Listen to the most recent episode of my podcast: நிலம், என்ற சொல்லின் பொருள் https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/ep-ehsl3a
Author: THANGAVELU CHINNASAMY
கணம் இனி, கணினி,எண்ணில் எணினி
கணம் இனி – கணினி ;எண்ணில் எணினி-
உலகமயச் சூழலில் கற்றல் கற்பித்தலும் கணினியில்,எணினியில் உருவாகும் கலைச் சொல்லாக்கச் சவால்களும்:
ஆய்வுச் சுருக்கம்:
ஒவ்வொரு காலத்திலும் கற்றல், கற்பித்தலும் மனித இன வளர்ச்சியின் நிலைப்பாடுகள். இந்த ஆய்வுக் கட்டுரை கணினி தமிழ் எழுத்துருக்கள் எவ்வாறு அடிப்படை எழுத்து, ஒலி உருபன்களாக மாறி, சொற்களில் நிலைப் பெற்றது என்பதை அறிய உதவும். மேலும் இணையத் தள சேவை இன்றைய ஏன் தேவை என்பது குறித்த பதிவாகும்.
சொல் ஆக்கம் மரபு வழியில் இலக்கை அக்கணமே மொழி மூலம் புரிந்து கொள்ள எழுத்து வடிவில் பயன்படுத்தும் கற்றல் முறையில் நெறி படுத்துவதாகும். பல இரு எழுத்துக்களைக் கொண்ட தமிழ் சொற்கள் எவ்வாறு விரிவடைந்து அந்தந்நத கால சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுகிறது என அறிவோம். மக்களுக்கு அதன் ரசனையை மேலும் விரிவாக்கம் செய்வதே மரபு ஆகும்.
மரபு என்ற சொல் உருவாக்கம்,
ம-மக்களின்
ர-ரசனையை
பு-புரிதலே ஆகும்.
முதலில் ஒலி உருவம் பெற்று அதனை புரிந்து கொண்டு, பின் வரி வடிவமாகி, நிலைப் பெற்று, சொல்ஆக்கம் பெற்றது நாம் அறிந்த நிதர்சன உண்மை.
காலந்தோறும் எழுத்துருக்கள் எவ்வாறு புரிந்து கொண்டு ஒரு சில வேர் சொற்களில் இருந்து உருவாகிறது என்று பார்ப்போம்.
முன்னுரை:
புதிய கருத்துக்கள், சொற்களில் பயன்படுத்த வேண்டிய சொற்களை பிற மொழிகளிலும் இருந்து மொழி பெயர்த்தும், புதிய சொற்களின் உருவாக்கமே சொல்லாக்கம் எனப்படும்.
சொல் ஆக்க முயற்சிகள், புதிய சொற்கள் உருவாக்குதல், துறை சார்ந்த சொற்கள் உருவாக்குதல் மொழி பெயர்ப்பு சொற்கள் என வகை படுத்த பட்டு உள்ளது.
சொல் மரபு வழியில் பயன்படுத்தி, மக்களின் ரசனையை புரிய வைப்பதே மரபு வழி சொல் ஆக்கம் எனப்படும்.
முதல் எழுத்தும், சார்பு எழுத்தும் சேர்ந்து எழுத்தின் வகை இலக்கணம் உருவாகிறது.(*1)
இந்த கட்டுரையில் கணினி, எணினி என்ற சொல் ஆக்க முறைமைகள் எப்படி அடித்தளமாக அமைந்து இருக்கிறது.
ஒரு பொருள் செயல், இயல்பு, நோக்கம், அமைப்பு, சிறப்பு, பயன்பாடு, குறியீடு, சுருக்கம் என்று சொல் முறைமைகளை அறியலாம்.
இந்த ஆய்வுக் கட்டுரை உலகமயச் சூழலில் கணினி இனி -எணினி இனி கற்றல், கற்பித்தல் அதன் மூலம் உருவாகும் கலை சொல்லாக்கத்தை அடிப்படையாக கொண்டு உள்ளது.
