சூழலாளாதாரம் 2 புவி –
வீடும் நாடும்
அடுக்கடுக்காய் தகவல்கள் வந்தேறுவதே படிநிலை
மிடுக்காய் நிற்கும் மலை மேடு
தொடுத்த தொடரில் பள்ளத்தாக்கில் நீர்
நடுநிலை நின்றதே சமவெளி வாய்ப்பு.
வாய்ப்பு கிடைத்தலில் வீட்டின் கட்டுமானம்
நோய்நொடி அண்டாது பேரின்ப வாழ்வும்
தாய் தந்தை ஆசான் சொல்லில்
ஆய்ந்து தேர்ந்தெடுத்த செல்களில் செல்லும்.
சுற்றம் சூழும் நட்பே நாடு
வற்றாத தாவரத் தோற்றப் பொலிவு
ஊற்றுப் பெருக் கெடுக்கும் ஊரணி
தேற்றம் கொண்டே தொகுக்கும் சேவை.
சேவை சேர்க்கும் வையகத்தில் நாளும்
பாவை பாதுகாப்புடன் வையகத்தில் தேவை
நாவைத் தொடுத்திடும் முயற்சிகள் பலவுண்டு
அவை இவையென பற்றாதிருந்து பற்றுக!