அரசின் பொறுப்பும், ரிசர்வ் வங்கியின், வங்கி நடவடிக்கைகளும், தாங்கள் பதிந்து உள்ளது போல, பண நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அரசும், ரிசர்வ் வங்கியும், ரொக்க பண நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, ஒரே நேர்கோட்டில் செல்ல வேண்டிய பயணிகளாக இருக்க வேண்டுமே தவிர, யாரின் அதிகாரம் மதிப்பு உடையது என்று கருதுவது, அந்தந்த நிறுவன நடவடிக்கையின் நிலையாமைக்கு உகந்ததாக இருக்காது.
ஆரம்பகாலத்தில் இருந்தே வங்கி வராக்கடனை வசூலிக்கப்படும் பொழுது, அரசுப் பொறுப்பில் உள்ள அரசியல் கட்சிகளும், ரிசர்வ் வங்கி வாராக்கடன் வசூல் நடவடிக்கைகளில், தொடர்ந்து முட்டுக் கட்டை போட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.
பன்னாட்டு விலை நிர்ணயிப்பிலும் கூட, அனைத்து
பண நடவடிக்கைகளின் பொறுப்பில் அமெரிக்கா, தனது உயர் நிலை ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையில், தமது நாட்டின் விலை நிர்ணயிப்பில்,
உயர்ந்த விலைத் தன்மையை எப்பொழுதும் நிலை
நாட்டுகிறது.
இந்நிலை, பண நடவடிக்கைகளில், நமது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் பண நிர்வாகத்தில், இருப்பு நிலை பரிமாற்றத்தில் சரியாக
நிர்வகிக்க இயலாத நிலையை உருவாக்குகிறது என்பதும், நமது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு மந்த நிலையை உருவாக்குகிறது
என்பதும் ஓர் உண்மையாகும்.
விமர்சனம் – தி இந்து தமிழ் விசை -இன்றைய நாள்
கடன் ஏய்ப்பாளர் பட்டியல்: ரிசர்வ் வங்கிக்கு என்ன தயக்கம்?
வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்ததாவர்கள் பட்டியலை வெளியிட தயக்கம் காட்டுவது ஏன் ? அரசியலில் செல்வாக்கு பெற்றவர்களும் பெரும் நிறுவனங்களை நடத்தும் தொழில் அதிபர்கள் போர்வையில் இருப்பவர்களுக்கு ஏன் இந்த சிறப்பு சலுகை? சிறு விவசாயிகள், சிறு, குறுந்தொழில் செய்பவர்களுக்கு கடனை வசூலிக்க எடுக்கும் நடவடிக்கைகள், ஒரு சிறு அளவிலாவது, ஏன் இந்த மேல் தட்டு மக்களிடம் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். அதற்கு ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தால், ஆளுங் கட்சிகள் ஏன் தடுத்து நிறுத்த எத்தனிக்கிறது. ஆண்டுக்கு ஓர் நியதி, ஆளுக்கு ஒரு நியதியா? நாணயம், நாணய ஒழுங்கு நடவடிக்கைகளால் மட்டுமே நிலைப் பெற செய்யமுடியும். அரச பவனியில் வருபவர்களின் நடவடிக்கைகளால் மட்டும் தான் அரசு அங்கம் நாணய பரிவர்த்தனைகளில் செயல்படுத்த முடியும். அரசின் பணி, மக்கள் அனைவருக்கும் பயன்படும் எனற் நோக்கம் நிறை வேறும் காலம் எப்பொழுது? நாணய பரிமாற்றம் நாகரிக, கலாச்சாரத்திற்கு பயன்படட்டும்.
செயல் மன்றம் / Seyalmantram
Like this:
Like Loading...