https://twitter.com/ctv1957/status/1604680534700892162?t=OghFHOew0pGKqsKn_bCOmg&s=09
Author: THANGAVELU CHINNASAMY
உலக கால்பந்து போட்டி: கோலமும் குறியும் கம்பத்துள் செல்வதே
உலக கால்பந்து போட்டி:
கோலமும் குறியும் கம்பத்துள் செல்வதே.
பந்து போட்டி வெல்ல காலே
உந்து ஆற்றல் தீர்ப்புத் தடம்
தந்து உதவ புல் முதல்
ஐந்து கண்ட நாடும், நாடும்.
நீர் வழித் தூவல் பொழிய
போர் கொண்ட குணம் தவிர்க்க
நார்த் தசை நரம்பும் துடிக்கும்
ஊர் போற்றும் வேக விளையாட்டு.
வினை யாவும் ஒரேத் திசை
ஆனை யில்லாக் கோள்
குறியீடு
நினைவும் நிகழ்வும் திறன் சேர்ப்பதே
ஏனையத் தொடர்பும் நிறைமுறை இலக்கு.
இலக்கு பந்தை தட்டிச் செல்
கலக்கி உதைத்து ஒட்டி உறவாட
நிலத்தில் நீர்வீழ்ச்சி ஊற்றி ஊன்ற
கோலமும் குறியும் கம்பத்துள் செல்வதே.
ஆய்வு பதிவுகள்
நிலை மாறும் உலகில் தரை
வலை நீர் நிலை உயிரூற்று.
மலை மேகம் குளிர் காற்று
தலை கவசம் அணிந்து கொள்
நிலை மாறும் உலகில் தரை
வலை நீர் நிலை உயிரூற்று.
இலை தழை கொடி மரம்
ஓலை குடிசை மாற்று இடம்
அலை அலையாய் கடல் நீர்
கலை அறிவியல் கல்லூரி நடைமுறை
நடைமுறை உண்மை உணர்ந்த செயல்
உடை உணவு இடமே அடிப்படை
தடைக் கல் யாவும் ஊக்கத்தின்
அடையாளம்
மடைத் திறந்தே வழி வகுக்கும்.
கடை என்றும் பொருள்படும் வகை
எடை போடுவதே முதல் முடிச்சு
ஆடை அணிகலன் கவர்ச் சியெலாம்
ஓடைத் தண்ணி பயிர்நிலம் நிறைநிலம்.
எதுகை 9 ‘ ஏ ‘ எனும் ஓரெழுத்து எழுந்து உத்துப் பார்க்கும் எழுத்து ஏழு நீளுமொலித் தொடர் மொழிநீளுமொலித் தொடர் மொழி.
MMT4 : PUBLIC DEBT – People Unilateral Boundary Linking Into Core Direct Energy Bringing-into Trends
வாழ வழி
நாளொன்று போனால் பொழுதொன்றே வழி
ஆளொன்று வீதம் நாமொன்றிய திறன்
தாளொன்றில் தொகுத்து நாவினில் பாடு
பள்ளம் மேடு பார்ப்பதே நல்வழி.
நல்வழி காட்டும் நன்னெறி பழக்கம்
கல்விச் சாலையின் தொடர் புத்தகசாலை
பல்வேறு மொழியும் தாய்மொழியில் ஒன்றிடும்
வல்வினை யாற்றிடும் பிறப்பே சிறப்பு.
சிறப்பு கடைசி வரை காக்கும்
பிறப்பு ஒரு கருவினை யாக்கம்
உறுப்பில் இருக்கும் கருத் தாயனை
பொறுப்பில் மலரும் தொடரனைக் கல்வி.
கல்லில் உள்ளம் தோய்ந்த காலம்
ஆலிழை விதை நேர்த்தி மரம்
பாலில் கலந்து தேனும் சாப்பிட
இல்ல உதவி மாற்றமே செயல்.
வாடி வதங்கிய செடிகொடிகளின் விதைகள்
நாடிச் சென்ற நன்மை தன்மை
ஓடிச் சென்று வேரில் ஊறும்
பாடி பழகி வருவதே நலம்.
இன்று உயிர் வாழும் மேல்பரப்பும்
என்றும் புவியடியும் நீருடன் சுழலே.
அண்டம் அகிலம் அகராதி அறிந்தோம்
உண்டு வாழும் உயிர் துடிப்பு
பண்டம் மாற்றும் சட்டம் மருந்து
கொண்டு கொடுத்து உதவுவதே வாழ்க்கை.
அகண்ட நிலமே விரிந்த கடலே
உகந்த நாள் நேரம் கணிப்பு
ஆக மொத்த பரப்பளவு புவியில்
ஏக மனதாக ஏற்றுக் கொள்.
இம்மியும் அசையாது என்றதோர் நிலை
அம்மியில் அரைக்கும் ஆற்றல் பெற்ற
நம் தளம் கும்மி ஆட்டபாட்டம்
ஆம் அகவை நிறைவில் மகிழ்வு.
வண்ண நிலவே வட்டமிடும் நிலவே
எண்ணக் கடல் சுற்றும் அளவே.
விண்ணைத் தாண்டி வருவாயா எம்
மண்ணில் விளையாடு; உம் திறனையாற்று.
நீர் மலைகள் காடுகள் நிலைப்பு
அரசும் அனைத்து ரகச் சுற்றுச்சூழலே
வர்ணம் பூசி வண்ணச் செயலும்
சொர்க்கம் நரகம் சொல்லும் சமயமோ!
நின்று நிலைத்த புவி ஈர்ப்பு
கன்று ஈனும் திறன் யாவும்
இன்று உயிர் வாழும் மேல்பரப்பும்
என்றும் புவியடியும் நீருடன் சுழலே.