சுழளாதாரம் – படரும் வாழ்வு

சுழளாதாரம் – படரும் கொடி

ஒன்றிய பனிப் பொழிவு உருகி ய
       தன்மை முன்னிலை படர்க்கையில் படரும்
இன்மையிலா இலக்கின ஆற்றல் சுழலும்
      பன்மை தொகுப்பு பிரிவினை க் கண்டம்.

கண்டம் முற்றும் சுற்றும் பார்
      ஆண்டு கணக்கில் சுழலும் புவி
துண்டு துண்டாகும் உள் நிகழ்வே
     மண் மரம் செடி நிலை.

நிலைமுறை யாவும் நிலைக் கருவிலி
     அலை அலையாய் பனிகப் படிமம்
மலைகள் மேல் உருகும் பனி
      இலைத் தளை தழைக்க நீர்த்துளி.

நீர்பனித் துளிகள் பெரும் கடல்
     ஊர் கூடும் நிலத்தளமே நாடும்
ஓர் பிடி மண்பயிர் வளர்ச்சி
    பார் வையகம்  ஒன்றிய உயிரியம்.

உயிரக காப்பு வளியது சூழல்
      மயிரிழை இழைந்திடும் உயிரினச் சேர்க்கை
பயிரின வேர் விதையும் தரணி
      உயிரினம் காக்கும் வழிவகை படிமலர்ச்சி.

படிப் படியாக உருப் பெறுமதி
      ஆடி அசைந்து செல்லும் உயிரினம்
நாடித் தேடி உண்ட உயிர்
      ஓடியாடி வேலை செய்யும் வாய்ப்பு.

வாய்ப்பு வாசல் வழிகாட்டிய மரபு
     தாய் தந்தை உயிரிய பயணம்
நோய் நொடி அறிந்த மனிதம்
     வாய்வழி உணவு உண்ணும் மகிழ்வு.

மகிழ்ந்த சிந்தனை வளரும் தருணம்
      ஊகித்து உதித்த மரணம் நொடியும்
பகிர்ந்து உண்ட பல்லுயிர் பெருக்கம்
      சகிப்புத் தன்மை முன்னிலை படரும்.

RETHINKING IN ACCOUNTING – HOW DEFICIT IS THE ONLY NORMS FOR THE WORLD?

பற்றாக் குறையே அரசுநிதி !
மற்றவை நீளும் வரிவிதிப்பு !!

இயல் இறக்கையில் பறவை பறக்கும்
        முயல் தாவும் பற்றும் கிளை
வயல் வெளி எலி கொறிணி
      மயில் பறக்க எத்தனிக்கும் சிறகு.

சிறகு கொண்ட ஆற்றல் மிக்க
      பறக்கும் நன்கு விரித்து மெல்ல
பறப்ப தெல்லாம் இயற்கைத் தேர்வு
பிறப்பின மாற்றமே காலயெல்லை  அறிகுறி.

அறிகுறி எதுவும் தெரியாது தற்குறிப்பில்
       பொறி ஐந்தும் இயங்கும் பேசும்
பறிக்கும் நெல்கதிர் அறுவடை காலக்கணிப்பு
பறித்தவுடன் பற்றிக் கொள்ளும் பற்றாளர் 

பற்றாளர் பற்றிக் கொள்ளும் நிதி
      உற்று பார்ப்போருக்கு நிதியுதவியும் தடுப்பு
     ஆரம் வண்டி கண்டு பிடிப்பு
நரம்பு நடு முதுகு தண்டு
      கரம் பிடித்து நடுவோர்க்கு தொல்லை.  

தொல்லைத் தொடரிலும் தொடர்பிலும்  புரிவர்
     பார்வை கோடி சிறிய புள்ளி
ஆர்வம் கொண்டு ஆற்றல்மிகுத் திறன்
      ஊர்வெளி வான்வெளி நோக்கம் ஏவுகணை

ஏவுகணை பாயும் கூர்மை மிதப்பு
     நாவு உயர்வு நவிற்சித் தொடர்
பாவும் பண்ணும் பயிலும் முயற்சி
     தாவும் நுட்பம் புவிசார் குறியீடு.

குறியீடு புத்துயிராய் அரசு நிதி
     அறிந்து கொள்ளும் அறிக்கை வரிசை 
வறியவர்க்கு வரிவிதிப்பும்
பற்றாக்குறை அரசுநிதியும்
     ஆறிய‌ கஞ்சியின் வளம் வறியவர்க்கு.