கணிதம் கண நேரத்தில் முடிவு எடுக்கும் மனித மூளையின் செயல் ஊக்கி.
தமிழ் மொழியில் கணிதம் என்ற சொல் கண நேரத்தில் முடிவு எடுக்கும் ஒரு சக்தி வாய்ந்த கருவி.
கண நேரத்தில் இதமாக, மனித இனத்திற்கு இதமாக பயன்பட்டதால் கணிதம் என்ற சொல்லாக்கம் தமிழ் மொழியில் உருவாகி இருக்கிறது.
மேலும் கண்ணில் மூலம் மூளை நரம்புக்குள் செலுத்தி கண நேரத்தில் இதமாக கணிக்கப்படுவதால் கணிதம் என்று அழைக்கிறோம்.
தமிழ் சொற்களின் சொல்லாக்கம் அந்தந்த எழுத்துக்களின் அமைப்பில் உருவாக்கப்படுவது தமிழ் மொழிக்கும் உரிய தனிச் சிறப்பு.
தமிழ் மொழியின் எழுத்துக்களின் ஆராய்ச்சி தமிழ் மொழி சொல் உருவாக்கத்திற்கு மிகவும் பயன்படும்.
கணினி சொல் உருவாக்கம்:
கணிதம் என்ற சொல் உருவாக்கத்தை காண்போம்.
கண் என்ற சொல்லில் இருந்து கணி, என்ற சொல் ‘ கண் ‘ உடன் (இ)தம் ஆக கணிதம் என்று ஆவதை நாம் அறிகிறோம்.
விரிவாக்கம்: கண்+(இ)>கணி; இதம்>(இ)தம்=கணிதம்
கண்+(இ)= கணி என்று ஆகிறது.
இதம் என்ற சொல்லில் ‘ இ ‘ என்ற எழுத்து மறைந்து ‘ தம் ‘ என்ற சொல் உருவாக்கம் ஆகிறது.
கண்(இ)=கணி + (இ)தம் = கணிதம்
கணினி சொல் உருவாக்கம்
கண் இனி, என்ற இரு சொற்கள் இணைந்து
‘கணனி ‘ என்ற சொல்லாக்கம் எப்படி அமைகிறது என்று காண்போம்.
கண, இன் என்ற சொல்
இணைந்து கண+(இ) என்ற கணி என்று ஆனது.
‘ இன் ‘ என்ற சொல்,(வேற்றுமை உருபு, தொல்காப்பியம், எழுத்து அதிகாரம்-114)
இ என்ற எழுத்து கண என்ற சொல்லில் புணர்ந்ததால், கணி என்று ஆகிறது.
‘ இன் ‘ என்ற சொல்,இனி என்று ஒலித்து ‘ இ ‘ என்ற சொல் மறைந்து,
‘ கணினி’ என சொல்லாக்கம் பயன் உருவில் தமிழில் பயன்படுத்தப்படுகிறது
எணினி என்ற சொல் உருவாக்கத்தை காண்போம்.
எண்ணம் அற்று இருந்தவை, எண்ணத்தில் (எண்ண+(அ)த்தில்) நிலைப்பெற்று ‘ மனித எண்ணங்கள் ‘ஆக நிலை பெற்று உள்ளது என்று அறிவோம்.
மனித எண்ணத்தில் எண்ண+(அ)த்தில் தோன்றிய எண்களில் உருவாகி எணினி என்று நிலைப் பெற்று இருக்கிறது.
மனித எண்ணம் வரிசை படுத்தும் அமைப்பில், இலக்கத்தில் நிலைபெறும் நோக்கில் எண்ணி அளக்கக்கூடிய சொல் ஆக்கமாக உருவெடுத்த சொல்
‘ எணினி ‘ ஆகும்.
