நிறை ஊன்றும் உதவும் பகிரும்.

ஆவி சூழலும் வளி மண்டலம்
பாவி மேவிய நாடும் பொருள்
தூவி அங்கங்கே தொடரில் செல்லும்.
கவி பாடும் பாடல் வரிகள்.

இதுவே முதல் முறை தேற்றம்
அதுவும் குறிப்பினில் பயணம் தோறும்
தாது பொருள் விடும் தூது
சூது வாது காதல் தோது.

உயிர் மூச்சு தொடர்பு ஆகும்
பயிர் விதைகள் பதிய வளரும்
ஆயிரம் கோடி நினைவு அலைகள்
பாய்ந்திடும் ஊர்ந்திடும் சேர்த்திடும் காத்திடும்.

உறவே பண்பே நட்பே பலனும்
துறவே துளிரும் துள்ளல் துளியும்
மறவேன் மாட்சிமை பொலிவே பொருந்தும்
ஏறுவேன் இயல்பின் நிகழ்வே இனிது.

குறை கண்டோர் உரை சொல்வர்
துறை பயின்றோர் நிலை அறிவர்
மறை வேதம் யாவும் வசப்படும்
நிறை ஊன்றும் உதவும் பகிரும்.

படி நிலை -நலம் தரும் இயற்கை இறைமை.

நலம் தரும் இயற்கை இறைமை.

இயல் அசை போட மனம்
பயிற்சி காணும் உள்ளத்தின் வகை
உயிர் மூச்சு நின்று விடுமென
வயல் வெளி அறிந்தோர் பயணமோ?

கல்லை கண்டு கற்ற குறியீடு
எல்லை வகுத்த நில மேம்பாடு
உலக வகுப்பு சமயச் சமூகம்
நலம் தரும் இயற்கை இறைமை.

அற்ற நிலை அறியும் காலம்
உற்ற நட்புத் தரைத் தளம்
பெற்ற பொருள் யாவும் மாறுமென
கற்ற பலரில் உணர்வில் எங்கே?

இழப்பு இலக்கியத்தில் வரலாறு காணும்
பிழைப்பு தேடி வரும் அணுகல்
உழைப்பு வேதியியல் இயல்பின் இருப்பு
மழைநீர் உயிர் நீரிலும் உயிரற்றவையே.

அவை உயரிலா சில சமயமே
இவை இதென கலையிசை அறிவர்
சுவை மணம் உணவு உணர்வு
எவையெவை என்பது குறியீடு வகையே.

திரை கொண்டு உள்ளம் வகுக்கும்
நரை முடி வரவேற்று மகிழ்வோம்
உரை நாடி உரையாடல் பகுதி
கரை சேரும் வரை துடிக்கும்.

பறை சாற்றும் வழிபாடு மொழி
உறை வாழ்வும் வாக்கும் மனமும்
அறை அலையாய் கொண்டு செல்வோம்
நிறை வாழ்வு நிம்மதி தரும்.

சுற்றுச்சூழல் பொருளாதார, சுகாதார மனித திறன் இருப்பு வாழ்வியல் இணைப்பு.

Listen to the most recent episode of my podcast: சுற்றுச்சூழல் பொருளாதார, சுகாதார  மனித திறன் இருப்பு வாழ்வியல் இணைப்பு. https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/ep-e1lb6sc

சுற்றுச்சூழல் பொருளாதார, சுகாதார மனித திறன் இருப்பு வாழ்வியல் இணைப்பு

5 How Thirukural And Accounting Links in Education ? பொறுப்பு மதிப்பாகும்.

Listen to the most recent episode of my podcast: 5 How Thirukural And Accounting Links in Education ? பொறுப்பு மதிப்பாகும். https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/5-How-Thirukural-And-Accounting-Links-in-Education-e1l781l

இசைத் தமிழ் 4 – இயல்பு அசை இசை என்போம்.

Listen to the most recent episode of my podcast: இசைத் தமிழ் 4    –  இயல்பு அசை இசை என்போம். https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/4——e1l4dql