உள்ள உண்மை

உள்ள உண்மை:

உள்ளது உள்ளபடி உள்ளவை உள்ளாக
உள்ளம் உள்ளும் உள்ளுவது உள்ளாவது
உள்ளுமோ உள்ளாத உள்ளார் உள்வகை
உள்ளுவகை உள்நின்று உள்ளக உள்ளீடு.

உள்ளீடு உள்ளிட்ட உள்ளது உள்ள
உள்ளத்துள் உள்ளுறும் உள்ளதவை உள்ளனவே
உள்ளாற உள்நுழைவு உள்ளப்பாடு உள்ளபடி
உள்நிலை உள்ளிடும் உள்ளுறை உயிரியம்.

உயிரியம் உள்ளதும் உள்ளென உள்ளதாம்
மயிரிழை உள்செல் உள்கொள்ளும் உள்நுட்பம்
உயிரிழை உள்ளதில் உள்செல்லும் உள்ளொளி
உயிரிய உள்பகுப்பு உள்ளதுயிர் உள்ளாற்றல்.

உள்ளாற்றல் உள்ளார் உள்ளே உள்ளமை
வள்ளல் உள்ளத்துளி உள்ளகுருதி உள்பக்கம்
துள்ளல் உள்ள வேகம் உள்ளுறுதி உள்ளன்பு உள்ளகத்தினுள் உள்நரம்பு
உள்துறை

உள்திசை உள்தொடர்பின உண்மையுண்டு.

சுழளாதாரம் – புவியடித் தட்டு நகர்வு படம்

புவியடித் தட்டு நகர்வு இமயமலை

வங்கம் விரிகடல் கொண்ட புவிக்கோலம்
அங்கம் குடநாடு வளைவிரி குடா
தங்கும் இடம் பெற்ற நிலம்
இங்கு நகரும் வரைப் படம்.

படம் மூலம் சுட்டும் நம்விழி
தடம் புரண்ட களமும் இறங்கும்
உடம் படுமொழி பொருள் விளங்கும்
ஊடகம் கொள்வீர் நீர்நிலம் அறிவீர்.

அறிந்து கொள்வது நம் அகப் பொருள்
வறிய நாடுகள் மத்தியப் புவிக்கோடு
ஏறி இறங்கும் வரைவு மிதப்பது
உறிஞ்சி எடுக்கும் நல்நிர் உடைமை.

உடைமை குடிமை வாழ்வு தரும்
கடை நிலை பெற்றே வளரும்
நடைமுறை அறநெறி அறிவும் நொடியும்
தடை மீறி கற்றோ ரறிவரே.

நலிந்த பிரிவினர் பொறுப்பினை ஏற்பர்
வலிமை பெறும் மனித உயிரியம்
கலிப்பா கொண்டும் நிலை யறிவோரே
தலித் தினமும் தழுவிக் கொள்வீர்.

கொள்ளும் நீர் வைகல்லும் நகரும்
தள்ளும் தரணிக்கு புவியடிப் பேரலை
அள்ளும் அடித்தளம் அரிப்பும் அடக்கம்
எள்ளும் விதையும் மேலும் உயரும்.

உயரும் கடல் அலை மேடான மலையளவு
இயங்கும் தீக்கனல் பொருந்தும் புவியடி
இயங்கும் மேல் வளர் மரம்
இயக்கி நம்மை ஆளும் உயிரகவளி.

உயிரகவளி மேலது நகரும் தன்மை
பயிர் வளரும் புவிமேல் தட்டு
உயிர்க் கருப்பொருள் பற்றும் புரதம்
ஆயிரமாயிர லட்சம் ஆண்டில் நகருமடித்தட்டு.

நகரும் இந்திய ஐந்தடி சதமீற்றர்
தகடு கொண்ட வடகிழக்கு பருவத் திசை
அகண்டு சென்ற திறனில் இமயம்
உகந்தே தள்ளும் புவியடி சேர்க்கை.

சுழளாதாரம் – புவிசுற்று நிலை



புவிசுற்று அறியும் காணொளி படம்.