எண்ணி அளக்கக்கூடிய மின் இலக்கமாக எணினி என்ற சொல் தற்கால ஆங்கில எழுத்து ‘ Digital ‘என்ற சொற்களில் இலக்க எண்களாக பயன்படுத்தப்பட்டு, பல்வேறு நேரடி தொடர்புக்கு பயன்பட்டு வருகிறது.
எண்ணங்களில் வயப்பட்டு, ‘ எண்ணிம ‘ ஆக,, எணினி ஆக, ‘ எண்மிய ‘ அங்கத்தில் பெரிதும் பயன்பட்டு வருகிறது, எணினி என்ற சொல்.
எண் என்ற சொல் எண்மருவி, ‘ எணி ‘என்று ஆகி, இனி என்ற சொல்லில் ‘ இ’ என்ற உயிர் எழுத்தில் மறைந்து, (இ)னி ‘ எணினி ‘என்ற சொல் ஆக நிலைப்பெற்று இருக்கிறது.
கணினி விரிவாக்க கலைச் சொற்கள்.
கணிப்பான், கணிப்பொறி என்ற இந்த சிறு இயந்திரம்
கணக்குகளை கச்சிதமாக கணக்கிடும் பொறி ஆகும்.
கற்றலில் கணினி தற்பொழுது பெருவாரியாக பங்களிக்கிறது. கற்பித்தலுக்கு தேவையான கணினி சொற்றொடர்கள் பிற மொழி, குறிப்பாக, ஆங்கில மொழியில் பயன்பாட்டில் இருந்த போதும், தமிழ் மொழி சொல் ஆக்கமும் இன்றியமையாத ஒன்றாகிறது.
கணினி என்பது முறைப்படியான தரவுகளை கோர்வையாக செயல்படுத்தும் ஓர் கருவி ஆகும்.
கணினியில், பெருமுகக் கணினி, குறுமுக கணினி, நுண்கணினி, சொந்த கணினி, மீத்திறன் கணினி, மேசைக் கணினி, கையேட்டுக் கணினி, மடிக்கணினி,
வரைபட்டிகை கணினி, உள்ளங்கை கணினி என பயன்பாட்டிற்கு தக்கவாறு அமைந்து உள்ளது.
மென்பொருள்:
மென் பொருள் என்பது கணிப் பொறி நிரல்கள் மற்றும் கணிப் பொறிகளால் படிக்கவும், எழுதப்பட முடிகின்ற தரவுகளால் சேர்க்கப்படும் ஓர் சொல் ஆகும்.
மென்பொருள் இலக்க முறையில் நிரலாக்கப்பட்ட மொழிகளால், உரை ஆக்க மொழிகளால் பரந்த அளவிலான தயாரிப்புகளை உள்ளடக்கியது.
மென்பொருள், சாதன இயக்கிகள், இயங்கு தளம், சேவை இணைப்பு தளம், பயனீடுகள், பொறி செயல்முறையை உள்ளடக்கியதாக இருக்கும்.
கருவியம்:
கரு, என்ற சொல்லில் இருந்து உருவகம் பெற்று, கருவியாகி, இயல்பு இயலில், கருவியம் என்ற சொல்லாக நிலை பெற்று உள்ளது.
கணினியின் பயன்பாடு மென்பொருளில் கருவி மூலம் இயல்பாக இயங்குவது கருவியம் ஆகும்.
வன் பொருள் என்று அழைப்பதை விட கருவியம் என்று அழைப்பதே மிகவும் சிறப்பு.
கணினியின் உருவகத்தில் கருவியம் என்ற சொல்லே மிகவும் சிறந்தது.
இயல்பு இயலில், தமிழ் பல்கலைக் கழக அகராதியிலும் கருவியம் என்ற சொல்லே இடம் பெற்று உள்ளது.
இயற்பியலிலும் கருவியம் என்பதை ஏற்றுப் பயன்படுத்துகின்றனர்.
