நன்று எக்கணமும் வல்லமை பெறும்
நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம் .
நன்று நோக்கினில் நாளும் கூடும்
நன்று செயல்படின் அறமும் ஆக்கமுறும்
நன்று எக்கணமும் வல்லமை பெறும்
நன்றே இயங்கும் இயக்கம் பேரண்டம் .
பேரண்டம் பெரும் பொழுது சிறு
அரங்க கதிரவன்
புவிவளி உயிரக
நீரக சுழற்சி முறை விதைப்பில்
பரந்து விரிந்த விண்மீன் வரம்பு.
வரம் தரும் பயண நெறிமுறை
மரபுவழி கூட்டில் மேன்மை பெருகும்
அரசிலும் சிறப்புற வேண்டிய தேவை
உரசிப் பார்த்து தேர்ந்தெடுக்க ஆட்சிமுறை.
ஆட்சிமுறை குழு உறுப்பினர் தேர்வு
நாட்டு உடைமை வாய்ப்பில் உண்டு நாட்களிலும் நல்ல உரிமை சேர்க்கும்
ஓட்டுக்கு மயக்கும் திட்டம் உருபெறுமா?
மலர் போல காக்கும்_காலம்
மலர் போல காக்கும் காலம் கலர் மாறுபாட்டில் வேறுபடும் காசும்.
தமிழ் பாடி வரும் வரை
நிமிர் இலக்கு இலக்கிய இயல்பு
உமிழ்நீர் சுரப்பி உறுப்பு உறுதியுடன்
அமிழ்தம் பருகி பெருகி வளரும்
வளர் இளம் பருவம் முதல்
தளர் பதிவில் நிரலாக்க மொழி
அளர்(உவர்) சோற்றில் சிறிது சேர்
ஆளர் ஆளுமை வளர்ச்சியில் சிலர்.
சிலர் ஆடும் நடன ஆட்டம்
பலர் ஏங்கி வாடும் வாழ்க்கை
மலர் போல காக்கும் காலம்
கலர் வேறுபாட்டில் மாசுபடும் காசும்.
காசு காகிதம் முதல் ஆளராய்
மாசுபட்ட புவி தளம் வாய்ப்பில்
தூசு பறக்கும் சுழல் ஆளாதார
ஆசுகவி நாவின பாதுகாப்பிலும் சமூகமாட்டும்.
ஓர் இணைப்பு ஒருமைப்பாடு ஒற்றுமை
ஆர்வத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்.
ஓர் இணைப்பு ஒருமைப்பாடு ஒற்றுமை
ஆர்வத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்.
காலநிலை மாற்ற விளைவுத் தோற்றம்
அலகு முறை ஒப்பீட்டு அளவு
வலமிடம் நகர்ந்து மாறும் பொருள்
பலமிகு வேறுபாட்டில் உருப்படி சேரும்.
சேரும் இடங்கள் மாறிமாறிடத்து காலமுறை
அரும்பி மலரும் இயற்கை பங்கு
பருப்பொருள் ஊடாடி அருகருகே உறவாடும்
உருப்பொருள் உருண்டு திரண்ட இயற்பியல்.
இயற்பியல் வருமலை பெருமலை உருவஅலை
இயல்புடன் உருவமிலா
கலப்புடன் பெருவெடிப்பு
உயரும் அறிவியல் அனைத்து உயிருக்குமே
இயல் அமைவு ஓரிடச் சேர்க்கையே.
சேர்க்கை நுட்ப அறிவு உதவும்
பார்த்து பயிற்சி பெற்ற ஆற்றல்
ஓர் இணைப்பு ஒருமைப்பாடு ஒற்றுமை
ஆர்வத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்.
உடுத்தி உண்டு மகிழ்வதே இன்பம் நடுநிலைமை சமுதாய பார்வை கொள்.
உடுத்தி உண்டு மகிழ்வதே இன்பம்
நடுநிலைமை சமுதாய பார்வை கொள்.
வீடு உறவு உடைமை யாவும்
நாடு இனம் மொழித் தொடர்
தேடும் துருவம் துருவி முயலும்
ஓடும் விலகி படும் பாடு.
பாடுபடும் பாடலுடன் கூறும் அவை
ஏடுடன் புழங்கும் சொல் கேளீர்
எடுபடும் மேற்பார்வை செயலைத் தூண்டும்
ஆடும் ஆட்டம் உடுக்கும் உடுப்பு.