“பெருந்திரள் பேரண்டச் சுழல் நீர்ப்பசை
பெருவளித் தீ வைப்பு. “

தொல்காப்பியம் முன்புள்ள மனித நிலையறிவோம்:

” நடைமுறை அறநெறி “

‘ ப ‘என்ற எழுத்துரு வடிவ
‘ கோடு ‘
தரையில் நின்று
‘ | ‘ ,
படுக்கை நிலைக் கோடாக ‘ _ ‘
மீண்டும் எழுந்து நின்று ‘ | ‘
‘ |__| ‘
நாளும் நின்று, படுத்து எழுந்து நிற்கும் ” மனித ” மெய்யுறுப்பு நிலையில் உள்ளதாகும்.

‘ ப ‘, ‘ ஆ ‘ எனும் நெடில் எழுத்து
” பா ” என பாடல் வரிகள் மூலம் கொண்டதாகவும் நிலைத்து நிற்கிறது.

இவ்வாறான எழுத்துரு காலம் காலமாக நிலைத்து எழுத்தில், சொல்லில், பொருள்களின் விரிவாக்கத்தில் மேலும் அறிய முடிந்து உள்ளன.

நூல்+பா= நூற்+” பா ” என நூற்றாண்டு ஆண்டுகளாக பேசும் பேச்சிலும், புரிந்து பதிவிலும், நிலை பெற்று வளர்ந்து கொண்டே வருகிறது.

இவை இயல்பாக இருக்க இலக்கு ” இலக்கியம் ” முறைப்படி வழங்குமாறு உள்ளன.

” ட ” என்ற சொல்லின் பதிவும்
நின்று, படு என்று சொல்லும் அளவுக்கு ‘ பட ‘ என்று ‘ அம் ‘ சொல்லோடு ” படம் ” என பதிந்து விடும் அழகே மொழிக்கு அழகு.

பட, படி, படம் போன்ற எழுத்தெல்லாம் படிவ படிமலர்ச்சி உயிரணு அறிந்த தொடர்பு கொள்ளும் அளவு ஆகும்.

பாதி நாள் ” காணா ” அதிசயம் கண்டு பலரும், பல காலமாக நிலைத்து வளர்ந்து கொண்டே இருக்கும் இனக்குழு வாழ்க்கை வரலாறு என்போம்.

அவரவர் கண நேரத்தில், சம அளவு, சமயத்தில் அறிதல் புரிதலில் நிலைத்த மொழி இனமாக வாழ்ந்து நிமிர்ந்து நிற்கும் நிலையாகும்.

கைக்கிளையாக மனித உறுப்புகளில் சுரக்கும் நீர் தண்டுவடம் நேராக நிமிர்ந்து நிற்கும் நிலையே நீடித்து நின்ற மனித இன குழுக்கள் மூலம் புவிதளத்தில் கடை நிலை பெற்று இதுவரை நாம் இறை இயற்கை உருவக மனித இனத்தின் அணி வகுப்பு மூலம் அறிந்து கொள்ளலாம்.

முதல் அசைவில் விழுந்து நடந்த நான்கு காலின உறுப்புகளில் மாறும் காலச் சூழல், சுவடுகள் ஆங்காங்கே தெரியும் ஆய்வள அறிக்கை பெருந்திறல், மெய்யுறுப்புகளில் கண்டு பிடித்துள்ளனர்.

சுழல் உருவ மாற்றம் , நெருப்பை பயனுள்ள பொருள்களாக மெய்யினில் உரோமங்கள் மறைந்து மெல்லிய தோல் மெருகேற்றும் சூழலில் அறியலாம்.

தொண்டு தொடரலையே!

தொண்டு தொடரலையே!


மொழி முறைமை பதிவும் தொடரும்
வழிமுறை ஒன்றே ஒன்றிய யாவும்
ஆழிக் கடலலை சுழலலை எழுவதும்
ஊழி மாற்றம் புவியடி சறுக்கு.

சறுக்கு பற்றி பகுதி குறியீடும்
உறுதி பிடி மேல் தளநிலை
ஆறுதல் கூறி உயிர் தொடுக்கும்
மாறுதல் முடக்கும் மாறும் நிலையே.

நிலையது உருவம் கொண்ட புவிநாளும்
காலை வணக்கம் கூறி எழுப்பும்
மாலை வரை நீடிக்கும் சிறப்பு
தொலைதூரம் இன்று அருகலை தொடரலையே!!

தொண்டு பல செய்யும் பகிர்வு
உண்டு உயிர்த்த உயிரகத் தன்மை
கண்டு கேட்டு அறிந்த உணர்வு
ஆண்டு பலவாயினும் சுற்றும் மொழிஉலா.

திருத்தக்கர் இசைத்த சிந்தாத மணியோசை



திருத்தக்கர் இசைத்த சிந்தாத மணியோசை.