கருவியம் தொடர்பான சில சொற்களும் அதன் தொடர்பான தொடர்பு கருவி அமைப்புகளை பார்ப்போம்.
கருவிய வடிவமைப்பு, கருவிய நுட்பவியல்,கருவிய மீட்டமைப்பு,
கருவிய முரண்பாடு, கருவிய வல்லுநர்,கருவிய வளங்கள்,
கருவிய விசை,கருவிய விவரிப்பு, விளம்பி(மொழி),கருவியக்கடை
கருவியக்கல்வி,கருவியக்குவிப்பு, கருவியச் சார்வு கருவியச்சான்றிதழ்,
கருவியச்சிறப்பறிவாளர், கருவியப் பட்டயம், கருவியப் பாய்வுக் கட்டுப்பாடு
கருவியப் பொறியாளர், கருவியப்பொறிஞர், கருவியப்படிப்பித்தல்
கருவியப்பாடமுறைமை, புதிய கருவியைத்தை இணை,வரைகலை உள்ளீட்டுக் கருவியம், வரைகலை வெளியீட்டுக் கருவியம்
என கருவியம் என்ற தமிழ் சொல் ஆக்கத்தை பயன்படுத்துவோம்.
செயல் திரல்கள் மூலம் பல மென் பொருள்களை குறியீடுகள் மூலம் பயன் அளிக்கப்படுகிறது.
தமிழ் மொழி இயல்பாக எண்ணற்ற மென் பொருள்களை உருவாக்கி வருகின்றனர்.
உதாரணமாக தரவுகளைக் சேகரித்து அத்தரவுகளின் மூலம் மொழிப் பெயர்ப்பு செய்யவும், இலக்கணத்தை உட்புகுத்தி எழுத்து, சொல், பொருள், வாக்கியம் போன்றவை கண்டறிவதற்கும் கணினித் தமிழ் ஆய்வுகள் ஆராய்ந்து வருகின்றனர்.
தொன்மைக் கால ஆவணங்களைக் கணினியின் துணைக்கொண்டு முயற்சி செய்து வருகின்றனர். தமிழ் மொழி ஆய்வு வளர்ச்சியில் சொல்லுருபு பிழைத்திருத்தி,
வாக்கிய அமைப்பு பிழைத்திருத்தி, இலக்கணப்பிழைத்திருத்தி போன்ற மென்பொருள்கள் வெளிவந்துள்ளன.
மக்கள் பேசும் மொழிக்கும் கணினித் தெரிந்து கொள்ளும் மொழிக்கும் வேறுபாடு உண்டு.
கணினிக்கு தெரிந்த மொழி பூஜ்யம்(0), ஒன்று (1)
இந்த இரண்டைத் தவிர வேறொன்றும் அதற்கு தெரியாது.
எந்த ஒரு மொழியில் எழுத்துக்கள் குறைந்துள்ளதோ அம்மொழி கணினியில்
முதன்மை இடமாக வகிக்கின்றது.
தமிழ் எழுத்துக்களை எடுத்துக் கொண்டோமானால் 71 எழுத்துகள் மட்டுமே கணினிக்கு தேவைப்படுகிறது.
ஆங்கில எழுத்துகளைவிட குறைவானதாக நம் தமிழ் மொழி இருக்கிறது.
ஆனாலும் நம் தமிழர்கள் ஆங்கிலத்தையே பின்பற்றி தமிழை ஆய்ந்து வருகின்றனர்.
அதனால்தான் தொழில் நுட்ப வளர்ச்சியில் நாம் பின்தங்கியே கிடக்கிறோம்.
கணினி பயன்பாட்டிற்கு தமிழ் எழுத்தான உயிர் எழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18, ஆய்த எழுத்து 1 எண்கள் 10 எழுத்துகள் குறியீடு 30 ஆக மொத்தம் 71 எழுத்துகள் மட்டுமே கணினிக்கு நிரல்நிரை செய்வதற்குத் தேவைப்படுகிறது.
