உலகத் தொடர் பரப்பி எளியோரிடம் சேரட்டும்

தொடர் பரப்பி எளியோரினம் சேரட்டும்!

உலகத் தொடர் பரப்பி(USB) பருப்பொருள்
பலரது கையிலும் நற்றமிழாகட்டும்.

மாத்திரை ஓங்கிய ஒலிப்பு முறை
       சித்திரை மாத தொகுப்பு ஆண்டில்
ஆத்திரை யிலிங்கே முத்தமிழும் படம்
        நித்திரை வரை செல்லொளி பேழை.

பேழை தங்கிய பெட்டி இன்று
     அழைப்பு மணியோசை அருகருகே உளப்பதிவு
நுழை வாயில் கட்டமைப்பு மின்னியல்
       உழைப்பு என்றும் ஒன்றி ஓங்கும்.

ஓங்கும் பொருள் தரும் சொல்
     தங்கும் காலம் வரை செல்லும்
இங்கு மங்கும் ஓடிய நடைமுறை
      நங்கூரப் புள்ளியில்  உலகத்தொடர் பரப்பி.

பரப்பில் தொடுப்பு இணைப்பில் இருப்பு
     நிரந்தர இணைப்புத் தளத்தில் தயார்
தரமிகு பொருட்கள் தரணிப் பருப்பொருளில்
     உரமிட்டு(உறுதி) எங்கும் வாழும் வாழ்க்கை.

வாழ்க்கை அறம் என்பதே உண்மை
      தாழ்வில் உள்ளோர்க்கு தகவல்‌ செல்லட்டும்
ஊழ்வினை யென்று ஏழ்மையை பழிக்காதே
      ஆழ்ந்த ஈடுபாடு கொண்டோர் எளியோரினமே.

28 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு – மனித படிமலர்ச்சி- தற்கால மனித இன ஆரம்ப கால அறிகுறிகள்

மனமே அம் ஒலியில்  மனம்
     மனம் உயிர்சார் பாலுட்டி இனம்
இனம் இடம் பெறும் மனிதம்
     மனிதம் உயிரின நிகழ்வு படிமலர்ச்சி.

படிமலர்ச்சி படிவம், வடிவில் வரலாறு
    ஆடி அசைந்து நடக்கும் உயிரியம்
நாடி நகரும் தன்மை அறிவு
     ஓடியாடி வாழ  தொடர் வழிநிலை .

வழிநிலை வாழும் மக்கள் இறைமை
     தொழில் நுட்பம் சார்பு நிலை
வழி வகுக்கும் வகை உண்டு
      வாழிய வாழியவே உயிரியக் கொள்கை.

கொள்ளும் அளவு நீர் சேரும்
      அள்ளும் பணியில் ஈடுபடும் பொருள்
துள்ளும் உள்ளம் உணர்வில் சேர்க்கை
      தள்ளி போடும் பழக்கம் ஊறும்.

ஊறும் உமிழ்நீர் நாளம் சுரக்கும்
      சாறும் சிறிது தேனும் பருகு
ஆறும் வரை செல்லும் வல்லமை
     ஆறுதல் கூறும் போது  வெளியிடு .

கீழடி நாலடிப்பா !

நண்பர் தமிழ்த்திரு. சீதாராஜன் அவர்களுடன்(வ.உ.சி மகள் வழி கொள்ளுப் பேரன்)
——————————————–
– கீழடி அருங்காட்சியக (ஒரு சில படங்களுடன்) உலாப்பதிவு.,
————————————
கீழடி காட்சிப் பொருள்கள் –
ஆழம் அளந்த அகழ்வாராய்ச்சி – கோடிக் கணக்கி லாண்டிலங்கே !!
————————————–
முன்னோர் பதித்த கீழடிக் காட்சி
பின்னோர் காலத்து காலடி நீட்சியறிவு
அன்னாரின் (ஒத்தவரின்) இனியவை தொகுத்தோர் முடிவே
நன்னீரால் வளம் பெறும் நாடு.

நாடு நாடும் நகரும் நகர்
வீடு, வீதி வழிமுறைக் கொள்ளும்
தொடும் வரை அகன்று விரியும்
வாடும்(பசி., ) மக்களின் நீதியே தொடர்.

தொடர் ஆகி திரட்டிய இயல்பு
வடம் பிடித்து ஓடிடும் பண்பு
நடமாடும் வரை மனித வளம்
உடம்படு மெய்வழி முறையடி வாழ்வறிந்திடும்.

வாழ்வறிந்த படிமலர்ச்சி நிலை கண்டார்
ஆழ்ந்த ஆய்வகத் தொடர் கொண்டார்
காழ் விரித்த மண்பாண்டம் செயல்பாடு
பாழ்பட்டு நின்றடித் தோற்றம் காட்டுதிங்கே.

காட்டும் காட்சி சாட்சி சொல்லும்
நாட்டின் நடப்பறிந்து ஊன்றுகோல் அருங்காட்சியகம்
வீட்டினப் பொருட்களின் வழி காட்டும்
பட்டினப் பழக்கமும் கோடிக் கணக்கிலங்கே.

