15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு – 2 சமூகப்படி நிலை  சுமூக படிநிலையாக மலரும் காலம்.

15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு – 2 சமூகப்படி நிலை  சுமூக படிநிலையாக மலரும் காலம் –

பழக்கம் வழக்கமாய்
ஆழ அகல விரியும் சமூகம்

குழுவின மனித வளத்தின் ஈர்ப்பு
இழுத்து பிடித்த கூட்டுச் சேர்க்கை
எழும் தொடர் உள்ளத்தின் நிகழ்வு
தழுவி எடுத்துக் கொள்ளும் திறன்.
திறன் அறிவு தொடர் வடிவமைப்புக்கு
பிறகு அன்புடன் கட்டுண்டு கிடந்தோம்
ஆற அமர யோசித்து பழகினோம்
மறப்பதுடன் நினைப்பதும்
மனிதத் தன்மையானது.

தன்மை நிறைவதும் முழுமை பெறுவதும்
நன்மையுடன் சிறந்து துணை புரியும்
பன்மை பண்பாடு வரலாறு சமூகம்
ஆன்றோர் சான்றோர் வாக்கு பதிவு.
பதிவு பெற்ற நுண்ணிய ஆற்றல்
உதியமாகிய பல்லாண்டு கால முறை
நதி நீர் வாழ்நாள் முழுதிறன்
பதிவு பெற்றவை பலரின் பழக்கம்.

பழக்கம் உள்ளவை பலரும் பின்பற்றுபவை
வழக்கம் நம் நிறை செயலாகும்
உழவுத் தொழில் சேமிப்பு பண்டம்
ஆழ அகல விரிந்த சமூகம்.

மூலதன படைப்பு மூலதளத்தின் வழிபாடு.

மூலதன படைப்பு மூலதளத்தின் வழிபாடு.

கால நேரம் ஏற்கும் முதலாய்
கோலம் போட்டு வளரும் தொழிலாய்
ஞாலம் போற்றும் வாழ்வில் நின்றாய்
ஏலமிட்டு நிற்கும் நிறும கொள்கை.

கொள்கை கோட்பாடு
இருப்பு நிலை
நாள் நேரத்தில் தழுவி கொள்ளும்
ஆள் ஆதாரச் சேவை தேவை
உள் உணர்வில் ஒட்டும் மூலதனம்.

மூலதனம் முற்றும் நாடும் தன்மை
மூல தளத்தில் வரலாறு படைக்கும்
பலமாக படரும் காய் கனிகள்
நலமாக வளர்க்கும் பண்பாட்டு முறை.

முறை யாவும் முயற்சியின் வரையறை
அறை காக்கும் தட்பவெப்ப நிலை
உறைவிடம் அறம் பொருள் இன்பம்
இறை நம்பிக்கை இயற்கை வழிபாடு.

ஆராய்ந்து பார் ஓராயிரமும் இனியவை!!

ஆராய்ந்துபார்! #ஓராயிரமும்இனியவை !!

ஓராயிரம் ஆண்டும் கடந்து போகும்
ஏராளம் கொண்டதில்
இனிதே காண்
தாராளமாக நாளும் காட்டிடும் அகம்
தோராய குறியீடு வரலாறு வரையறை.

வரையறை கொண்டவை படிப்பினை தொடர்
நிரையசை குறில் நெடில் உயிரொலி
தரையில் வாழும் உயிரினச் சேர்க்கை
விரைவாற்றல் பெற்ற மக்களின் பயணம்.

பயண வரலாறு படிவ படிமலர்ச்சி
ஆய கலைகளின் இலக்கியச் சுடர்
நயம்பட பதிவினில் மொழியியல் இருப்பு
இயற்பியல் வேதியியல் காட்சி கண்ணுக்கு.

கண்ணுக்கு இனியவை கூறலில் உள்ளவை
பெண்ணுக்கு பெருமை சேர்க்கும் வல்லமை
மண்ணுக்கு மண்ணுயிர் வழங்கும் ஆற்றல்
விண்ணுக்குள் வியப்பூட்டும் விந்தை ஓராயிரம்.

ஆன்றோர் செயல் சான்றில் தொடரும்.

ஆன்றோர் செயல்
சான்றில் தொடரும்.

இடம் பலவாறு இருந்த போதும்
மடத்தில் படுத்து உறங்கும் வேளையிலும்
திடமாக உறுதி கொடுக்கும் ஆற்றல்
படம் பிடித்து முடிவெடுக்கும் கணம்.

கணம் கூடி காக்கும் திறன்
குணம் மூலத் தன்மையுறும் பன்மை
மணம் கூடுகையில் உள்ள மதிப்பு
பணத் தொகை
(தொண்டுடன் கைமாறும்) நிகழ்வு என்றும் .

என்றும் நட்புடன் பழகும் பண்பு
ஊன்றும் பலகலைகள் மாண்பு மிகும்
இன்றும் பலருக்கு தொடரும் நல்கை(கொடை)
நன்றும் தீதும் பதியும் ஆன்றோர்.

ஆன்றோர் செயல் சான்றில் தொடரும்
சான்றோர் பேச்சு வகை உண்டு
நின்று பலகால பணியில் தொடர்புறும்
தோன்றி மலரும் படிமலர்ச்சி வரலாறு.

வரவும் செலவும் துருப்பும் இருப்பு

வரவும் செலவும்
துருப்பும் இருப்பு .