இணையம்:
இணையம் என்பதற்கு வித்திட்டவர் ஜதன் பாஸ்டல் என்னும் அமெரிக்கர் ஆவார்.
உலகெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க இணையம் பயன்படுகிறது.
ஒரே நேரத்தில் பல இணைப்புகளை தொடர்புபடுத்தி
இணையாக, இயல்பாக பார்க்க தொகுக்கப்படுவதால் இணையம் என்ற சொல் அமைந்து உள்ளது.
உலகெங்கும் வலையமாக அமைவதால் உலகில் அகண்ட வலையக் கற்றைகளில் மூலம் காணலாம்.
இலக்கியம், அறிவியல், புவியியல், கணிதம், திரைப்படம் என எண்ணற்ற துறைகள் பற்றி இணையத்தின் வாயிலாகச் செய்திகள் அறிய முடிகிறது.
கடந்த இருபதாண்டுக் கணினிப் பயன்பாட்டில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது.
இந்த உலகம் முழுமையான வலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிம்பெர்னர் லீ என்னும் இயற்பியல் வல்லுநர் 1989ஆம் ஆண்டு இணையத்தளத்திற்கு உலகளாவிய வலைப்பின்னல் எனப் பெயரிட்டார். இதனை வையக விரிவு வலை எனவும் அழைக்கலாம்.
இவ்வையக வலைப்பின்னல் பல செய்திகளை அழியாமல் பாதுகாக்க உதவுகிறது.
இணையத்தளத்தின் வரலாறு
கணினியுடன் இணைத்தள இணைப்பு படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. 1960ஆம் ஆண்டில் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குச் செய்தியை மாற்ற
மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர்.
இது மிகுந்த காலச்செலவை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்திற்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச்சுருளுடன் இணைக்க தூய வெளி வலை (ஈதர் நெட்) அட்டை என்னும் சிறு பலகைப் பொருத்திப் பயன்படுத்தினர்.
இந்த இணைப்பு குறும்பரப்பு வலைப்பின்னல் எனப்பட்டது.
இந்த வலைப்பின்னல் வழியாக உலகம் முழுவதும் உள்ள கணினிகளை ஓரளவுதான் இணைக்க முடிந்தது.
முழுமையான இணைப்பைப் பெறச் செயற்கைக் கோள் வழியாகப் பயன்படுத்திப்
புவியைச் சுற்றி நாடுகளின் மீது வலம்வரும் விண்வெளிக்கலன்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த உலகம் முழுமையானவலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.
தமிழ் வளர்ச்சியில் இணையத்தின் பயன்கள்
தமிழ் மொழி வளர்ச்சியில் கணினியைப் பயன்படுத்திக் கற்க வழி வகை செய்யப்ட்டு உள்ளது.
வீட்டில் இருந்தபடியே பலமொழிப்பாடங்கள் கற்றுக் கொள்ள இயலும்.
தொலை தூரக் கல்வியை இணையத்தின் உதவியால் கணினி வழியாகப் பலரும் கற்று வருகின்றனர்.
இணையத்தின் வாயிலாக ஒருவருக்கு ஏற்படும் ஐயங்கள், சிக்கல்கள், தேவைகள், வழிகாட்டுதல்கள் பெறவியலும். மொழியின் அடிப்படைத்திறன்களானக் கேட்டல், பேசுதல், எழுதுதல், படித்தல் எனத் தொடங்கி உயர்நிலைத் திறன்களானக் கதை, கட்டுரை, செய்யுள், பாடல், கடிதம் சுருக்கி வரைதல் விரித்தெழுதுதல், குறிப்பெடுத்தல், அகராதித் தேடல் என அனைத்தையும் இணையம் வாயிலாகக் கற்க இயலும். உலகெங்கும் வாழும் தமிழர்க்கும் தமிழ் அறிய விழைவோர்க்கும் இவ்வாய்ப்பினைத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் வழங்குகிறது. தமிழ் என்னும் இணையத்தளம் தமிழ் எழுத்துகளை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத் தருகிறது.