உடுப்பில் தோன்றும் தோற்றத்தின் மதிப்பு
வடு தழும்பு மறையும் மேலும்
ஈடுபடும் தொழில் நுட்ப அறிவு
மடுவு மலை நீர்நிலத்தில் ஈடுபடும்.
ஈடுபட்டு முயன்றவை தொடர் வாழ்வு
கடும் உழைப்பில் பெறும் தொகுப்பு
உடுத்தி உண்டு மகிழ்வதே இன்பம்
நடுநிலைமை சமுதாய பார்வை கொள்.
பண்ணிய ஆரத் திண்பண்டம் பணியாரமானது
எண்ணிய இலக்கு முறை எணினியானது.
பண்ணிய ஆரத் திண்பண்டம் பணியாரமானது
எண்ணிய இலக்கு முறை எணினியானது.
பண்ணிய ஆரத் திண்பண்டம் பணியாரமானது
எண்ணிய இலக்கு முறை எணினியானது
உண்ணும் பொருட்கள் மாறும் நிலைக்கும்
எண்ணும் இலக்கு எணினியில்
பெறுமொளி .
பெறும் வரை சுழற்சி நடைமுறை
ஆறும் அகலும் சொல்லும் அலகுகள்
தேறும் வண்ணமே வணிக விதிமுறைகள்
ஊறும் தேரும் நீரும் அமைப்பு.
அமைப்பு கொண்ட அகராதி ஆய்வு
அமைத்து கொள்வதில் நலம் மிகும்
தமையன் தந்தை உறவு முறை
இமை பொழுதும் சேர்ந்தே இருக்கும்.
இருக்கும் இருப்பு நிலை ஏடும்
ஊரும் ஊரகப் பார்வை தரும்
பருப்பொருள் சார்பில் உள்ள உருப்பொருள்
கருப்பொருளே கருதும் கருதுகோளில் விளங்கும்.
இன்றைய எமது பதிவு:
கடுகு பெரிது பொடுகு சிறிது
வடுகு எனும் தெலுங்கு வழி
கிடுகு வழங்கும் குடி இருப்பு
முடுகு அசை வடுகர் வகை.
வகை படகுகள் முந்தி செல்லும்
அகை(தளிர்) மலர்ந்து கிளை பிரியும்
சிகை அழகு பிறவி முகடு(பயன்)
முகை அரும்பும் துளசி திருநிலை.
திருநிலை வளரும் தன்மை மிகும்
உருவம் நிறம் படிமம் ஐந்தும்
அருவம் தெரிவது அரிது அருமை
கரு அளவு கருவிகளின் உறுப்பு.
உறுப்புகள் தரும் திசு திசை
மறுப்பு(தடை) எதுவும் உருப்படி வித்திடும்
சறுக்கி எழுவதும் திசுவின் சுரம்(வழி)
நறுமணம் கமழும் சந்தன மரம்.
**இன்றைய எமது பதிவு:**
**கா எனும் சோலை காக்கும்**
**காவிரி ஆறு வளம் நிறைநாடும்**
**நாவினம் வியந்து பாட்டு பாடும்**
**பாவினப் பட்டினப்பாலை வியல்(அகன்ற) முற்றப்பாக்கம்(கடல்சூழ் நாடு).**
**முற்றப்பாக்கம் வெள்ளை உப்பு படகில்**
**ஏற்றி வல்வாய்(அகன்ற இடம்) புது வருவாய்**
**ஏற்று பல பண்டம் காத்து**
**பற்றிய உயர் கோட்டத்து படப்பை(தோட்டம்)**
**படர் சுற்றிய பொறி களம்**
**மடல் நிரை(திரள்) விரிமலர் தூண்டில்**
**இடம் பொருந்தும் வல் அணங்கு**
**இடவலம் கானல்(கடற்கரைச் சாலை) புணரி(கடல்) மலி(மிகுதி).**
**மலியுடைய பயணப் பகுதி குறியீடு**
**கலி(மகிழ்ச்சி) மணங்கூட்டும் வாலிணர்(வெண் கொத்து) வியன்தெரு**
**ஒலி ஒளிப் பரப்பும் வகையில்**
**பலிசிதறி பாகு(திறன்) தொகுத்த நல்லாசிரியரே .**
15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு – 2 சமூகப்படி நிலை சுமூக படிநிலையாக மலரும் காலம்.
