சுழளாதாரம் – சுற்றும் சுடரே!

சுற்றும் சுடரே!

முன் யென பருப்பொருளின் கருமை
பின் தொட ரொளியாய் பேரண்டமாய்
உன்னுள் சுற்றி வர மண்டலமாய்
தன்னுள் சுற்றுகின்ற புவி யியலே.

இயலில் இருக்கை இறைமை கொண்டாய்
பெயருற்று இனிமை காணென வருடும்
வையகச் சுழல் யாவும் ஒருமை
இயற்கை தரும் இனிய ஆற்றலே.

ஆற்றல் மிக கொளென தந்த
மாற்றம் நிற்க நடக்கென தகுதி
அற்றம் பார்த்து அருளும் அறச்சுடரே
மற்றும் சிலப் பல தொகுதியிலே.

தொகுப்புத் தொடரா லெனை கணித்து
வகுத்து விட்டெனை வளர்க்கும் வழிச்சுடரே
பகுதி பக்கக் குறியீட்டிலெனைத் திருத்தி
ஆகும் இந்த பிறவி நிலையிலே.

நிலைப் பெரும் பங்கு உண்டு
தலை முதல் பாதம் வரை
வலைப் பின்னல் நரம்புடன் எனை
மலைக்காது சேவை செய்யென காக்கின்றாய்.

நிலைக்கருவிலி

தலைமை யகத்தறு வாய் நிறுவல்.

பிறப்பு எனும் நிலைக் கருவிலி
திறப்பு எனும் ஒன்றில் பிரிந்து
உறுப்பு என்றொரு பெயரும் பெற்று
தறுவாயில் உள்ளதொரு உருவாய் நிறுவல்.

நிறுவல் நிரல் சிறுத் தோற்றம்
உறுப்பினத் தேர்வி லங்கே தானொரு
கறுப்பு வெள்ளை இளஞ்சிவப்பு நிறம்
உறுப் பெறும் பாங்கே பாதுகாப்பு.

பாதுகாப்பு சேவையில் தேனீப் போல்
அது மற்றொரு உள்ளன்புக் கட்டளையில்
ஏதுவாக இருக்கும் குருதி ஊர்வலத்தில்
அதுவும் நாளும் உறுப்பெற்று சுழலும்.

முப்பது முக்கோடி ஏகமும் இணைய
அப்படியே போகும் வழியும் பகுதியும்
தப்பாமல் தகுதி குழாய் நரம்பியல்
இப்படிக்கு அப்படியே தலைமையகம் செயலுறும்.

உயிரியம் உதிக்கும்

உயிரியம் உதிக்கும்.

கற்றார் படித்துறையில் நின்றார் பெற்றார்
       உற்றார் உள்ளார் உழைப்பைக் கொண்டார்
ஆற்றினார் இயம்பினார் தற்காத்தார் உதவினார்
      மற்றார் போதும் என்றார் பின்தொடர்ந்தார்.

பின்னர் பின்பற்றும் துறைகள் யாவும்
      முன்னர் செயலால் ஆற்றுபவை யன்றோ!
இன்னும் கோடி மக்கள் வறியவராய்
        முன்னர் பெற்றவற்றை ஆற்றுகின்றார் பலவாறு.

பலப்பல முறைப்படுத்தும் பேராற்றல் மிக்கதொரு
     சிலவற்றில் சிக்கி தவிக்கும் நிலையினிலே
நலமாக இருக்கும் நிலை அறிவோம்
     பலமாக உள்ள அது இதமாகும்.

இதழே சுவையை உணர வேண்டும்
     ஆதலால் அனைத்தும் இன்பமுற நடத்திவிடு
உதவிட தரமே ஊன்றுகோலென உதவிடும்
     அதனதன் ஆக்கத் தருணமே உயிரியமாம்.

