மின்னல் வேக பேரலை
மின்னல் வேக பேரலை :
மின்னலொரு கோடி மின்னி மறைந்ததே!
மின்னி வேகம் மேகம் உரசும்,
தன்னுள் அடக்கிய ஓர் திரட்டு.
மின்னலொளி ஒரு கோடி மின்னாற்றல்
சன்னலொளி எதிர் எதிரெதிரனில் வேகத்தட்டு.
வேகத் தட்டுடல் வெகுண்ட மின்னல்
மேகத்தட்டில் திரள்வளி
திரலொலி ஊக்கி,
வேக ஆற்றலில் பேரொளித் தாக்கம்.
தாக்க வகை கரு மேகத் திரலொலி
ஆக்கமேக வேகம் நிலம்வரை மின்னோட்ட
தாக்கம், ஓளி எரிச் சுழல்
அக் கதிரொளிச்சுழல் சுடரும் ஓளிச்சுற்று.
ஓளிச் சுற்றின் வேகக் காற்று
எளிதில் வழங்கும் இயற்கையிறை பங்கு,
எளிய பசுமை இருக்க புவி
ஆளின் உணர்வும் அமைதி ஆகட்டும்.