பேரண்ட பேரதிர்வு பேரியக்க ஆற்றல்
கண்ட விடத்து இயல்பில் ஞானமும்
விண்ணில் பாயும் செயற்கை கோளும்
மண்ணில் ஒளிரும் விஞ்ஞான வித்தை.
கண்டம் ஒன்றாய் சுழன்றப் புவி
துண்டுத் துண்டாய் பிரிந்த பிரிவு
உண்டு உறைவிடத்து பயின்ற பெயரில்
நண்டும் கூடும் நகர்ந்து செல்லும்!
புவியடிச் சறுக்கலில் நசுங்கி மக்கள்
தவிக்கும் தகர்ப்பில் மாடி யிடுக்கு
ஓவிய வரையறை நிலைக்க வரைபடம்
தாவி யடித்தட்டும் அகண்ட மானது!
ஞானக் கதிரும் விட்டுச் சென்றது
மோன மாய் மாயவலை யதிகாரம்
ஊனமாய் ஆக்கிய வேகச் சுழலங்கே
வான வேடிக்கை யகற்று இயற்கையே!