தாய்மொழி நாள் பாடல்

#தாய்மொழி_நாள்_பதிவு_பாடல்**

தாய்மொழி நாள் பலரும் நல்கும்
      உய்ய உயர உயிரிய தொடரிணைப்பு
ஆய்ந்து அறிந்த மெய் உறுப்பு
     வாயீந்து ஒலிக்கும் ஒலி மரபு.**

மரபணு படிமாற்றம் தம்மிதழுக்கு உருமாறும்
     இரண்டடி மூன்றடி முறையாக்கச் சொல்
வரலாறு படித்துறை படிமலர்ச்சி உருபன்
     நரம்பசைவுப் பண் பாடும் பண்பாடு

பண்பாடும் பயணத் தொலைவு இருக்கை
     மண்ணியக்க செயல் பாட்டில் அடங்கும்
எண்ணும் குறியீடு மொழியில் சொல்
     கண்ணும் கருத்தும் நிறைவாக தாயனை.

தாயனை(DNA) ஆறனை(RNA) உயிரிய வாழ்வு
     இயற்கை தரும் தீர்வு நீர்ப்பசை
தயவின் தரவு வரலாற்று முதல்படி
     பயன் தரும் நலமே தாயகம். 

உயிரிய கணிப்பும் எணினிப் பதிவும்.

பழகும் வாய்ப்பு வாழும் வாழ்க்கை
உழவர் வயல்வெளி உண்ண உணவு
ஆழ அகல விரிந்த பேரண்டம்
வழவழப்புத் தருணம் உயிரிய நீரலை.

நீரலை நீராவி விசையாழி வீச்சு
தர வரிசை சேவை சேர்க்கும்
ஊரகத் தொழில் நுட்பமே மூல
வரவு செலவு ஆக்க அறிக்கை.

அறிவுசார் சொத்துரிமை சார்பு நிலை
பறிமுதலை பகிர்ந்த இலாப பகிர்வு
வறிய வரியக்கத் துறைக் கணிப்பு
சிறிய வணிகப் பிரிவே ஊக்கம்.

எண்ணும் எண்ணம் அளவின் இலக்கு
பண்ணும் பயிலும் பயிற்றிடும் மொழி
விண்ணும் மழையும் மெய்யின பகிர்வு
கண்ணும் கருத்தும் எணினிப் பதிவு.

40 000 – ஆண்டில் அக விசை மொழிகளானது எவ்வாறு ?

40,000 ஆண்டில் அக விசை மொழிகளானது எவ்வாறு?

அங்கத்தின் அசைவும்
தங்கத்தரமும் பற்றாக்குறையே!!
தங்கத்தின் குறை தரத்தில் தெரியும்
அங்கத்தில் உறையும் தாயனை ஆறனை
தங்கும் யாவும் தசையின் திறன்
பொங்கும் இன்பம் கோடி பெறும்.
பெற்றவை நிற்றல் நீடித்த பிடிப்பு
உற்றவை ஆற்றலில் இயங்கும் இயக்கம்
வற்றும் நீர் கடலில் பெறுவோம்
ஆற்றும் சேவை சேர்க்கும் வையகம்.
வையகப் பார்வையில் வைப்போம் கல்விச்சோலை
தயக்க மின்றிய செயல்பாடு பயிற்சி
உயர உயர்த்தும் வகைப் போக்கு
இயற்கை இறைமை ஒன்றென காண்போம்.
காணும் காலம் கணிப்பின் படி
நாணும் பெண்டிர் உள்ளக் கோயில்
அணுவும் அசைவும் இல்லத் தசைவு
மாண்பும் மகிழ்வும் கொண்டு திளைப்போம்.

வாழ்வதே அன்பிலும்
பண்பிலுமே ! ஏசுவதேனோ!!
காலை உணவு தரம் பார்த்து
மாலை வரை மதி கொண்டு
வேலை வாய்ப்பு பெறும் தகுதி
அலை யலையாய் பெண்டீர்க்கு ஏனோ!
ஏனைய அறிவுரை வழங்கும் முறை
தானை தரணி போற்றும் வண்ணம்
மானே தேனே கெஞ்சி கொஞ்சி
தானே எல்லா மென ஏசுவதேனோ!
ஏச்சும் பேச்சும் இரு பாலாரக்கே
இச்சை அடங்கும் வரை ஆசை
கச்சை கட்டிய கடிவாய் அடக்கு
பச்சை இலைப் பண்பேத் துளிர்க்கும்.
அகவல் சூழ் மெய் யழகு
தகவல் அறியும் உணர்வு காணும்
மகளிர் மட்டுமே பெறும் பேறு
பகலிரவு எப்பொழுதும் சூழும் வேலை.