அண்டம் அகிலம் அகராதி அறிந்தோம்
உண்டு வாழும் உயிர் துடிப்பு
பண்டம் மாற்றும் சட்டம் மருந்து
கொண்டு கொடுத்து உதவுவதே வாழ்க்கை.
அகண்ட நிலமே விரிந்த கடலே
உகந்த நாள் நேரம் கணிப்பு
ஆக மொத்த பரப்பளவு புவியில்
ஏக மனதாக ஏற்றுக் கொள்.
இம்மியும் அசையாது என்றதோர் நிலை
அம்மியில் அரைக்கும் ஆற்றல் பெற்ற
நம் தளம் கும்மி ஆட்டபாட்டம்
ஆம் அகவை நிறைவில் மகிழ்வு.
வண்ண நிலவே வட்டமிடும் நிலவே
எண்ணக் கடல் சுற்றும் அளவே.
விண்ணைத் தாண்டி வருவாயா எம்
மண்ணில் விளையாடு; உம் திறனையாற்று.
நீர் மலைகள் காடுகள் நிலைப்பு
அரசும் அனைத்து ரகச் சுற்றுச்சூழலே
வர்ணம் பூசி வண்ணச் செயலும்
சொர்க்கம் நரகம் சொல்லும் சமயமோ!
நின்று நிலைத்த புவி ஈர்ப்பு
கன்று ஈனும் திறன் யாவும்
இன்று உயிர் வாழும் மேல்பரப்பும்
என்றும் புவியடியும் நீருடன் சுழலே.