மலைக்கோட்டை அகவை 350 கோடியாண்டு !
இமயமலை அகவை 100 கோடியாண்டு ! !

மலைக் கோட்டை அகவை 350 கோடியாண்டு.



மலைக்கோட்டை புவியடி நம் தளம்
வலைப் பின்னலில் இயங்கும் புவியடித்தட்டு
கலைந்திடும் அடித்தட்டு கற் பாறைச்சரிவு
மலைத்தொடர் கற்கோட்டை கல்கண்டார் பொன்மலை.

மலை மண்பரப்பில் வளரும் உயிரியல்
கலைத்தொடர் அறிகுறியில் உயிரணு நிலைவிலி.
இலை காய்கறித் தோட்டம் அழகு
உலை வைத்து உண்பதும் பழக்கமே.

பழக்கம் நிலைத்து நின்ற தாயனை (DNA)
வழக்கமாய் உண்பதே உடம்படு மெய்
கழகம் கட்சிப் பிரிக்கும் வைப்பகம்
உழவுத் தொழில் விளைச்சலில் படிமலர்ச்சி.

படிக்கும் பயிற்சி மூலமே அடைவது
தடித்த தோற்றம் பெறும் ஆக்கம்
அடித்து பிடித்து நடுவோர்க்குத் தெரியும்
கடித்து கணித்து உண்பதும் தொடர்பே.

தொடர்பு படிவம் பதிவு மீள்
நடப்பு கணக்கியல் பதிவு செய்
வடமிடம் வட்டமிடும் புவியடி அடுக்கு
தொடத் தொட மண்டலமும் நகரும்.

நகர்ந்த அடித்தட்டு புவியடி மலைத்தொடர்
தகர்ந்து சென்று பற்றிய மலைச்செடி
அகன்றே சேர்த்திட்ட பனிமலை இமயம்
இமயமலை குறியீட்டுத் தகவலில் அறிவோம்.

வளி அறிகுறி! ‌ ‌ ஒளி வழித்தடம்!!

வளி அறிகுறி !
ஒளி வழித்தடம் !!

மண்ணில் தோன்றும் சொற்பொருள் விளக்கம்
       விண்ணில் பறக்கும் நற்றொடர் அன்றோ!
பண்ணில் பாடும் பாணரின் மெய்
        கண்ணில் படும் எழுவாய் சொல்லும்.

சொல் முறைமை கோடி யாண்டும்(என்றும்)
      வல்லமை உந்தவோர்  முன்னணி குறியீடு;
பல்சுவை இதழ் குறிப்பின் மூலம்
        நல்லியல்பு வழங்கும் வழக்கம் ஆகும்.

ஆகும் கருணை உள்ளம் உள்ளும்
      போகும் வண்ணம் பண்பே மரபணு
நோகும் நோய் எதிர் தடுப்பு
       ஏற்கும் வகை மரபில் சேர்க்கும்.

சேரும் இடம் பெற்றவை பொறுப்பு
        ஆரும் அடங்கும் கடக்கும் நிலை
தாரும் உவகை பொங்கிப் பாடும்
       வரும் வகை யறிந்திடுவதே ஞானம்.

ஞானம் பெறும் ஆற்றல் வாய்ப்பு
      வானம் வசப்பட வேலை செய்யும்
தானம் தவமிரண்டும் வழங்கும் நீரது
      ஆன முதல் தொகுப்பே சுழல்.

சுழல் உட்புற வட்டம் விரியும்
     அழல்(நெருப்பு) கொள்ளளவு தொடும் அளவே
நிழல் நிலத்தில் பதியும் வண்ணம்
      தழல் சுடர் ஒளி வழித்தடம்.

புவியறிதல் நம்நிலையறிதல்

புவியறிதல் நம்நிலையறிதல்

விண்ணசைவில் எழும் இப்புவிச் சுற்று
மண்ணசைவில் பருப்பொருள் வேற்றுமை பெறும்
கண்ணசைவில் காணும் இன்பம் கோடி
உண்ணசைவில் பல்லுயிர் உன்னுள் காக்கும்.

காக்கும் படை அமைவு வழிகாட்டி
‌தாக்கும் தரணி கால வரையறை
நோக்கும் போர் களம் காக்குமா?
வாக்கின் தன்மைதான் தரம் குணம்.

குணம் கொண்ட தொடர் மதி
கணம் உள்ள நிலை கல்வி
மணம் புரிந்து கொள்ளும் வண்ணம்
அணம்(அண்மை) இலக்கு இலக்கணம் கூறும்.

கூறும் வகை மெய் அறிவது
ஆறும் அதனதன் தொடர் அறிவது
உறுப்பு நாளம் தசை அறிவது
சாறு பிழிந்து மொழி பலரறிவது.

நேயமுடன் பகிர்க!
வையக நிலையறிக!!

நேயமுடன் பகிர்க!
வையக நிலையறிக!!

