மின்னல் வேக பேரலை

மின்னல் வேக பேரலை

மின்னல் வேக பேரலை :

மின்னலொரு கோடி மின்னி மறைந்ததே!


மின்னி வேகம் மேகம் உரசும்,
தன்னுள் அடக்கிய ஓர் திரட்டு.
மின்னலொளி ஒரு கோடி மின்னாற்றல்
சன்னலொளி எதிர் எதிரெதிரனில் வேகத்தட்டு.

வேகத் தட்டுடல் வெகுண்ட மின்னல்
மேகத்தட்டில் திரள்வளி
திரலொலி ஊக்கி,
வேக ஆற்றலில் பேரொளித் தாக்கம்.

தாக்க வகை கரு மேகத் திரலொலி
ஆக்கமேக வேகம் நிலம்வரை மின்னோட்ட
தாக்கம், ஓளி எரிச் சுழல்
அக் கதிரொளிச்சுழல் சுடரும் ஓளிச்சுற்று.

ஓளிச் சுற்றின் வேகக் காற்று
எளிதில் வழங்கும் இயற்கையிறை பங்கு,
எளிய பசுமை இருக்க புவி
ஆளின் உணர்வும் அமைதி ஆகட்டும்.

Words (an Acrostic Poem)

Words (an Acrostic Poem)    Wandering along this winding road  Over hallowed hills carrying my ethereal load  Rivers of tears overflowed into the sea  Disheartened, but encouraged by the prevailing breeze  Secretly, I keep sailing toward her sacred tree  Tullawalla is Available From Jaymah Press:https://www.jaymahpress.com.au/ Ivor Steven: email, ivorrs20@gmail.com Amazon: search via, ‘Tullawalla by Ivor Steven’ ANDPerceptions is […]

Words (an Acrostic Poem)

WORDS in Acrostic Poetry

With Operations Registry Design System

Wide Onto Regulate Directional Sources

Waiting On Regular Deviation Signals

Worthy Of Ruling Developmental Stages.

மோனை உயிரெழுத்து பா

மோனை உயிரெழுத்து பா

மோனை உயிரெழுத்து பா

அந்நாள் முதலே, சுழலும் புவி
ஆதி மனிதருள் அனைவரின் மரபணு.
இந்நாள் நமது இனிதான அமைப்பு
ஈந்தோர் தொகுப்பின் மூலச் சேர்க்கை.

உண்மை கண்டோர், மேலும் சொல்வர்.
ஊரார் வாழ்த்தும் உயரிய பாங்கும்
என்றும் அன்புடன் கூறுவதே நிலைக்கும்.
ஏனென்று கேட்பதும், அறியும் வழி.

ஐக்கிய முறைப்படி வழங்க இசைவோம்
ஒன்றியதே உயிரிய புவிசார் சுற்று
ஓராயிரம் ஆண்டும் கணிப்பு முறை.
ஔவை வரிகளில் கற்போம்! வாழ்வோம் !!

அஃதே நிலை ஆளும் பண்பாடு.

மே நாள் பதிவு

மே நாள் பதிவு:


உள் நிகழ்வே உள்ள உண்மை
அள்ளிக் கொடுக்கும் பருவக் குறிக்
கோள் எது என்பதே உடைமை
நாள் நேரத்துள் உயரும் உழைப்பு.

உழைப்பை கண்டாளுபவரே முதல் ஆளர்
தழைக்க வேண்டுபவரே உழைப்பு ஆளர்
உழைக்கும் முறையறிபவரே அறிவு ஆளர்
உழைப்பைத் தரமாக்குபவரே
செயல் ஆளர்.

ஆளர் என பொருள் விளங்கும்
தாளாளர் வகுக்கும் வேலை வாய்ப்பு
நாளாக தொடர் மொழி தானெங்கே
ஆளாளுக்கு ஒரு கேள்வி ஞானம்.

ஞானமொழி பேசும் பேச்சு வழக்கு
ஆன கதை யிலக்கு அறக்கூற்று
வான மெங்கும் பரிதிநேரக் கொள்கை
கான மென பாட்டிசைப்புத் தொடர்.

தொடரும் நிலையுளவும் ஆங்கு பண்
படரும் வாழ்வு விசைக் கண்டோர்
நடப்பு அமைவிடம் ஒன்றைத் தேடி
கடந்து வந்த பாதையில் தெய்வம்.

தெய்வம் இருப்பது எங்கே என
வாய்மொழி இலக்கியத் தேர்வுத் திருவிழா
ஆய்ந்து அறிந்து கொள்ள முடியும்
தாய் தந்தைக்கு கடமையே உள்ளும்.

