சொல் தமிழ்! சொல் கோடி – காதொலி

சொல் தமிழ் சொல் கோடி

வானாகி மண்ணாகி புல்லாகி மரமாக
        ஊனாக உயிராக நேசித்த தம்மிதழை
தானாக முன்வந்து தொடர்புக் கொண்டார்
     தானே சிறப்பு கண்டோர்; பெற்றார்.

புதுவை சுப்புரத்தினம் சுப்பையாவின் பாவினம்
     ஏதுவாய் கவிதையில் பதிவில் பாட்டைமைத்து
தூது விடு தத்தை தமிழ்
      காது குளிர கேட்கும் நற்றமிழ்.

நற்றமிழ் வல்லமை நெஞ்சில் நிற்கும்
     பற்றும் மொழி சொல்லும் அளவு
ஏற்றத் தமிழ் அறிந்து கொள்வகை
      ஏற்றுக் கொள்; தொடர் தமிழறிவு.

தமிழறிவு உள்ளத்தார்; வெளிநாட்டிலும் தொடர்ந்தார்
       தமிழ்ச் சொல்லில் பயிலக இயக்கம்
தமிழ் வரலாற்று நிலமெங்கும் பரவட்டும்
தமிழ்நாடுத் தன்னகத்து மொழி தானெங்கே?

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA