கலாமின் கதை
” கலாமின் கதை “
‘க-கற்றல்நிலை தை-தைத்தல் ‘
கல்விக்கு அப்பாற் பட்டது அறிவு.
“என்னால் என்ன முடியும்?”
“கலாமின் கதை ” எனும் தலைப்பில் காதொலி மூலம் பகிர்தல் –
அப்துல் கலாம் அவர்களின் வாழ்நாள் இறுதி உதவியாளர், பதிவு கருத்து.
திரு.சன் பால் சிங் அவர்கள்,
கலாம் உதவியாளராக இருந்த,
தன் வாழ்க்கை பாடத்தினை கற்றுக் கொள்ளும் விதமாக தன் ஆர்வத்தை பகிர்ந்து கொள்ளுகிறார்.
10.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பு (ஆ மு) நுண்ணுயிர் இன்றும் ஓர் எடுத்துக்காட்டு – காவிரி காத்து விரியும் பண் பாடு.
காவிரி காத்து விரியும் –
வாய்க்கால் கால்வாயாகும் .
கால்வாய் விரியும் வாய்க்கால் வழி
வால் பகுதி வரை நீடிக்கும்
பால் திறன் வளம் பெறும்
போல் தனித்து நிற்கும் ஆறுதல்.
ஆறு போகும் வழியே வாழும்
இறுமாப்பு கொள்ளாதே நீர் நிலையே
ஊறும் நீர்மம் வளிமம் உயிரியம்
தாறுமாறான நீர்க்கோலமே வயலும் வாழ்வும்.
வாழ்த்து அட்டை வரலாற்றில் அரசியல்
பாழ் நிலப் பகுதிகளை உள்ளடக்கிய நிலை
ஆழ் துளை கிணறுகள் வெடிப்பு
சூழ் அழுத்தம் பொங்கும் நிலவரம்.
நிலம் நீர்ச்சுற்று அரியதொரு வயல்வெளி
தலக் காற்றில் விளை பொருளாக்கம்
வலம் வரும் நீர் தேக்கம்
நலம் தரும் இடமே வேளாண்மை.
வேளாண்மை வேரான மனித திறன்
தாளாது தளராத பங்களிப்பே செழிப்பு
ஆளாளுக்கு ஒரு பண்பாட்டின் பயணம்
நாளாக தொடரும் சமயச் சடங்குகள்.
சடங்குகள் எல்லை நீங்க வேண்டும்
நடக்கும் நிகழ்வுகளில் சுழலும் புவி
வடக்கு தெற்கு வழித்தட புவித்தட்டு
கடக்கும் கிழக்கு மேற்கு நாடும்.
நாட்டின் குறியீடு மக்களின் மதிப்பீடு
வீட்டில் இருக்கும் விருப்பம் உள்ளதும்
தட்பவெப்ப நிலை மாற்றம் கொண்டதே
நட்பும் உறவும் எல்லை யில்லை.
இல்லை என்பதை இருக்க பொறுப்பிடு
நல்நீர் பாயும் கால்வாய் விரியும் காவிரி
கல்லும் மண்ணும் நீரும் நெருப்பும்
வல்லமை வாழ்க்கை அறத்தின் வாய்ப்பு.
சுழளாதாரம் புவியடி ஐந்தடுக்கு
சுழளாதாரம் – புவியடி ஐந்தடுக்கு
செந்தழல் பொறியியல் அறிந்தோ ராங்கே
வந்த வழியறிய இருந்தோராய் பலகாலம்
உந்தியத் தீப்பொறி நுண்புலப் பட்டறிவில்
செந்தமிழ் வாழும்படியிலும் மூன்று லட்சமாண்டு.
லட்சலட்ச மாண்டும் உயிர்த்து பிழைத்து
உட்புற உடல் சூடுதணிந் தாங்கே
தட்பவெப்ப நிலை யாலே தளிர்
நட்புறவில் வெளிவந்த மெய்யறி வுணர்வாங்கே.
அறிந்து உணர்ந்த ஞானம் கொள்ளியென
யறிந்த பின்பே பிசாசென பறைசாற்றினோரே
மறித்து இறந்தோர் மனித வளம்பெறவே
பிறிதொரு அறிகுறியால் லட்சமாண்டுச் சுழலென்றார்.
சுழலும் சமயம் சார்பும் புவியியல்
கழலுதல் யடியியக்கி காலூன்றதலின் தளம்
இழப்பு புவியடுக்கு அடித்தட்டு நெருப்பு
வழக்கம் போல் பொங்கி எழும்.
எழும் யடித்தட்டு சுற்றுக்குச் சுற்று
வாழும் நாளின் உயிர்த் துடிப்பு
தழுவும் ஒவ்வொரு உள்வட்டச் சுழலுலகம்
நழுவிச் சுழளாதார இருப்பின் ஆதாரமே.
சுழளாதாரம் – சுற்றும் சுடரே!
சுற்றும் சுடரே!
முன் யென பருப்பொருளின் கருமை
பின் தொட ரொளியாய் பேரண்டமாய்
உன்னுள் சுற்றி வர மண்டலமாய்
தன்னுள் சுற்றுகின்ற புவி யியலே.
இயலில் இருக்கை இறைமை கொண்டாய்
பெயருற்று இனிமை காணென வருடும்
வையகச் சுழல் யாவும் ஒருமை
இயற்கை தரும் இனிய ஆற்றலே.
ஆற்றல் மிக கொளென தந்த
மாற்றம் நிற்க நடக்கென தகுதி
அற்றம் பார்த்து அருளும் அறச்சுடரே
மற்றும் சிலப் பல தொகுதியிலே.
தொகுப்புத் தொடரா லெனை கணித்து
வகுத்து விட்டெனை வளர்க்கும் வழிச்சுடரே
பகுதி பக்கக் குறியீட்டிலெனைத் திருத்தி
ஆகும் இந்த பிறவி நிலையிலே.
நிலைப் பெரும் பங்கு உண்டு
தலை முதல் பாதம் வரை
வலைப் பின்னல் நரம்புடன் எனை
மலைக்காது சேவை செய்யென காக்கின்றாய்.
நிலைக்கருவிலி
தலைமை யகத்தறு வாய் நிறுவல்.
பிறப்பு எனும் நிலைக் கருவிலி
திறப்பு எனும் ஒன்றில் பிரிந்து
உறுப்பு என்றொரு பெயரும் பெற்று
தறுவாயில் உள்ளதொரு உருவாய் நிறுவல்.
நிறுவல் நிரல் சிறுத் தோற்றம்
உறுப்பினத் தேர்வி லங்கே தானொரு
கறுப்பு வெள்ளை இளஞ்சிவப்பு நிறம்
உறுப் பெறும் பாங்கே பாதுகாப்பு.
பாதுகாப்பு சேவையில் தேனீப் போல்
அது மற்றொரு உள்ளன்புக் கட்டளையில்
ஏதுவாக இருக்கும் குருதி ஊர்வலத்தில்
அதுவும் நாளும் உறுப்பெற்று சுழலும்.
முப்பது முக்கோடி ஏகமும் இணைய
அப்படியே போகும் வழியும் பகுதியும்
தப்பாமல் தகுதி குழாய் நரம்பியல்
இப்படிக்கு அப்படியே தலைமையகம் செயலுறும்.
உயிரியம் உதிக்கும்
உயிரியம் உதிக்கும்.
கற்றார் படித்துறையில் நின்றார் பெற்றார்
உற்றார் உள்ளார் உழைப்பைக் கொண்டார்
ஆற்றினார் இயம்பினார் தற்காத்தார் உதவினார்
மற்றார் போதும் என்றார் பின்தொடர்ந்தார்.
பின்னர் பின்பற்றும் துறைகள் யாவும்
முன்னர் செயலால் ஆற்றுபவை யன்றோ!
இன்னும் கோடி மக்கள் வறியவராய்
முன்னர் பெற்றவற்றை ஆற்றுகின்றார் பலவாறு.
பலப்பல முறைப்படுத்தும் பேராற்றல் மிக்கதொரு
சிலவற்றில் சிக்கி தவிக்கும் நிலையினிலே
நலமாக இருக்கும் நிலை அறிவோம்
பலமாக உள்ள அது இதமாகும்.
இதழே சுவையை உணர வேண்டும்
ஆதலால் அனைத்தும் இன்பமுற நடத்திவிடு
உதவிட தரமே ஊன்றுகோலென உதவிடும்
அதனதன் ஆக்கத் தருணமே உயிரியமாம்.
தாய்மொழி நாள் பாடல்
#தாய்மொழி_நாள்_பதிவு_பாடல்**
தாய்மொழி நாள் பலரும் நல்கும்
உய்ய உயர உயிரிய தொடரிணைப்பு
ஆய்ந்து அறிந்த மெய் உறுப்பு
வாயீந்து ஒலிக்கும் ஒலி மரபு.**
மரபணு படிமாற்றம் தம்மிதழுக்கு உருமாறும்
இரண்டடி மூன்றடி முறையாக்கச் சொல்
வரலாறு படித்துறை படிமலர்ச்சி உருபன்
நரம்பசைவுப் பண் பாடும் பண்பாடு
பண்பாடும் பயணத் தொலைவு இருக்கை
மண்ணியக்க செயல் பாட்டில் அடங்கும்
எண்ணும் குறியீடு மொழியில் சொல்
கண்ணும் கருத்தும் நிறைவாக தாயனை.
தாயனை(DNA) ஆறனை(RNA) உயிரிய வாழ்வு
இயற்கை தரும் தீர்வு நீர்ப்பசை
தயவின் தரவு வரலாற்று முதல்படி
பயன் தரும் நலமே தாயகம்.