உலகளாவிய இணைய வலையின் ஒரு சிறு பகுதி
ஜே.சி.ஆர். லிக்லைடர் இணையத் தந்தையாக அறியப்படுகிறார். இணையம் என்பதன் தமிழ்ச்சொல்லாகும் இணையம் எனப்படுவது பல கணினிகளை ஒரு மையக் கணினியுடன் இணைத்துச் செயற்படுத்துவதாகும்.
தமிழும் இணையமும்
தமிழும் இணையமும்:
பல உள்ளடக்கங்களைக் இணையச் செயல்பாடுகளைக் கொண்டு உள்ளது.
இணையம் ஒர்அறிமுகம், இணையத்தின் வரலாறு, கணினியில் இணையத்தில் தமிழ்
தமிழ் இணையம்,மாநாடு, கருத்தரங்கம், இணையத்தின் தமிழின் பயன்பாடு
இணையத்தின் தமிழ்க்கல்வி, தமிழ் மின் இதழ்கள், இணைத்தில் தமிழ் மின் நூலகம்
இணையம் கணினி வழி ஆய்வுகள், இணையம் அகராதி, இணையத் தமிழ் இதழ்களின் முகவரி உலகில் நடைபெற்றத் தமிழ் இணையம் தொடர்பான நடைபெற்ற மாநாடுகள் கருத்தரங்குகள் குறித்த தகவல்கள் தரப்பட்டு உள்ளன.
ஏன் தமிழ் இணையம் தேவை?
‘தகவல் அறிவது அறிவின் வளர்ச்சி’.
‘உலகம் இணையத்தால் இணைக்கப்படுகிறது.’
ஆங்காங்கு ஆங்கில மொழி அறிவு அணித்திரட்டாக ஒருங்கிணைந்து உள்ளது.
தமிழ் தரவு இணைப்பு தாராளமாக இணைக்க,தரணி எங்கும் தமிழ் மொழிச் சொற்கள்
சரளமாக பரவ தமிழ் மொழி இணையத்திலும் நமது பங்கை தரமாக,
வழங்குவோமே.
செய்திதாள்கள் இணைய வெளியீடு,கற்றல் கல்விநிலைய இணையத்தில்,
வியாபாரத்தில்,விசாலாமாக வணிகப் பெருக்கம்,அலைப் பேசியும் அனைவரின் கையிலும்,நூலகமும் கையடக்கத்தில்,பொழுது போக்கும் போகும் இடமெல்லாம்
பரவி வருகிறது.
கடலுக்கு அடியில் இருந்த கண்டம் கண்ணெதிரே,நாற்சுவர் நாகரிகமும்
நாண்மாடக்கூடல் நகரத்தில்,நாகரிகத்தில் கீழே தள்ளப்பட்ட கால வரிசை,
கீழடியில் காண்கையில் மேலும் தமிழ் மொழி உலக மொழிகளுக்குள் தரமான
மொழியாகிறது.
தமிழ் இலக்கிய மொழி இலக்கியங்களில்,தன்னிகரற்ற மொழியாகிறது.
‘உலக வரைப்படத்தில்,தென்னக பாரதமும் தெளிவுள்ள மனித தடத்தை பதிந்திருக்கிறது’ என மனித இன வரலாற்று இணையும் கோடுகள்காணொலியில் கண்ணார காண்கிறோம்.
கணினியும், இணையமும் இயற்கை பகுப்பு மொழி ஆய்வில் ஆட்களின் தேவையும் அறிகின்றோம்.
கறையான் அரித்த ஏட்டுச் சுவடுகளும்,காகிதத்தில் ஏறாமல் கணினி,எணினியில் வலம்
வர முயற்சிப்போமே!