உள்ளும் புறமும் நிற்கும் மனிதம்
நாள் நேரம் வகுக்கும் வேலை
தாள் பணிந்து பதியும் சொற்கள்
உள் நிறைவு எம் உழைப்பு.

உழைப்பே உயர்வு தரும் இயற்கை
இழையும் உயிரில் வாழ முடியும்
ஏழை எளிய மக்கள் யாவரும்
உழைக்கும் கரங்களே! நாளும் வணங்குவோம்.

சொல் தமிழ் சொல் கோடி

சொல் தமிழ் சொல் கோடி

வானாகி மண்ணாகி புல்லாகி மரமாக
        ஊனாக உயிராக நேசித்த தம்மிதழை
தானாக முன்வந்து தொடர்புக் கொண்டார்
     தானே சிறப்பு கண்டோர்; பெற்றார்.

புதுவை சுப்புரத்தினம் சுப்பையாவின் பாவினம்
     ஏதுவாய் கவிதையில் பதிவில் பாட்டைமைத்து
தூது விடு தத்தை தமிழ்
      காது குளிர கேட்கும் நற்றமிழ்.

நற்றமிழ் வல்லமை நெஞ்சில் நிற்கும்
     பற்றும் மொழி சொல்லும் அளவு
ஏற்றத் தமிழ் அறிந்து கொள்வகை
      ஏற்றுக் கொள்; தொடர் தமிழறிவு.

தமிழறிவு உள்ளத்தார்; வெளிநாட்டிலும் தொடர்ந்தார்
       தமிழ்ச் சொல்லில் பயிலக இயக்கம்
தமிழ் வரலாற்று நிலமெங்கும் பரவட்டும்
தமிழ்நாடுத் தன்னகத்து மொழி தானெங்கே?

ஊடிழை – Literariness

ஊடிழை

ஊடிழை(Inter Literariness)

ஊடிழை உயிரணு உயிரியல் மரபணு
கூடிய நிறை வினைத் தொடர்
மூடிய தாயனை படிமலர்ச்சி நிலை
நாடி வளரும் மெய்யின மக்கள்.

மறை யின மனிதச் சேர்க்கைகள்
அறை கொள்ளும் அடிக்கரு நீளும்
உறை விட மூலக்கூறின் அடர்த்தி
மறை பொருள் உள்ளமைத் தொகுதி.

தொகுப்பின உட்கரு முட்டை செல்
வகுப்பின காப்பு முறைப்படி அமைப்பு
தகுந்த ஆறனை தாயனை விந்திணை
பகுப்பு மூல குறியீடு எழும்.

எழும் தலைமுறைப் பிரிவினைத் தோற்றம்
வாழும் வழி வகுக்கும் மரபணுக்கள்
தோழமை செயல் விளைவுத் தொடர்பு
இழை யுருப்பிரிவு உகந்த ஊட்டம்.

ஊட்டம் தரும் உறுதி பிடிப்பு
நாட்டம் கொண்ட தொடர் வரிசை
ஒட்டும் பகுதி உறுப்புகள் மாற்றம்
மட்டும் எதிர்நேர் விசைப் பலகை.

பல்கலைத் தேர்வு மூலக் குறி
வல்லமை உந்தவோர் குறியாக்க பெட்டகம்
நல்வரவு பயணத் தன்மை பெருக்கம்
உல்லாச ஊர்தி படிமலர்ச்சி படிவம்.

ஏழைகளே நிறைவை கொள்வர்!

ஏழைகளே நிறைவை கொள்வர்!

நாளின் கணிப்பு நம்மவர் கொண்டவர்
     ஆளின் கணிப்பில் நிலம் நீர்க்கொள்கை.
தாளில் பதித்து மதிப்புறு கொள்வர்
     அளித்திடும் தன்மையே இறைமை இயற்கை.

இயற்கை பங்கு காட்சிப் படலம்
      உயர மலரும் பூ மொட்டே
இயல் இசை திரிந்த காலம்
     வயல் வெளிப் பயணப் பாதையே.

பாதை வழி வகுக்கும் மரபு
     அதை யதை அறிந்த பழக்கம்
சதை சத்து தைத்த உணவும்
      இதை அதனதன் தொகுத்த  தொகுப்பு.

தொகுப்பு தேர்வு மூலக் குறியீடு
      பகுப்பு பேராற்றலே சுற்றும் சுடர்
தகுதி தரம் குணம் திறன்
     வகுக்கும் பொழுது உடம்படும் மெய்யியல்.

மெய் இயல் பொருள் தரும்
     உய்ய உயர மலரும் பண்புகள்
ஆய்ந்து வேரை பற்றும் புவியடி
      ஏய்த்து பிழைக்காதே உளமார உழை.