துருப்பு உடையவை குறிப்பில் நிலைக்கும்
      பருப்பு புதுப்புது ரக தசை(புரத)ச்சத்து
கருப்பு கண்மணி குவிஆடி ஒளிக்கதிர்
     இருப்பு ஒதுக்கீடும் அடுத்தடுத்த பொறுப்பு.

பொறுப்பு தரும் தேவையும் உருவப்படும்
      உறுப்பும் நாடும் நிலைப்பாடும் குறியீடு
வேற்றுமை தரத்திலும் ஒற்றுமை நிலைக்கட்டும்
     ஊறும் பொருள் தரும் ஆற்றல்.

ஆற்றல் பெறும் உள்ளவகை கோட்பாடு
     தேற்றம் பெரும் பகுதி நேரம்
மற்றும் காலப் பகுதி கட்டமைப்பு
    பற்றும் வலைப்பின்னல் பகிரும் தரவு.

தரவும் தீர்வும் தேர்வு பெறும்
     நிரவும் நகர்வும் பூரண சேர்க்கை
பரவும் தன்மை கொண்டவை இருப்பு
    வரவும்  செலவும் நிலைப்பில் சேவை.

உலகத் தாய்மொழி நாள் 2024

உலகத் தாய்மொழி நாள் 2024.

உலகத் தாய்மொழி நாள் 21 02 2024 –

ஆத்திசூடி பாத்திட்ட
கரந்துறை பாவினம்

அன்பெனும் அகல்விளக்கு அனைவரின் அகத்தொடர் .

ஆக்கமும் ஆய்வும் ஆழ்ந்த ஆர்வமும்

இன்ப இணைவில் இதமாய் இணையதளம்.

ஈகை ஈர்ப்பில் ஈன்று ஈட்டும்

உணவில் உகந்தவை உண்டு  உயிர்ப்புறும்

ஊக்கம் ஊகிப்பது ஊசலாடி ஊடகமாகும்

எங்கும் எக்கணமும் எச்சரிப்பும் எடுத்துக்காட்டும்.

ஏற்றுமும் ஏற்படும் ஏட்டிலே ஏறும்.

ஐந்தும் ஐம்புலத்திலும் ஐ’யா’வுடன் ஐக்கியமாகும்.(யாவும்)

ஒன்றும் ஒன்றின்மையும்  ஒன்றிடும் ஒட்டும்.

ஓங்கிய ஓசை ஓரளவு
ஓசைவாயில்.

ஔவை ஔகம்(இடைப்பாட்டு) ஔதசிய(பால்)
ஔபத்தியம்(புணர்ச்சி).

அஃதை  இஃதை  அஃறிணையும்பற்றிடு
அஃதாக்கத்தில்.

தனம் தரும்புவி புதுப்புது விசை

தனம் தரும்புவி புதுப்புது விசை.  விசை விண்ணின் சைகை என்போம்.

தனம் தரும்’புவி’ புதுப்புது விசை.

(விசை- விண்ணின் சைகை)

ஆண்டு பல செல்லும் புவி
      பண்டு(பண்டைய )
கால கட்ட உயிரிழையில்
உண்டு உயிர்த்து வாழும் உயிர்க்கு
    தொண்டு தொடரும் தொடர்பில் ஒன்பது.

ஒன்பது பத்து பக்கத்து இலக்கு
      என்பது எதிலும் பலரின் முயற்சி
தின்பது ஒவ்வொரு நாளும் வளர்சிதை
   மன்பது(மக்களினம்) மனித உயிரின‌ குணம்

குணம் குன்று போல் விளங்கும்
      மணம் வீசும் நறுமணம் கமழும்
அணம் மேல்வாய் தாடை உறுப்பு
      கணம் தோறும் நிலைக்குழுவின இனம்.

இனம் இன்ப துன்ப மீள்சுழற்சி
    வனம் காடு மலை நீரேற்றம்
தினம் காக்கும் காலக் குறியீடு
     தனம் தரும்புவி புதுப்புது விசை.

தொடர்மூளைப்பதிவு இடர்நீக்கும் செயலாக்கம்.

தொடர்மூளைப்பதிவு
இடர்நீக்கும் செயலாக்கம்.

அலையலையாய் பரவும் காற்றின் திசை
இலையிலையாய் நிலவும் பச்சை பயிர்த்தொழில்
உலைவடிவ தொழில் நுட்ப உதவி
கலை வடிவாய் அரும்பும் அகராதி

அகம் புறம் சேர்க்கும் ஒலிப்பு
தகவல் தொழில்நுட்ப மூலச்சேர்க்கை தேவை
பகல் இரவு நேரத் தொடர்பும்
சகலகலா வல்லமை கொள்ளும் ஆற்றல்.

ஆற்றல் அறிவுத்திறன் ஆராய்ச்சித் துறை
மாற்றம் படைக்கும் விண்வெளி பார்வை
ஏற்றம் பெறும் வரை சுழலும்
உற்ற பொருள் மாறுபடும் வலைப்பதிவு

வலைப்பதிவு முகப்பு உள்ள பயணப்படுகை
நிலைப்பதிவில் உலவி வரும் நிலைப்பொழுதும்
ஓலைப்பதிவில் தொடங்கிய காலவரையறை எழுத்துரு
தலைப்பதிவில் மூளைத் தொடர்பே மொழி.

15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் தீயினை பட்டறிவு மூலம் அறிந்து க…