இயலுருவ ‘க’ற்பனை ‘தை’யலே “கதை”
நயம்பட உரைக்கும் பாடலினை ” குரல் “
இயங்கும் நெஞ்சின் நிலை இதழினை
இயக்கும் ‘ஆ’வென ஒலிப்பு முதலோசை.

முதல் அசை அன்பின் சைகைகுறி
இதமாக வருடும் தென்றல் காற்று
பதம் நாடி ‘ ஈ’வென சொல்லும்
உதய மாக ” துத்தம் ” ஈடுபடும்.

சொல் கேளீர் குறியீடு காண்பீர்
நல்லிசைவு கொள்வீர் காந்தாருவக் கைக்கிளை கொண்டு நாவிசை வல்லமை ‘ ஏ ‘ழிசை கதை யிலக்கு
எல்லா இசைவும் ” உழை ” தவர்க்கே.

அவரவர் வாழ்வும் வாக்கும் மனமும்
இவரிவர் இணையெனும் ‘ஐ’க்கியமே மக்கள்
எவரொருவரும் ” இளி ” யொலிப் பாவில்
பவனி வரும் களிப்பா ஓசை.

ஓசைகள் “ஓ”ங்கும் ” விளரி ” தமிழ்
இசைகளின் தாயகமே பாவரிசை யாம்
ஆசை அறுபது நாளல்லாததே உணர்வு
வசை பாடாக் கவிதை தாலாட்டு.

தாலாட்டு பாட்டும் பழகும் பண்பாடு
வாலாட்டத் தூண்டும் வகை ஒடுங்கும்
ஆலாபனை ராகம் தாளம் ஆதி
‘ஔ’வையீரடித் ” தாரம் ” நம்தாயின ” ஆரோசை “.

திருத் தக்கரவர் சீவகனை தமிழ்த்
திரு மணம் புரியும் கற்பனையை தைத்தவர்
திருத் தவக் கோலம் பூண்டோர்
திருமண நாள் காணா தவரென

தவத்திருநிலை கொண்டோர் காமநிலை அறிவோரா என
இவர் காப்பியப் பாவினை கேலிசெய்
தவர்கள் வியக்க இசைந்த இசைத்
தவரானாவர் கடைநிலைக் காப்பிய மியற்றினாரவர்.

ஆரோசை பண்ணும் பாடுபொருள் குழலிசை
பாரோசை தவழும் மொழியின் சிறப்பு
ஏரோசை வேளாண் காலக் கட்டம்
ஊரோசை அந்தாதி விசைத் திறனொலி.

திறன் ஒலியிசை கொண்ட இலக்கியம்
உறவுகள் மகிழ்ச்சி தரும் யாழிசை
இறக்கைச் சிறகுகள் கொண்ட புவிக்கோலம்
வறட்சித் தீர்க்கும் மழைநீர் வடிகால்.

வடிகால் துறைதனில் வாழும் மக்கள்
கொடி போலத் தொடரும் மரம்
செடிகள் நன்கு வளரும் புவிக்கண்டம்
ஊடி உறவாடும் பாவலரே திருத்தக்கர்.

நம்மொழி வரலாறு

நம்மொழி வரலாறு:

நம்மொழி வரல் ஆறு காலநிலை
ஐம்பெரும் காப்பிய நூல்கள் பதிவு
ஆம்என்று உரைப் பகுதிப் பகிர்வு
தம்முளம் கொண்டு பேசும் மகிழும்.

மகிழும் வண்ணச் செயல்பாடு என்றும்
அகிலம் பார்க்கும் வண்ணம் அடிகள்
பகிர்ந்து கொள்ள உதவும் இணைய
முகில்களுள் துகள்கள் கூட்ட முகத்தொகுப்பு.

முகப்பு பக்கம் அமைப்பு உருவம்
மகத்துவம் கொண்டோர் பார்வைக்கு அன்பளிப்பு
உகந்த நாளேது கற்பனை விதைகளுக்கு
அகமகிழ்ந்து பகிர்ந்து மனமுவந்து கொள்ளும்.

கொள்ளும் நுண்ணுயிர் செல்களின் தேர்வு
அள்ளும் சிலப்பதிகாரம் மணிமேகலை போன்றவை
உள்ளும் புறமும் கண்டதில் கேட்டவை
அள்ளி அணைத்தொரு பக்க இணையத்தளம்.