உழைப்பு என்றும் தராசுப் படிக்கல்
    வாழை மரம் வாழ வேண்டும்
தழைக்கும் துளிர்களே துணைக் கன்றுகள்
    ஏழை எளியோர் சிந்தும் வேர்வை.

வேர் தண்டு நிமிர்ந்த நடை
     பார்க்கும் வண்ணம் மகிழ்ச்சி தரும்
ஊர் உலகம் போற்றிடும் தன்மை
      பாரில் அவருக்கே கொள்முதல் இணைப்பு. 

இணைப்பு பயன்படும் ஆண்டு தோறும்
     பிணைப்பு ஒட்டும் நிலம் நீர்ச்சுற்று
துணைப் பகுதி வரவு வரையறை
      ஆணை ஒழுங்கில் அமைப்பது நிறையும்.
    

சொற்பொருள் தேடி 2 – எழுத்து வழிமுறை வகுக்கும்

எழுமொழி முன்மொழி

யாவும் ஒன்று மிடம் அண்ணம்
பாவும் சேர்ந்து மிடற்றில் எழும்
நாவும் வளியிசை கண் டுடைய
தாவும் ஓசை இறுகும் பிறக்கும்.

பிறப்பு முதலே அன்பசை வழி
திறப்பு விழா யெழும் ஆக்கம்
மறப்பிடம் சொல்லிய பள்ளி நிலையிலும்
பிறப்பிடம் கொள்வதில் எழுமொழி அறியும்.

அறிந்து கொள்வன ஆறுதல் கூறும்
எறிந்து விழி மொழி சொல்லும்
பிறந்து வளர்ந்த பிறகு மொழி
பறந்து சென்று பற்றும் முன்மொழி.

முன் மொழிதல் பற்றி மேலும்
பின் தொடரும் நிலையுள மிடம்
தன் பொறியியல் புலனறிவு ஐவகை
என்றும் அதனைக் குழுவழிமுறை வகுக்கும்.

நிலைமொழி அறிவோம்!

நிலைமொழி அறிவோம்!

நிலத்தை வாங்க விற்க முடியும்!
     மாநிலத்தை கூறு போடும் முன்,
நாநலம் அறிந்து கொள்; வேலை
கலம், நெல், நீர் சேர்.

சேர்க்கை மூலமே விளங்கும் உயிரிழையம்
     பார்க்கும் உலகில் பங்கேற்பீர்! பிரிப்பீர்!!
நார் சத்தில் இயங்கும் மெய்ப்பொருள்
      போர் புரிந்து நாடி அடைவீரோ!

அடைக்கலம் தேடி அலைந்து திரிந்தீர்
     படைத்தளம் கொண்டு பவனி வருவீரோ!
நடை போடும் மனிதா! நிலை
      அடைவீர், நிம்மதி அறிவே மதி.

மதிக்கும் பண்பு நலன்கள் யாவும்
     உதிக்கும் கதிரவனின் ஒளி வீச்சு
ஆதியந்தம் எல்லாம் சிந்தனை வளம்
     வாதிடுவோரே பதி பக்தி இயக்கம்.

இயங்கும் மேலக நெஞ்சின் உரம்
     தயங்கி, தயங்கி நிமிர்ந்து அறிந்தீர்
உயிர்க் காற்று பரந்த  கடல்
     மயிரிழையில் இழைந்திடும் உயிரினச் சேர்க்கை.

சேரும் வரை செல்லும் செல்
     அரும்பு மலரும் பூக்களில் தேன்
ஊரும், உறவும், அன்பும் நட்பும்
     சாரும் சார்பில் இயங்கும் விதம்.

விதம் விதமாக விதை விதையும்
    இதம் தரும் இயற்கை உருவகம்
    ஏதம் காணும் உள்ளம் கண்டு
வேதம் முதலே அன்பசை வழிபாடு.

வழிவகை செய்யும் வாய்ப்புச் செயல்
      ஆழிகடலில் பள்ளி கொள்ளும் அளவே
நாழி அறிந்த நாளும் பொழுதும்
      அழிந்து ஆக்கமே தரும் யாவிலும்.

அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்.

அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்.

அகம் கொள்ளும் மரபணு படியும்
     ஆக மொத்தமென வளரும் தரம்
உகந்த கால வரை அளவில்
      வகுத்து கணித்து வெளி வரும்.

வரும் மெய் ஞானம் பெறும்
      தரும் நிலம் புவி வளம்
பருப் பொருள் ஊடக மையம்
     வருவாய் கொள்ளும் இயற்கை பங்கு.

பங்கு காட்சி தரும் வழிபாடு
     அங்கம் மகிழும் வண்ணம் பண்பு
தங்கள் புரிதலும் நட்புமே உறவு
      இங்கு வாழும் இறைமை என்க.