மெய்யழகு அரசியல் சார்ந்தது – அருணா ராய் –
அந்தாதி எதுகை பாவின – நூல் பார்வை.
அங்கம் எங்கும் தங்கும் வாழ்க்கை
இங்கே மின்னும் வண்ண வடிவம்
தங்கள் பார்வை படிவம் வாழ்வு
நீங்கள் நாளும் செய்யும் முறைமை.
முறைமை மண்டல படிவநிலை காட்டும்
அறை கொண்ட செல்லினம் செல்லும்
பறை சாற்றி பகிர்ந்து கொள்ளும்
இறை காக்கும் வையக தகுதி.
‘தகுதி’ ‘த’கவல் ‘கு’டியரசு ‘தி’றன்
பகுதி குறியீடு செயலாக்க நேரம்
தொகுப்பு நெறியுரை மரபுக் கொள்கை
வகுக்கும் பேச்சு நடைமுறை நட்பு.
நட்பு வேரெழுத்து முதல் நிலைத்தேர்வு
கட்டிய அறிகுறி தலைமை தலைமுறை
பட்டறிவு பதிவு கருத்தியல் ஆய்வு
காட்சி யாவும் நாடும் கூடும்.
கூடும் நாடியும் பாடும் பயிலகம்
ஏடும் புகட்டும் பாடத் தொடர்பு
காடும் மலையும் சுழலில் நகரும்
ஆடும் ஆட்டம் கூடும் நிதியியல்.
நிதியியல் வாழ்குழுவில் சமூக பணி
நதி இயல் நீரும் நிலத்தில்
‘மதி’ ‘ம’திநுட்ப ‘தி’ரள் மூலத்தொடரியல்
‘ஆதி’ ‘ஆ’ளும் ‘தி’றவுகோல் பயிலகம்.