இயற்கை அலை வளம் (NI Wave)
கருவி பொருந்தும்
முகப்பு பக்கம்
உருவம் கொண்ட கண் காது
பருவம் அண்டும் மூக்கு வாய்
தரும் வகை தோல் நாக்கு.
நாக்கில் சுரக்கும் நீர் சுரப்பி
வாக்கில் மலரும் சொற்கள் தொடுக்கும்
காக்கும் மணக்கும் விழுங்கும்
ஆக்கம் தரும் உயிர்ப்பு உயிரணு.
உயிரணு சிற்றறை திசுவறை அறைகள்
மயிரிழை ஆற்றல் விளங்கும் தோல்
கயிறு போல் இணைக்கும் கை கால்
உயிர் நுண்ணிழை வலம் வரும்.
வரும் வட்டமிடும் தொடும் மெய்பொருள்
அருள் தேடும் நரம்பினை சுழற்சி
பருப்பொருள் இயக்குநீர் பாலகபாதை
உருப்பொருள் உருண்டு செயல் புரியும்.
புரிவதும் அறிவதும் அறிவியல் பாதை
உரியவை அடிப்படை(A) கோர்த்து(G) தைத்து (T)
அரியவகை உட்கரு(C)தாயனைDNA) தொடரியல் ஆறனை(RNA)
சரிசெய்தலில் அவை அலைத் தொடரியல்(NI WAVE).
NI-Natural Intelligence
வாய்மொழி போற்றும் தாய்மொழி ஆளும் ‘இயற்கை மொழி முறை(NLP) அச்சில் செயல்…
நன்று எக்கணமும்
அந்தாதி எதுகை – சொலல்வல்லமை
How A Smartphone Helps to Build Website ?
அந்தாதி எதுகை – சேர்ப்பில் ஒன்றும்.
அந்தாதி எதுகை –
சேர்ப்பில் ஒன்றும்.
சேர்ப்பில் ஒன்றி சேரும் நற்குணம்
ஊர்ந்து ஊரும் பேரும் சொல்லும்.
இன்று உன் நாளை உன்
என்றும் உன் சிந்தனை செயல்
நன்று நிலைத்திடு நாளும் சென்றிடு
ஊன்று கோல் கருதுகோளில் என்றும் .
என்றும் உனை உறுதி கொள்வாய்
இன்முகம் நற்செயல் நன்றியுடன் கலந்திடும்
பன்முக ஆளுமை பண்பாட்டில் நிலவும்
ஆன்றோர் சொன்னவை ஆழ்ந்து அறிந்திடு.
அறிந்த கால கட்டம் அமைத்திடும்
செறிந்த சொல் கேளீர் அழகியல்
பற்றிடும் அழகில் மதிப்பு மிகும்
நற்றமிழ் இணைப்பு ஒருமுக கோர்வை.
கோர்வை அணியில் பற்றிய தகவல்கள்
பார்வை கொள்ளும் நோக்கில் வட்டமிடும்
சேர்ப்பில் ஒன்றி சேரும் நற்குணம்
ஊர்ந்து ஊரும் பேரும் சொல்லும்.
அந்தாதி எதுகை புகழும் பாராட்டும்
அந்தாதி எதுகை பாவினத் தொடர்
புகழும் பாராட்டும் குணமும் திரளும்
புகழ் ஆளர்க்குத் தானோ!
பாராட்டுதல் யாவும் செல்வாக்கு உடையோர்க்கு
சீராட்டி மொழியில் நாவில் தொடர்வோர்க்கு
ஆராய்ச்சி ஆய்வு அறிந்து பதிவோர்க்கு
ஓராயிரம் முறை ஒப்பீட்டு பார்வை.
பார்வை கொள்வோர்க்கு வகுக்கும் பாதை
போர்வை போர்த்தும் இடைவெளி காலம்
ஏர்பூட்டி சென்ற
சோழ தலைமுறை
மார்தட்டி பகிரும் அந்தாதி எதுகை.
எதுகை பாவினத் தொடர் ஓரெழுத்து
இதுவும் பாவின மொழிதான் பாவலர்காள்
அதுவும் அன்பின் துணைநிலை அகராதி
ததும்பி வழிபடும் நேர்மை தொகுப்பு.
