கரு மேகம்
——————–
நீ , கருப்பா என உனைக்காண விண்ணிற்கு
வர எண்ணினேன் .
விண் ஊர்தியிலிருந்து சாளரத்தின் வழியாக
உனை ஆவலாய் தேடினேன் .
எங்கும் வெண் மேகமே கண்டேன் ;
கரு மேகத்தை எங்கும் தேடினேன் .
வெண் மேகமும் நீலமும் தான்
எங்கும் கண்டேன் !
வெண் மேகமாக இருந்த நீ ; சிறு தூரம்
சென்றபின் கருமேகமாக ஆனாய் ?
விண்ணில் இருந்த நீ, நீராக
எம்மைப்போல மண்ணுக்கு வரத்துடித்தாய் ;
நீ கீழே வருவாய் என இருந்தேன் ;
மண்ணில் விழாமல் கடலில் விழுந்தாயே !
உம்மை புரட்டி எடுத்த காற்று
தள்ளிக்கொண்டு போய், கடலில் விழ வைத்ததோ!
கரு மேகமே , எப்பொழுது மீண்டும் மழையாய்
வருவாய் என காத்து இருக்கிறேன் .