சுழளாதாரம் – மார்க்சின் மதிப்புரை


சுழளாதாரம் – மார்க்சின் மதிப்புரை:

பற்றாக் குறையால் பசி பட்டினி
      பற்றி யோர்க்கு எல்லை யோரமில்லை
போற்றும் தொழில் நுட்பம்  ஏற்றம்
      பற்றும் தலைமை அறிவும் உணர்வும்.

உணர்வு உண்டு உயிர் மெய்
     உணவு உண்ண பலநாள் கனவு
உண்டு களித் தோர் ஊரில்
       உண்டார் உண்டு உயிரக ஏய்ப்பு.

ஏய்த்து பிழை யூக்கி கொக்கியர்
     மாய்ந்து பாய்வர் ஏவல் கொள்வர்
சாய்ந்து படுக்கக் கூட இடமற்றோர்
       ஓய்ந்து உறவு கொள்ள துடிப்பர்.

துடிக்கும் நெஞ்சம் துவளும் உள்ளம்
     நடிக்கும் தலைமை அரசுப் பார்வை
கடிக்கும் எல்லைக் காவல் காப்பு
      படிக்கும் வாய்ப்பு பலருக்கு இல்லை.

இல்லா தோர் கொடுமை இது
      கல்லா தொரு கற்ற போராளி
உல்லாச பயணம் ஒரு சிலருக்கு மதிப்பு
      சல்லாபம் பண்ணி தலைமை பிடிப்பு.

தாங்கும் திறனே உழைப்பும் நேரமும்
       இங்கு வாழும் ஏழை பெண்டிர்
அங்கும் இங்கும் வீட்டில் வேலை
       ஏங்கும் உறவு ஏற்றத் தாழ்வு.

தாழ்வு நிலை தரணி எங்கும்
      வாழ்வு முறை கண்டோர் கொண்டோர்
ஊழ்வினை என ஊரெங்கும் பறை
      காழ்ப் புணர்ச்சி விதி மதிப்பு

மதிப்பு கூட்டி வரி விலக்கு
      நதி நீர்ப் பசை யுள்ளோர்க்கு
வேதி யியல் வேத வாக்கு
      நாதி யில்லார்க்கு தரணியே காப்பு.

காப்பு உரிமை கண்ட நிதி
       கோப்பு மாற்றி பதிவும் மாறும்
எப்படியோ  வாய்தரும்  ஆணை
       அப்படியே செல்லும் கண்டு பிடிப்பு.

பிடித்து படித்து கோகோ விளையாட்டு
      ஆடிப் பாடி களியாட்டக் கட்சி
நாடிச் சென்ற மாய ஏவுகணை
       ஓடிப் பிடித்து ஓயாத உழைப்பு.

உழை உயிர் வாழ வழியது
      மழை மண் பயிற்சி விளைபொருள்
தழை ஆடை உடுத்தும் வழக்கம்
       உடை உடுத்தி உடல் மறைக்கும்.

மறை பொருள் சேமிப்பில் திறன்
      உறை விடம் உண்ண உடை
இறை யியற்கை இயல்பில் பண்பு
     அறை யில்லாதோரே
கோடி கோடி.

நாளும் நரம்பிழை புவிசூரியதூரப் பயணம் ஐந்நூறு மடங்கு

நம்மில் நரம்பிழை பயணம் – படம்

உயிரினம் ஒன்று!
இக்கணமே காண்!!

அகழ் பொறி விளக்கு வேளாண்
நிகழ் தொடர் பின் பற்றும்
இகழ் ஏளனம் அக மகிழ்வன்று
புகழ் மிகும் வழங்கும் வளரும்

ஏற்றம் பெற மனித வளம்
மாற்றம் காண்பதே முயற்சி என்போரே
காற்றே மூலம் சுற்றுச்சூழலே
ஆதாரம்
ஊற்றும் ஊறும் நாளும் செயல்படு.

உண்டு உடுப்பதில் தொடங்கிய வாழ்வு
கண்டு பிடித்து கொண்டு கொடுத்ததே
ஆண்டு பலவாறு உழைத்த வாழ்வும்
பண்டுதொட்டு தொடரும் ஏற்றத்தாழ்வும் அகற்று.


மக்கள் யாவரும் ஒன்றெயென கொள்வீர்
ஆக்கம் ஆற்றல் மிக்க தோர்
ஊக்கம் கொண்ட அறிவிலும்
இக்கணமே உணர்விலும் உண்டு எனக்காண்.