இளமை துள்ளும் உள்ளம் அள்ளும்
     வளமை பொங்கும் இன்பம் கொள்ளும்
கோளம் கலசம் ஞானம் நாளும்
     நாளம் தாங்கும் திறன் மிகும்.

மிகும் கடமை முடிவில் ஆர்வம்
     தகும் வடிவம் தங்கும் இடம்
வகுக்கும் வகை பெருகும் பொழுது
      பகுக்கும் பருவம் ஆரம்பம் தொடரும்.

தொடரும் யாவும் பெயரளவு உண்டு
      வடம் பிடித்து எழும் சொல்
உடம்படும் மெய் ஞானம் தரும்
      இடமிடும் கொள்வகை பிடிதரும் உள்நிலை.

உள்நிலை உவகை உயிரினம் காக்கும்
      ஆள்நிலை சொல்லும் அளவு எழும்
தாள்நிலை தடம் பதிக்கும் பணி
      வாள்(பூக்கோள்)நிலை வாழும் இறைமை இயற்கை.

இயற்கை பேரெழில் உயிரியக் கொள்கை
      நயம்பட உரைக்கும் பாடலகப் பொலிவு
ஆயகலைகள் பதியும் பாவின வகுப்பு
      நேயமுடன் பகிர்க! வையக நிலையறிக!!


       
   

தமிழ் சொல் ” கண்ணி ” சொல்லி பழகுவோம்

தமிழ் சொல் ” கண்ணி ” சொல்லி பழகுவோம்.

கண்ணி:

பூமாலை, பூங்கொத்து, சூடுகின்ற பூமாலை, தலைமாலை, ஓர்இசைப்பாட்டு, கரிசலாங்கண்ணி.
எனப் பொருள்பட தமிழ் மொழி முறைமை வழிமுறை ஆகும்.


கண்ணி சொல் முறைமை :

கண்ணி எனும் சொற்‌ பொருள்
கண்ணில் பட வேண்டி நாளும்
கண்ணியம் கட்டுப்பாடுடன் அழகுறச் சொல்வோம் ;
கண்ணிமைக்குள் பகிர்ந்து கொள்ள விரும்புவோம்.

விரும்பிய அரும்பொருள் சொல் வழக்கம்
வரும், வரலாற்றில் தொகுக்க முடியும்;
தரும் வகையில் பண்டைத் தமிழினை,
ஊரும் பேரும் அறிந்து கொள்ளும்.

கொள் நினைவில், பழக்கத்தில் ஏற்றிடு ;
‌உள் நுழைய தடுமாறும் ‘டண்’ணகரம்
தாள் தேர்வு மூலக் கொள்கையோடு
நாள் ஒன்றுக்கு தமிழ்சொல் அறிவோம்.

அறிந்து கொள்ளும் நுண்ணுயிர் உணர்வு
கறிவேப்பிலை போல் ஏற்க மறுத்தாலும்
நெறிமுறை தொகுப்பில் சீராக அமையும்
அறிவோம் “றன்”னகர ‘கன்னி’மொழி வேறுபாடு.
லாலாலஜபதிராய்

பாரதியார் 48.
‘லாஜாபதியின் பிரலாபம்’

கண்ணிகள் :

நாடிழந்து “மக்களையும் நல்லாளை யும்பிரிந்து
வீடிழந்திங் குற்றேன் விதியினையென் சொல்கேனே?

ஓர் பாட்டு :

திபதை, பெயர்ச்சொல்.

இரண்டடிக் கண்ணிப் பாட்டு.
இசைப் பாடல் என்பது இரண்டு இரண்டு அடிகள் கொண்ட பாடல் வரிகள் ஆகும்.

இரண்டு இரண்டு மலர்களை வைத்துத்தொடுக்கும் மாலைக்குக்
கண்ணி என்பது பெயராதலின் திபதையைக் கண்ணி என்று வழங்குவர்.

ஊடிழை 2

ஊடிழை 2 (Inter Literariness)

ஊடிழை இயக்கவியல் இலக்கு முறை
நாடிழை நகரும் மெய் இயல்பு
ஆடிழைந்து ஊக்கம் தரும் சொல்
ஏடிலிழைந்து கணிப்பில் கணிக்கும் பழக்கம்.

பழக்கம் உள்ளவர் கவி பாடுவர்
கழகம் கூடி கட்டும் பணி
மழலையர் பேச்சிலும் தொடரும் பதிவு
ஆழம் கொண்ட உரையும் விளங்கும் .

விளங்கும் ஆர்வமிகு கதை கதைக்கும்
நளமிகு மொழி ஆற்றல் ஆதரவு
வளமிகு உரையிடை வழங்கும் வளரும்
தளமிகு மனமது நினைவு மலரும்.

மலரும் முகம் மேலும் சொல்லும்
அலகியல் அறிவுக் கூர்மை நிகழும்
நலமுடன் வாழ வளர் இளம் பருவம்
கலம்(உயிரணு) செல்லும் காலமே வாழ்வு.