15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு – 2 சமூகப்படி நிலை சுமூக படிநிலையாக மலரும் காலம் –
பழக்கம் வழக்கமாய்
ஆழ அகல விரியும் சமூகம்
குழுவின மனித வளத்தின் ஈர்ப்பு
இழுத்து பிடித்த கூட்டுச் சேர்க்கை
எழும் தொடர் உள்ளத்தின் நிகழ்வு
தழுவி எடுத்துக் கொள்ளும் திறன்.
திறன் அறிவு தொடர் வடிவமைப்புக்கு
பிறகு அன்புடன் கட்டுண்டு கிடந்தோம்
ஆற அமர யோசித்து பழகினோம்
மறப்பதுடன் நினைப்பதும்
மனிதத் தன்மையானது.
தன்மை நிறைவதும் முழுமை பெறுவதும்
நன்மையுடன் சிறந்து துணை புரியும்
பன்மை பண்பாடு வரலாறு சமூகம்
ஆன்றோர் சான்றோர் வாக்கு பதிவு.
பதிவு பெற்ற நுண்ணிய ஆற்றல்
உதியமாகிய பல்லாண்டு கால முறை
நதி நீர் வாழ்நாள் முழுதிறன்
பதிவு பெற்றவை பலரின் பழக்கம்.
பழக்கம் உள்ளவை பலரும் பின்பற்றுபவை
வழக்கம் நம் நிறை செயலாகும்
உழவுத் தொழில் சேமிப்பு பண்டம்
ஆழ அகல விரிந்த சமூகம்.
மூலதன படைப்பு மூலதளத்தின் வழிபாடு.
மூலதன படைப்பு மூலதளத்தின் வழிபாடு.
கால நேரம் ஏற்கும் முதலாய்
கோலம் போட்டு வளரும் தொழிலாய்
ஞாலம் போற்றும் வாழ்வில் நின்றாய்
ஏலமிட்டு நிற்கும் நிறும கொள்கை.
கொள்கை கோட்பாடு
இருப்பு நிலை
நாள் நேரத்தில் தழுவி கொள்ளும்
ஆள் ஆதாரச் சேவை தேவை
உள் உணர்வில் ஒட்டும் மூலதனம்.
மூலதனம் முற்றும் நாடும் தன்மை
மூல தளத்தில் வரலாறு படைக்கும்
பலமாக படரும் காய் கனிகள்
நலமாக வளர்க்கும் பண்பாட்டு முறை.
முறை யாவும் முயற்சியின் வரையறை
அறை காக்கும் தட்பவெப்ப நிலை
உறைவிடம் அறம் பொருள் இன்பம்
இறை நம்பிக்கை இயற்கை வழிபாடு.
ACCOUNTING HISTORY – ACROSTIC SPEECH From Tamil Literature
ஆராய்ந்து பார் ஓராயிரமும் இனியவை!!
ஆராய்ந்துபார்! #ஓராயிரமும்இனியவை !!
ஓராயிரம் ஆண்டும் கடந்து போகும்
ஏராளம் கொண்டதில்
இனிதே காண்
தாராளமாக நாளும் காட்டிடும் அகம்
தோராய குறியீடு வரலாறு வரையறை.
வரையறை கொண்டவை படிப்பினை தொடர்
நிரையசை குறில் நெடில் உயிரொலி
தரையில் வாழும் உயிரினச் சேர்க்கை
விரைவாற்றல் பெற்ற மக்களின் பயணம்.
பயண வரலாறு படிவ படிமலர்ச்சி
ஆய கலைகளின் இலக்கியச் சுடர்
நயம்பட பதிவினில் மொழியியல் இருப்பு
இயற்பியல் வேதியியல் காட்சி கண்ணுக்கு.
கண்ணுக்கு இனியவை கூறலில் உள்ளவை
பெண்ணுக்கு பெருமை சேர்க்கும் வல்லமை
மண்ணுக்கு மண்ணுயிர் வழங்கும் ஆற்றல்
விண்ணுக்குள் வியப்பூட்டும் விந்தை ஓராயிரம்.