கையேடு தொடரும் . ,
வாழ்க்கை கையேடு – 13
—————————————-
செய்க பொருளை
——————————
வாழ்வதற்கு தேவையான
பொருட்களை செய்வதே
நமது சரியான மேன்மை .
அதிக உற்பத்தி என்பதைவிட
தேவையான பொருட்களை
நமக்கு , என்றும் முதலிடம்
பெறும் .
அதிக லாபமே =அ டுக்காக
தி னமும்
க டமையாற்றுவதில்
லா வகமாக
ப ணத்தின் மூலம்
மே ன்மையடைவது
வியாபாரமா ? = வி னையால்
யா வருக்கும்
பா ங்காக
ர கவாரியாக
மா னிடரின்
– தேவையை
– பூர்த்தி செய்வது .
அதிக லாபமே வியாபாரமா ?
வியாபாரம் , மக்களின்
தேவையை பூர்த்தி செய்வதே .
லாபம் ஈட்டுவது ,
அடுக்கு
முறை சுழற்சியில்
இருப்பதே ,
அனைவருக்குமான
நலமாகும் .
ஒரு சாரார் பணம் ஈட்டுவது மட்டுமே ,
வியாபாரமா என்பது
கேள்விகுறியே .
பொருள்தான் ஆதாரம் .
லாபம் என்பது ,
கண்ணுக்கு புலப்படாத
ஓர் குறியீடு .
பொருள் முதன்மை
பெறுதல் அனைவருக்கும் நலமாகும் .
ஒரு சாரர்கள்
பயன்பெறுவது தான் ,
பொருளாதார முன்னேற்றமா
என்பது
என்றும் கேள்விகுறியே .
எங்கும்
இயற்கையின் ஆதாரமே ,
பொருள்களாக மாறும்
தன்மை உடையவைகளாகும் .
செய்வோம் பொருள்களை !
நலம் பெறுவோம் ,
நாம் கடமேயாற்றுவதில் .
வாழ்க்கை கையேடு – 14
————————————–
தலைமை செயலகமே
————————————-
நம் அகத்தின் தலைமை
செயலகம் , மூளை .
நம் செயலுக்கு உத்வேகமே ,
மூளை நரம்புகளின் ஆதிக்கம் .
நமது அகத்தின் கட்டளை
இடும்
எஜமான் .
நினைவுகளின் ,
தொடர்
இயக்கம் .
தலைமை செயலகமே =
தலை யே
மை யமான
செ யலாற்றலுக்கு
ய தார்த்தமான
ல ட்சியத்துக்கும் ,
க டமை புரிந்து ,
மே ன்மையாற்றக்கூடியவை .
நமது அங்கத்தை ,
ஆளும்
செயல் மன்றம் ,
மூளை .
அமிக்டாலா என்று
சொல்லக்கூடிய மூளையின்
பதிவேடு , நமது
அங்க உணர்ச்சிகளுக்கான
சாதனை-தாங்கி .
நம் உடலை காக்கும்
மிகவும் பத்திரமான
பதிவேடு .
நம் செயலாற்றலுக்கும்
யதார்த்தமாக , நம்
லட்சியத்துக்கு
இட்டு செல்லும்
வழி காட்டி .
ஒவ்வொருவரையும் மேன்மையடைய
செய்யும் , நம்
வாழ்வின் பெட்டகம் .
காப்போம் ,
நம் தலைமை செயலகத்தை .
கையேடு தொடரும் . ,