‘தமிழோடு தொடர்பு கொள்ள பல்வேறு இணையத்தளங்கள் தொழில் நுட்ப அறிவுச் செறிவைநோக்கி சாதிக்க முடியும் ‘என தமிழ் தரவுச் சொற்கள் பல வலையத்திலும் இணைகின்றன.
மதுரையிலே மதுரைத்திட்டம், இலக்கியத் தொகுப்பை மின் பதிப்பாகிறது.
தஞ்சையிலே ஒலைச்சுவடிகள் பல,இணையத்தின் தொழில் நுட்ப வரவுக்காக
காத்திருக்கிறது.
தமிழ் இணையக் கல்விக்கழகம், இணையநூல்களும் இணைந்து
செயல்பட இணைவுக்கு காத்து உள்ளது. www.tamilvu.org.
இலக்கியச் சொற்கள் பல தமிழ்சொற்குவைக் கூட்டஇணைய இணைவிற்கு
இணைந்து இருக்கிறது.
தேடு பொறியில் திருக்குறளில் ஏதாவதுஒரு சொல் கொடுத்தால் அந்த சொல் எந்தெந்த இடங்களில் வரும் என அறியும் இணையதளம் காண்போம்,
இணையதளங்களில்.சொற்கள் குவியல்,குவியலாக சொற்குவை
இணையத்தளத்தில் அறிவோம்.
www.sorkuvai.com எணினி நூலகத் தளத்தில்
சிறுகதைகள், நாவல்களைப் படிக்க முடியும்.
பழைய இலக்கிய நூல்களை இத்தளத்தில் படிக்க முடியும்.தமிழ் மரபுகளை அறியஓரு இணையத்தளம்ஓலைச்சுவடிகளைமின்வடிவில் தர முயற்சி நடைபெறுகிறது.
பல இணைய இதழ்களும் தமிழ் மொழியிலும் காணலாம்.
வலைத் தமிழ் இணையம்,பி.பி.சி தமிழ் இணைய இதழ் கவிதைகளை வழங்குகின்றது.
செய்திகளை மட்டும் வழங்கும் தமிழ் இணையத்தளங்களும் உள்ளன.
தமிழ்.காம், எம்.எஸ்.என். தமிழ்.காம் முதலானவை இதில் அடங்கும்.
தமிழ் இணையப்பரப்பில் வலைப் பூக்கள் பிளாக்கர்களும் மிகச் சிறந்த இடத்தைப் பெறுகிறது.
தமிழ் இலக்கியப் பாடல்களும் இன்னிசையோடு தரும் இணையத்தளங்களும் உள்ளன.
தமிழ், ஆங்கிலப் பேச்சு மாறி ஒலித்து அந்தந்த மொழிக்கு ஏற்ப மாற்றி அமைக்க உதவுகிறது.
தருவோம் தரமான படைப்புகளை,தமிழ் மொழியிலும் இணையத்தில் இணைவோம்.
முடிவுரை:
தமிழ் இரு எழுத்துக்களில் இரு அடிப்படை சொற்களை உருவாக்கி, அந்த எழுத்துக்களில் கணினி, எணினி, இணையம் போன்ற தற்கால தொழில்நுட்ப செயலாக்கத்திற்கேற்ப பல சொற்களை இந்த கட்டுரையில் பதிந்து உள்ளது.
உசாத்துணை :
1. தமிழ் இணைய கல்வி கழகம்
2. தமிழ் பல்கலை கழகம், தஞ்சாவூர்,
3. உலக தமிழ் இணைய கருத்தரங்க மாநாடு
4. பல தற்கால, அக்கால இணைய பதிவேடுகள்.
5. சொற்குவை இணையம்.
புவி, இயற்கை நிலை அறிவோம்.
Listen to the most recent episode of my podcast: This is a Pleasant Trend channel, describing our natural existence. https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/This-is-a-Pleasant-Trend-channel–describing-our-natural-existence-ehclqt