தொகுப்பு பதிவு பேரண்ட அதிர்வுத்தொடர்
தொகுதி தொண்டில் குறியீட்டு திசை
விகுதி விண்வெளி குறியீட்டுடன் மண்வள
பகுதி பலரும் குறித்த திறனாய்வே.
14. 5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உயிரிகளைத் தின்ற காலம்
14,50,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
உயிரிகளை தின்ற காலம் எனப்பதிந்து உள்ளனர்.
உயிரக காடி தாயனை(DNA) இணைவு
ஆயிரமாயிரம் ஆறனை(RNA) தொடர்பு.
வான் சிறப்பில் பெறும் துடிப்பு
தான் என்றொரு தருணத்தில் கரு
இன்சொல் பேசி நன்னெறி சேர்க்கும்
பன்முக ஆற்றல் இயற்கை முறை.
தலை முதல் கால் வரை
இலை மறை காய் தொடர்பு
மலை முகடு பள்ளத்தாக்கு பகுதி
அலை அலையான தொடரில் கண்டனர்.
கண் காது மூக்கு வாய் மெய்
அண்மை அருமை செல்லும் செல்
உண்மையில் உயிர் தாங்கும் வாய்ப்பு
ஆண்மை பெண்மை கலந்த உயிரணு.
உயிரணு உருவாகி அருகருகே தொடராக்கம்
பெயரளவில் அறிந்து முறைமை கொள்வோம்
ஓயாத வழி யாவும் பகிர்வு
உயிரின அணுக்கருவினில் தாயனை ஆறனை.
அந்தாதி எதுகை பாவினத் தொடர் இலக்கிய இலக்கண அறிவு
இலக்கியத்தின் இயல்பும் கணநேர புரிதலும்
இலக்கிய இலக்கண எழுத்தறிவு.
நீள் வட்டப்பாதையில் கதிரவனின் ஒளிநாடா
கோள் வட்டப்பாதையில் வடிவுண்ட புவி
வாள் ஒன்றில் பிரிந்து சேரும்
நாள் ஒன்றென அறிவியல் நம்சுற்று.
நம் சுற்றுலா மனித கூட்டரசு
ஆம் என்று அறிந்தோர்க்கு வானமே எல்லை
எம் மொழியறிவு செம்மொழி தொடர்
உம் எனும் ஊரே உதாரணம்.
உதாரணம் எடுத்துக் காட்டும் நரம்பொலி
மாதர் மண்ணின் வளம் ஆகும்
பிதா பின்புலத்தில் என்றும் எல்லை
ஊதா செம்மை கலந்த நீலநிறம்.
நீலநிறக் கருவழி கோள வடிவம்
இல இல்லாத லட்சியக் கோடுகள்
சில பொருந்திய நீள்வடிவ காப்பு
பலரும் படித்து அறியவே பல்கலைக்கழகம்.
அந்தாதி எதுகை பாவினத் தொடர் – ஆழி சூழ் உலகு
ஆழி சுழ் உலகு சுற்றும்
வழிவழியாய் பின் பற்றும்.
விண்மேல் ஓடும் கரு மேகம்
மண்மேல் விழும் துளிநீர் நிலவிசை
கண்மேல் பலன் கிடைக்கும் புவிவிசை
வண்மொழி யாவினும் பெற்றவை யாம்.
யாம் பெற்ற இன்பம் பெறுவதும்
தாம் பெற்று இவ்வையகம் தழைக்க
ஆம் வான் பெற்ற நன்கொடை
நம் கானக முறை முன்னோட்டமே.
முன்னோர் தொகுத்த தொண்டின் தொடர்
பின்னோர் வகுத்த நிலைப்பாடே வழிபாடு
சான்றோர் வாக்கு மூலப்பதிவே மூலத்தொடர்
ஆன்றோர் கற்றவை பெற்றவையே வாழிடம்.
வாழிடம் உயிரின் உயிரே வளர்நிலை
தொழில் முயற்சியே மூலதனத்தின் இருப்பு
ஆழி சுழ் உலகு சுற்றும்
வழிவழியாய் பின் பற்றும் பழக்கம்.